HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

சேவனம்

               

  இந்த முறை நீங்க ஊருக்கு வரும் போது ஒரு முடிவு பண்ணியாகணும். இல்லேன்னா... இல்லேன்னா எங்களை நீங்க மறந்துர வேண்டியதுதான். ஆமா செல்லிபுட்டேன். நானும் பிள்ளைகளும் மருந்துகுடிச்சுச் செத்துப் போயிருவோம்!

     விமலா சொல்லிவிட்டுப் போனைச் சட்டென வைத்துவிட, நான் அப்படியே பிரமைபிடித்து அமர்ந்திருந்தேன். வரவர போனைப் பார்த்தாலே அலர்ஜி, வெறுப்பு. கடல் கடந்து வந்து. குடும்பத்தை பிரிந்து, சந்தோஷத்தை இழந்து வேலை பார்க்கிறோம். வெயில், குளிரைப் பொருட்படுத்தாமல் சம்பாதித்து அனுப்புகிறோம்.

     பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று புதுவீடு, டெலிபோன் மற்றும் சகல வசதிகளும் செய்துக் கொடுத்தாலும் நிம்மதியில்லை. அவர்களிடம் திருப்தியுமில்லை.

     குவைத்தில் காய்ந்து போய் கிடக்கிறேன், நாலு வார்த்தை அன்பாய் ஆதரவாய்ப் பேசுவோம் என்று நினைக்கிறாளா?

     எப்போதும் புகார், புகைச்சல்! பெற்றோர்கள் மேல் குற்றம் - குறை! போன் பண்ணும் போதெல்லாம் விசா எடுத்தாச்சா.. எப்போ எங்களை அங்கே அழைக்கப் போறீங்க..? என்கிற பல்லவி புலம்பல்.

     எனக்கு வெறுப்பாய் வந்தது. குடும்பத்தை விட்டுவிட்டு நான் மட்டும் இங்கே என்ன சந்தோஷமாகவா இருக்கிறேன்? நான் கஷ்டப்பட்டாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேமிக்கிறேன்.

     குடும்பத்தை இங்கு அழைத்தால் சேமிப்புக் கரையும் என்பது ஒருபுறம் இருந்தாலும, வயதான அப்பா-அம்மாவைப் பார்த்துக கொள்ள ஆள் இல்லாமல் போய்விடுமே என்கிற கவலை அழுத்திற்று.

     விமலா அதை ஏன் புரிந்து கொள்ளமாட்டேனென்கிறாள்! கடைசிகாலத்தில் எங்களை விட்டால் அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்களாம்!

     அடுத்த மாதம் விடுமுறை.

     மனைவி கெடுவைத்துவிட்டாள். பொடா! இனி தவர்க்க முடியும் என்று தோன்றவில்லை. விசா எடுத்தேன். சின்னதாய் வீடு. பிள்ளைகளுக்கு இந்தியப் பள்ளிகளில் அட்மிஷன்.

     ஊருக்கப் போகிறோம் என்றால் ஆறுமாதம் முன்பிருந்தே சந்தோஷம் பிறந்துவிடும். உறவு நட்புகளெல்லாம் பார்த்துப பார்த்து பொருட்கள் வாங்கிச் சேகரித்து எப்போதுமே அதிகபடி லக்கெஜ் வந்துவிடும். அவற்றை ஊரில் கொடுத்து அவர்களின் முகமலர்ச்சியைப் பார்க்கும்போது பாலைவனத்தில் படும் கஷ்டமெல்லாம் மறந்துப் போகும்.

     எதுக்கு அனாவசியமாய்... இதெல்லாம்? என்று பொய்யாய்க் கடிந்து கொண்டு நெக்லஸை விமலா போட்டு இது நல்லாருக்கா? என்று அழகு காட்டுவது ஒரு சுகம். பிள்ளைகளும் இது எங்கப்பா வாங்கி வந்த டிரஸ், ஷு, கம்மல், வளையல் என்று ஊர் முழுக்க வலம் வருவது பெருமையாயிருக்கும்.

     விடுமுறை நெருங்க நெருங்க புல்லரிப்பு, தூக்கம் வராது. மிதப்பு!

     ஏர்போர்ட்டில் போய் இறங்கினதும் வாசல் தெளித்துக கொண்டு அவர்களின் ஏக்க முகத்தைப் பார்த்ததுமே உடலில் ஜிவ். மனைவியை பொது இடத்தில் முடியாது என்பதால் பிள்ளைகளை வாரி அணைத்துப் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்து..

     அதெல்லாம் ஒரு அனுபவம்.

     இப்போது அந்த மாதிரி எதுவுமே தோன்றவில்லை. ஊருக்குப் போக வேண்டும்மா என்றிருந்தது. போய் இறங்கியவுடனேயே ஏன் வந்தோம் என்று நினைக்கும்படி சண்டை பிடிக்கப் போகிறாள்.

     அம்மா ஒரு பக்கம்இ மனைவி மறுபக்கம் வாதிட என்பாடு திண்டாட்டம். நான் யாரைக் கடிந்துக் கொள்ள முடியும்? எந்தப்பக்கம் பேசினாலும பிரச்னை. உலகத்திலிருக்கிற மாமியார் மருமகள்கள் திருந்தவே மாட்டார்களா..?

     சொந்த ஊர்.

     ஏர்போர்ட்டிலிருந்து வீடு போய்ச் சேரும் வரையிலும் காரில் அமைதி அப்பா-அம்மா- மனைவி எல்லோரும இருந்தும் கூட யாரும வாய் திறக்கவில்லை.

     வாய் திறக்காதவரை வசதி. ஆனால் எல்லோரும் பெரிய தாக்குதலுக்குத் தயாராகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. வீட்டிலும கூட கலகலப்பில்லை.

     அப்பா... ! என்று பிள்ளைகள் ஓடிவந்து பெட்டியை பிடுங்க, போங்கடி உள்ளே! போய்ப் படிங்க! என்று விமலா விரட்டியடித்தாள். அவர்களின் முகம் சுருங்கி ஏமாற்றத்துடன் ஏறிட எனக்கு சங்கடமாயிற்று.

     பிள்ளைகளை ஏன் திட்டுகீறாய்.

     ஆமா பிள்ளைன்னதும் பொத்துகிட்டுவரது! இங்கே நான் என்றால் இளப்பம், என்னை யார் திட்டினாலும அதுபத்திக் கவலையில்லை.

     ஏய் என்ன இது? வந்ததும் வராததுமாய்?

     விமலா வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொள்ள, அப்பாவும்! அம்மாவும் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.

     கால் பதித்தவுடனேயே நரகம் ஆரம்பம்!

     ராத்திரி பிள்ளைகளைத் தூங்க வைத்துவீட்டு வேண்டுமென்றே தள்ளி அதுவும் திரும்பி படுத்துக கொண்ட விமலாவைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இவள் இப்படித்தான்! எதையாவது சாதிக்க வேண்டும உசுப்பிவிட வேண்டும என்றால் வேலை நிறுத்தம்! மௌனம்.

     சில நாட்களில் நல்லதாப் போச்சு என்று நானும் திருப்பிக் கொள்வேன். நான் வருவேன் அணைப்பேன் ஆறுதல் சொல்வேன் எனக் காத்திருந்து அது நடக்காமல் போனால் உடன் புசுபுசுவென அழுகை பொங்குவாள்.

     அப்படியும் பலனில்லையென்றால் எழுந்து ஹாலுககுப் போய் விடுவாள் பாவம் விமலா! எனக்கிருக்கிற ஏக்கமும் பசியும் பாசமும் இவளுக்கும் இருக்கும்தானே!

     மெல்ல அரவணைத்து, ஏய்... எல்லோரும் இப்படி முரண்டு பண்ணினா எப்படி..? இந்த முஞ்சியைப் பார்க்கவ நான் வந்தேன்..ம்..?

     விசா எடுத்தாச்சா?

     இப்போ என்ன அவசரம்?

     ஆமாம். எனக்கு அவசரம்தான். முடியலை. நானும் மனுஷிதானே மெஷின் இல்லையே! எனக்கும் ஆசாபாசங்கள் உணர்வுகள் இருக்கு.   

     யாரு இல்லேன்னாங்களாம்!

     என்னனவோ கஷ்டப்படறேன் கஷ்டப்படறேன்னு வசம் பேசறீங்களே, என் கஷ்டம் உங்களுக்.குத் தெரியுமா? இங்கே எது செஞ்சாலும் குத்தம். விடியற்காலை நாலரைக்கு எழுந்தால் தண்ணீர் பிடித்து, வீடு, வாசல் தெளித்து வெந்நீர் வச்சு பிள்ளைகளை எழுபிபி படிக்கவச்சு குளிக்க வச்சு டிபன் செஞ்ச கொடுத்து ஒய்வில்லாம மதியம் இரவு வரை ஒழிவில்லை. மாய்ஞ்சு மாய்ஞ்சு கவனிச்சுக்கிட்டாக்கூட உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருப்தி கிடையாது. குத்தம் குறை! இடித்தல்! சபித்தல்! புலம்பல்!

     சும்மா பொத்தாம் பொதுவில் சொன்னா எப்படி... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா தானே அவங்களைக் கண்டிக்க முடியும்?

     ஒரு ஆயிரம் சொல்லலாம். குத்தம் சொல்றது குத்திக்காட்டறது என் நோக்கமில்லை. ஆனாலும் கூட சகிச்சுக்கிறதுக்கும் ஒரு எல்லையிருக்கு. கட்டில்ல படுததிருக்கும் அப்பா எழுந்து பாத்ரூம் போகக்கூடாது...? அப்படியே வாசல்லேயே மூத்திரம் போறார். இது மாதிரி எத்தனையோ!

     போகட்டும விடுடி! பெரியவர்தானே! வயசானவங்களுக்குச் செய்கிற வேசனம் பாக்கியம்டி. என்னை பார்த்து பார்த்து வளத்தவர். படிக்க வச்சு ஆளாக்கினவர்!

     அதுக்காகத்தான் இத்தனை நாள் பொறுத்துக்கிட்டேன். வேலைக்கிடையிலே டிபன் ரெடி பண்ண அஞ்சு நிமிஷம் லேட்டாச்சுன்னா அம்மா உடனே கோவிச்சுக்கிட்டு தெருவுக்குப் போயிடறாங்க. மருமக சோறு போடலே சாப்பாடு போடுன்னு எதிர்த்த வீட்டுக்குப் போய் புகார் பண்றாங்க நம்மைப்பத்டித அவங்க என்ன நினைப்பாங்க? இதெல்லாம் எனக்குத் தேவையா?

     ஒண்டியா அல்லாடறாளேன்னு ஒத்தாசை பண்ணாட்டியும் பரவாயில்லை புரளி பேசாமாவது இருக்கலாமில்லே?

     விமலாவின் வார்த்தைகளில் இருந்த நியாயம் எனக்குப் பிரிந்தது. அவளது உழைப்பை ஆதமார்த்தத்தை துரும்பாகிப் போன அவளது சரிரமே சாட்சி சொல்லிற்று. என்ன செய்வது எப்படி இந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பதென்று எனக்கு புரியவில்லை.

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles