HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

என்றும் நான் மகிழ்வேன்

     

   மதிவாணன் உற்சாகமாயிருந்தான். அவனடைய உற்சாகத்திற்கு காரணம் லலிதா. அவளை சந்திக்கத்தான் இப்போது அவன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

  முகத்திற்குப் பவுடர் போட்டான். சிசிலடித்தபடி அட்ரஸை படித்துப பார்த்தான்.

   லிதா, 113/5ஏ காரைக்கா முரி ரோடு, எர்ணாகுளம்.

     ஷு மாட்டுமபோது சொல்லாமல் கொள்ளாமல் அவள் முன்பு போய் நின்றால் அவளுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான்.

     அதிர்வாளா... வெட்கப்படுவாளா... கோபிப்பாளா...? இல்லை வீடு எப்படி கண்டுபிடித்தாய் என்று திகைப்பாளா...?

     பஸ் ஸ்டாப்பில் இங்கேதானே அவளை முதன்முதலில் சந்தித்தோம் என்று நினைத்தான்.

     அவள் இதோ இந்த மூலையில் ஹாண்ட் பேகுடட்ன நின்றிருந்தாள். கூட்டம் நிறைந்திருந்தது. லேசாய் தூறல்.

     நான் அவளருகில், தவறுதலாய் அவள் காலை மிதித்துவிட ஆ... என்றாள்.

     ஸாரி என்றேன்.

     அவளும் ஸாரி.

     நான்தானே மிதித்தேன்... நீங்க எதுக்காக ஸாரி சொல்லணும்...?

     என் ஸாரி என்று சிரித்தாள். பெண்களின் சிரிப்பு பொல்லாதது. ஆண்களை ஓரே அமுக்காய் அமுக்குவது. அன்று அந்த ஒரு வாத்தையில் நம்மை என்னடி மயக்கிவிட்டாள்....?

     மதி அதன்பிறகு பலமுறை லிதாவை பஸ்ஸ்டாப்பில் பார்த்திருக்கிறான். பல தடனை எதிர்பார்த்து ஏமாந்துமிருக்கிறான்.

     அவள் யார் எங்கிருந்து வருகிறாள் என்பதெல்லாம் தெரியாது. பெய்ா மட்டும லலிதா என்று தெரியும்.

     அவன் ஒரு ஆங்கில தினசரியில் நிருபன். வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி ஒரு ஃபிச்சர் தயாரிக்கும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். அதற்காகப் படமும் பேட்டியும் எடுக்க ஆரம்பித்திருந்தான்.

     யார் யாரையோ பேட்டி எடுக்கிறோமே. ஏன் என் லலிதாவையும் இதில் சேர்க்கக்கூடாது என்று தோன்றியது.

     இர்ண்டு வாரம் முன்பு அவளிடம் கேட்டபோது வேண்டவே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள்! என்று மறுத்தாள்.

     ஏன் லலிதா...?

     எதற்கு வம்பு - வேண்டாம்!

     இதில் வம்பு என்ன இருக்கிறது... உன் படம் கூட பேப்பரில் வரப்போகிறது!

     அதனால்தான் வேண்டாமென்கிறேன்.

     அவரவர்கள் பத்திரிகையில் தங்கள் படம் வராதா என அலைகிறார்கள். என்னடாவென்றால்...

      நான் அலையவில்லை. ஆளைவிடுங்கள்!

      போகட்டும். பேட்டி வேண்டாம். என்னை உன் வீட்டுக்கூடாதா.?

      பஸ் வருதுங்க எனுற நழுவப் பார்த்தாள்.

      ஆது உங்க பஸ் இல்லை. சரி வீட்டிற்கு வேண்டாம். அட்லீஸ்ட் ஆபீஸிற்காவது அழைக்கக் கூடாதா..?

     ம்கூம். என்று சிரித்தாள். மழுப்பல். கள்ளி!

       அதன்பிறகு அவளை அவன் பஸ் ஸ்டாப்பில் பார்க்கவில்லை. அவள் என்ன ஆனாள்.. எங்கேப் போனாள்? என்கிற யோசனையிலிருக்கும் போது ஒருநாள் பத்திரிகை ஆபீஸிற்குப் போன் பண்ணினாள்.

         மதி. இன்னைக்கு ஜோஸ் ஜங்ஷனில் சந்திப்போமா...?

     எப்போ...?

     சாயந்தரம் ஐந்து மணி.

    ஐந்து மணிக்கு அவன் சரியாய் ஆஜராகியிருந்தான். பார்த்தாஸ் நிழலில் ஒதுங்கியிருக்க அவள் வந்தாள்.

     அவள் முகத்தில் வாட்டம். அவளக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது. நம்மிடம் அவற்றை பகிர்ந்து கொள்ளதான் வரச்சொன்னாளோ...?

     எதுவாயிருந்தாலும் சரி, அவளாய் சொல்லட்டும என்று பேசாமலிருந்தான். ஆனால், அவள் வாயே திறக்கவில்லை.

     அப்போது யாரோ ஒரு இளைஞன் நல்ல சிகப்பில் வாட்டசாட்டமாயிருந்தான் ஹாய்! என்று கையாட்டிவிட்டு நகர...

     அவள் முகம் இருண்டு போனது.

      யார் அது லிதா..?

     அவள் பதில் சொல்லவில்லை.

     உன்னை அநிமுகமிருப்பதால்தானே ஹாய் என்றான்... அவனுக்கு கதிலுக்கு நீ ஒரு புன்னகையாவது பூத்திருக்கலாம். இப்படி முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டிருக்க வேட்ம்!

     அந்தாள் மோசம்!

     என்ன செஞ்சான். ஏன் மோசம்?

     அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. ஆள் மாறிப்போய் ஹாய் சொல்லிட்டான்னு தோணுது. சரி, வாங்க போவோம்!

     அவளின் போக்கு அவனுக்கு புதிராய் இருந்தது. அதற்குப் பிறகும் கூட அவள் புதிர்மேல் புதிராய் நடந்துகொண்டாள்.

     பஸ் ஸ்டாப்பில் அவள் தென்படவே இல்லை. வேலையை விட்டு விட்டு போய்விட்டாளோ என்று கூட நினைத்தான்.

     அவள் யார். பின்னனி என்ன என்பது தெரியாமலேயே அவனுக்கு அவள் மேல் ஒரு பற்றுதல் வந்திருந்தது.

     அவள் திடீரென போன் பண்ணுவாள். சந்திக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவிப்பாள். போவான்.

     அவள் தப்பித் தவறிக்கூட தன் விலாசத்தை சொன்னதில்லை. அவனுடன் சினிமாவிற்கு வந்திருக்கிறாள். போர்ட் கொச்சி பீச்சிற்கு போயிருக்கிறார்கள்.

     எங்கு போனாலும அவளிடம் ஃப்ரீனெஸ் இருக்காது. கண்களில் எப்போதும் ஒரு மிரட்சி. குனிந்த தலை நிமிரவே மாட்டாள்.

     அவள் யாருக்போ பயப்படுகிறாள். யாரையோ தவிர்க்கப் பார்க்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் அது என்ன என்று புரிந்துக் கொள்ள முடீயவில்லை. அவளம் சொல்ல தயாராயில்லை.

     இரண்டு நாள் முன்பு-

     ராதா நிலாஸில் சாப்பிட்டு முடித்து அவள் டாய்லெட் போன சமயத்தில் அவளுடைய ஹாண்ட் பேகில் இன்லெண்ட் ஒன்று இருப்பதை கவனித்தான்.

     அது அவளுக்கு வந்த லலெட்டராய் இருக்க வேண்டும்.

     இது அவளுக்கு வந்திருககும் பட்சத்தில் அவள் விலாசம் இருக்க வேண்டுமே...!

     இருந்தது. குறித்துக் கொண்டான்.

     இப்போது அந்த விலாசத்திற்குதான் போய்க் கொண்டிருக்கிறான்

     வீட்டை கண்டுபிடிக்க முடீயாது என்று நினைத்தாய் லலிதா? இதோ வருகிறன். வந்து உன்னை திகைக்க வைக்கிறேன் பார்! இந்த மதியை யார் என்று நினைத்தாய்...?

     காரைக்காமுரி எனப்பட்ட அந்த பாரதியார் சாலையில் நம்பரை தேடி அலுதது, எதிர்ப்பட்ட பெண்மணியிடம், லலிதா வீடு ஏதான்னு அறியாமோ....?

     ஏது லலிதா..? என்று எதிர்கேள்வி கேட்டாள்.

     ஏது லலிதா என்று சொல்வது என யோசிக்கையில் ஓ! அ லலிதாவானோ, கொறச்சிக்கூட நடந்தால் மதி!

     கொஞ்சம் தூரம் நடந்து வேறொருவரை விசாரிக்க, தோ அந்த பூவரசமரத்து வீடு! என்றார்.

     அந்த பூவரசமரத்து வீடு அத்தனை பெரியது ஒன்றுமில்லை. சுற்றிலும் பந்தாவாய் காம்பவுண்ட் இருந்தது. காம்பவுண்டின் மேல் கண்ணாடிச் சிதறல்கள்.

     கேட்டை திறந்ததும் முதலில் வயதான மாது ஒருத்தி தென்பட்டாள். லலிதாவின் அம்மாவாய் இருக்குமோ....? இல்லை. பாட்டி!

     லலிதாவை பார்க்கணு என்றதும், லலிதாவோட ஆராணு நீங்கள்..?

     ஞான் ஒரு ரிலேடிவானு.

     இவிட இருக்கி.

     அவள் காட்டின ஸ்டுல் சற்று பழுதுபட்டிருந்தது. பயந்து பயந்து அமர்ந்தான்.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles