HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

வானத்தை தொட்டவன்

வியாபாரிகள்

          

     ஐ ஆம் லிட்டில் பிட் பிஸி! தவிர, எனக்கு அப்பாற்பட்ட கேஸ் இது! தொடக்கூடாது!

     டாக்டர்! மனிதாபிமான அடிப்படையிலே...

     மனிதாபிமானமா... ஹாஹ்ஹா. நால்லாச் சொன்னீங்க! மனிதாபிமானம் பார்த்தால் நாங்க உயிரைவிட வேண்டியதுதான்! சம்பளம் ரெய்ஸ் பண்ணி மூணு வருஷமாச்சு. பிரமோஷன் இல்லை. ஆனா, இருபத்து நாலு மணி நேரமும் உழைக்கணும். கேட்டால், இஷ்டமானால் இரு இல்லாட்டி போ! சீனியருக்கு இங்கே மதிப்பில்லை. மரியாதையில்லை.

     உங்களுக்கு ஆயிரம் பிரச்னையிருக்கலாம். அவற்றை எங்க மேலதான் தீர்த்துக்கணுமா...? அவனுக்கு எரிச்சலாய் வந்தது. கவர்ன்மென்ட் ஆஸபத்திரிக்குப் போனால் கவனிப்பு இருக்காதுன்னுதானே இங்கே கொண்டு வந்தோம். இங்கேயும் இப்படியா...?

     அதுக்காக? நாங்க என்ன பண்ண முடியும்? என் வார்டை மட்டும் தான் நான் பார்க்கணும்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

     அசோக், ஐயோ... எனக்கு முடியலேடாட என்று கண்களைப் பிடித்துக் கொண்டு அரற்றினான். தேம்பினான். அவனது கண்கள் வெம்பிப் போயிருந்தன.

     அசோக்.. கசக்காதடா.. கசக்காதே!

      வலி உயிர் போகுதடா.. மூச்சு முட்டுது. எனட்ககு சுகர் இருக்கு. பி.பி. கம்ப்ளெயிண்ட் இருக்கு. சீக்கிரம் கவனிக்கலேன்னா...

     குலோத்துங்கனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. இவர்களெல்லாம் டாக்டர்களா இல்லை எமன்களா...?

     அதற்குள் டூட்டி டாக்டரே வந்தார். என்னாச்சு தம்பி..? என்றார் முகம் கழுவியபடி பேச்சில் சிகரெட் வாசம் இருந்தது.

     ஆக்ஸிட் பட்டிருச்சு சார்.

     ஏன் ஆக்ஸிட் கிட்டே போகணும்?

     அது வந்து.. சாம்பிள் டெஸ்ட் பண்ணிட்டிருந்தப்பபோ...

     கேர்புல்லா இருக்கிறதில்லையா? அப்புறம் கண்ணுபோச்சு, காது போச்சுன்னு ஓடிவரது என்று அவனது கண்களைப் பிடித்து அழுத்திப் பார்க்க, அசோக் அம்மா என்று அலறினான்.

     ஏம்ப்பா கத்தறே..? இப்போ என்ன பண்ணினேன்? சும்மா தொட்டதுக்கே இத்தனை ஆர்ப்பாட்டமா...?

     வலி தாங்கலே சார்.

     ஆக்ஸிட் பட்டா வலிக்கத்தான் செய்யும். அதுக்கு யார் என்ன பண்ண முடீயும்? ஸிஸ்டர்! இவருக்கு பைல் போடு!

     டாக்டர்! ப்ளீஸ்.. டிலே பண்ணாம டிரீட்மெண்டை ஆரம்பிங்க!

     இருப்பா! அவசரப்பட்டா முடீயுமா? பார்மாலிடிஸெல்லாம் இருக்கில்லே! சரியா ரிஜிஸ்டர் பண்ணாம கைவச்சு, நாளைக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சுன்னா யார் பதில் சொற்து?

     அந்த நர்ஸ் சாவகாசமாய் வெளியே போய் பதினைந்து நிமிடம் கழித்து பைலுடன் வந்து உங்க பெயரென்ன... ஊரேன்ன.. அப்பா பெரேன்ன. வயசென்ன... என்று வெறுப்பேற்றினாள்.

     கையெழுத்துப போடுங்க!

     ஏன் சிஸ்டர்? இப்போ இதுவா முக்கியம். பேஷண்ட்? துவண்டு போய்க் கிடக்கிறான். இந்த நேரத்துல...

     மிஸ்டர்! என்ன டோன் உயருது.. எந்த நேரத்துல எதைச் செய்யனும்னு எங்களுக்குத் தெரியும். நீங்க முதல்ல வெளியே போங்க!

     அதுகில்லை சிஸ்டர். சிகிச்சை...

     சிகிச்சை! நாங்க பண்ணமுடியாது. அதுக்கு ஐ ஸ்பெஷலிஸ்ட் வரணும். !

     எப்போ வருவார்...?

     போன் பண்ணியிருக்கு, வந்திருவார். அதுக்குள்ளே பார்மாலிடீஸை முடிக்க அனுமதியுங்க. முதலில் ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டிட்டு வாங்க! வேஷண்டை வார்டுக்கு கொண்டு போகணும்!

     அவர்கள் பீஸிலேயே குறியாயிருந்தனர்.

     குலோத்துஙகன் ஓடிப்போய் பீஸ் கட்டிவிட்டு வந்தபோது, அவர்களது பார்மாலிடீஸெல்லாம் முடிந்திருந்தது. அசோக்கின் மூச்சும்.

 

 

 

 

.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |

 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35

More Profiles