HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

உணர்வுகள்

           

    மனிதர்கள் உயிரில்லாத செடிகளையும் பூக்களையும் மதிக்கிறார்கள். ஆனால் உயிருள்ள பிராணிகளை மதிக்கத் தெரியவில்லை. செடிகள் எதற்கு? அழகுக்காகத்தானே! வீட்டில் கொஞ்சம் அழகு குறைந்தால் தான் என்னவாம்! உயிருள்ள நாயைக் காட்டிலும் செடியா பெரிசு? இங்கே உயிருக்கு விலையில்லை.

    பிராணிகளைக் காப்போம், வதைகளைத் தடுப்போம் என சுவருக்கு சுவர் எபதி வைத்திருக்கிறார்களே... அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எல்ல்மே ஏட்டுச சுரைக்காய் தானா..?

  ராஜாமணி அத்தோடு திருந்திவிடும் என்று தான் முதது நினைத்தான். ஆனால் அது திருந்துவதாகவே தெரியவில்லை. மறுபடி மறுபடி பூச்செடிகளை மிதித்து துவட்டவே செய்தது. வீட்டில் ஓடிப் போய் ஆசிங்கம் பண்ணி வைத்தது. முதலாளியம்மால் கடைசியில் இந்தச் சனியன் இங்கே இருக்கவே கூடாது! என்று உத்தரவு பிறப்பித்துவிட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

     ராஜாமணி அழைத்து போய் ஊரின் ஒதுக்கில் குடிசை ஒன்றில் கட்டிப் போட வேண்டியதாயிற்று. தினம் காலையிலும மாலையிலும் சோறு எடுத்துப் போய் அதற்கு போட்டுவிட்டு, அதனுடன் வாக் போய்விட்டு முத்து திரும்புவான்.

     அவன் ராஜாமணிக்கு வேண்டித் தேர்ந்தெடுத்த இடம் சரியில்லையோ இல்லை நேரம் சரியில்லையோ தெரியவில்லை டவுனில் கட்சி மாநாடு நடத்த வேண்டி மந்திரி அங்கு வந்து காம்ப் அடித்திருந்தார்.

     அவரின் ரெஸ்ட் ஹவுஸ் அந்தக் குடிசைக்கு மிகச் சமீபத்தில்தான் இருந்தது. ஊரில் நிதி வசூல் செய்து (சுரண்டி) மாநாட்டைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவர் தலையில்.

     அதற்கு வேண்டி ராத்திரி பகலாய் அலைந்துவிட்டு கிடைக்கிற சொற்ப நேரத்தில் தூங்காமல் என்று வந்தால்

     அருகிலேயே ஆடடுமந்தை! அங்கே எப்போதும் ஆடுகளின் அணிவகுப்பு நடக்கும். ஆடுகள் விலை பேசப்பட்டு அங்கேயே அப்போதே கசாப்பு செய்யப்படும்.

     விற்பனை போக எஞ்சிய எலும்புத் துண்டுகளும், மாமிசமும் குப்பையாய் தூக்கி ஏறியப்பட அங்கே தெரு நாய்கள் எப்போதும் உரிமைப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும்.

     அவற்றின் குரைப்பும் இரைச்சலும் மந்திரியைக் கோபப்பட வைத்தன. தூங்கமுடியாத ஆவேசம் நாய்களின் மேல் திரும்பிற்று. உடனே அவர் பி.ஏவை அழைத்து இங்கே ஏன் இரைச்சல்..? என்றார்.

     பக்கத்துல கசாப்புச் சந்தை இருக்கு சார். அங்கே நாய்கள்!

     கசாப்பு சந்தை! நாய்கள்! சை! மனுசனைத் தூங்கவிடாத பொறுக்கிகள்! என்று எரிந்து விழுந்தார்.

     உடனே கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி லைசென்சில்லாத நாய்களையெல்லாம் பிடிச்சு அப்புறப்படுத்தச் சொல்லு! நியூசென்ஸ்!

     சரிங்கய்ய. இப்பவே சொல்லிர்றேன்!

     பி.ஏ உடனே கார்பரேஷனுக்கு உத்தரவிட, கார்ப்பரேஷன் வேன்கள் டவுன் முழுக்கப் புயலாய்ப் பறக்க ஆரம்பித்தன.

     அன்று மாலை வழக்கம்போல்

     வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, முதலாளியம்மாள் தனக்கு வேண்டி கொடுத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு முத்து குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

     அன்று சம்பள தினம். பாக்கெட்டில் சுளையாய் நூறு ரூபாய் இருந்தது. ராஜாமணி பாவம்! நாள் முழுக்கக் கட்டி கிடக்கிறது. பகலில் பட்டினியாய் கிடக்கிறது. சம்பள தினத்தில் மட்டுமாவது அதற்கு மட்டன் வாங்கிப் போடுவோம் என்று முனியாண்டிவிலாசில் நுழைந்தான்.

     மட்டனும், சிக்கன் பிரியாணியும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். தென்றல் காற்று ரம்மியமாய் அடிக்க. அதில் பிரியாணி மணத்தது. விசிலடித்துக கொண்டு, ராஜாமணி! என்று செல்லமாய் அழைத்தப்படி குடிசைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி.

     அங்கே ராஜாமணியைக் காணவில்லை. வெறும் சங்கிலிதான் கட்டபட்டது அப்படியே கிடந்தது.

     ராஜாமணி.. ராஜாமணி! என்று சுற்றுமுற்றும் கூவிப் பார்த்தான். தேடிப்பார்த்தான் தென்படவில்லை. ராஜாமணி, ராஜாமணி...என்னைவிட்டு போயிட்டியா நீ.. ! எப்படி உன்னால் போக முடிந்தது..? என் மேலே கோபமா? கட்டி போட்டுட்டேன்னு கோவிச்சுகிட்டுதான் போயிட்டியா நீ.. ராஜாமணி நீயில்லாம நான் எப்படி இருப்பேன்? உனக்கு வேண்டித்தானே வீட்ட விட்டே வந்தேன்? என் படிப்பையும் விட்டேன்! என் சொகுசையும் விட்டுக் கொடுத்து உனக்கு உனக்கென்று உனக்காகவே வாழ்கின்றேனே... ! என்று சங்கிலியை அவிழ்த்தான்.

     ரோடோரத்தின் புதரில் கார்பரேஷன்காரர்களால் அடிபட்டு மூளை சிதறி ராஜாமணி இறந்து கிடக்க.

     முத்து அதைக் கவனிக்காமல் ராஜாமணி! ராஜாமணி! என்று புலம்பிக் கொண்டு சங்கிலியை பிடித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles