விழா  எடுத்துப்பார்...  

                            

      

   பெத்தபெருமாள்:

  பரபரப்பாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சமூகசேவை செய்பவர்களும் உண்டு. அடக்கமாய், சத்தமில்லாமல் பிறருக்கு உதவி செய்பவர்களும் உண்டு.

  Kuwait Institute for scientific Research கம்பெனி மெயின்ட்னென்ஸ் என்ஜினியராக பணியாற்றி வரும் திரு.பெத்தபெருமாள் இதிக் இரண்டாம் ரகம்.

   பார்வைக்கு சாதுவாகவும், அமைதியாகவும் தெரியும் இவர் பாய்ந்தால் புலி. பலதரப்பட்ட மக்களையும், விஷயங்களையும் கிரகித்து, உலக அளவிலான பிரச்சினைகளை, பிராக்டிகலாக அணுகும் விஷய ஞானியாக நிகழ்கிறார்.

   ராமனாதபுரம் கண்டனூரைச் சேர்ந்த (முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரத்தின் ஊர்) இவரது வீட்டில் ஐந்து உடன் பிறப்புகள்.

   அழகப்பா என்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் என்ஜினியர் பட்டம் பெற்று, கோவை ஈஸ்வர் இண்டர்ஸ்ட்ரியின் உற்பத்தி பிரிவில் பணிக்கு சேர்ந்தார்.

   பிறகு மதுரை செல்லுலூஸ் புராடக்டஸ் மெமிக்கல் தொழிற்சாலையில் புராஜக்ட் என்ஜினியராக இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். அந்த சமயம் வோல்டாஸ் சர்வீஸ் மானேஜரான  S.S. வெலிங்கர் அங்கே வந்தவர், பெருமாளின் திறமையைப் பார்த்து தன் கம்பெனிக்கு அழைத்துப் போனார்.

  வோல்டாஸில் சப்காண்ட்ராக்ட் எடுத்து சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பெருமான் பத்து வருடங்கள் கவனித்து வந்தார். பிறகு அங்கே கான்ட்ராக்டில் போட்டி வந்துவிட்ட சமயத்தில் இவருக்கு குவைத் வாய்ப்பு வந்தது.

   ஒரு சமயம் பம்பாய்க்கு உபகரணங்கள் வாங்க வேண்டி போயிருந்த போது பிரபல பதர்முல்லா கம்பெனியின் டைரக்டர் அங்கு வந்திருந்தவர், பெருமானைத் தன் கம்பெனிக்கு அழைத்தார்.

   அங்கு பத்துவருடங்கள் பணியாற்றினார். பிறகு ஸ்விஸ் கன்சல்டன்ட் கம்பெனியில் எலக்ட்ரிகல் கன்சல்டன்ட்டாக குவைத் லிபரேசன் டவர் பணியைக் கவனித்துக்கொண்டார்.

   சதாம் யுத்தத்திற்கு ஆறுமாதம் முன்பு இந்த KISSR சேர்ந்து சண்டைக்குப் பிறகு முதல் குரூப்பிலேயே திரும்ப வேலைக்கு அழைக்கப்பட்டு மெயின்ட்னென்ஸ் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

  மனைவி அழகம்மை இவருக்கு குடும்பத்திற்கும் பக்கபலம். இவர்களின் மூன்று வாரிசுகளில் ஒரு மகனும், மகளும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகியுள்ளனர். பிள்ளைகளும் சரி, மருமக்களும் சரி எல்லோருமே கம்ப்யூட்டர் துரை வித்தகர்கள்.

   இரண்டாவது மகள், சென்னை வைஷ்னாவில் எம்.எஸ்.ஸி படித்து வருகிறார்.

   பெருமாளின் நிலை நிற்பிற்கும், வளர்ச்சிக்கும் காரணம்-சக ஊழியர்களையும் மதித்து, அன்பாய் அணுகி வேலை வாங்குவதுதான். ``மிரட்டி உருட்டி பணிய வைப்பதைவிட, ஒரு விஷயத்தை பக்குவமாய் தெளிவுபடுத்திவிட்டால், அவர்களும் முழு ஈடுபாட்டுடனும், வேகமாகவும் செய்து முடித்து விடுவர்.’’

  ``எந்த ஒரு வேலையாகட்டும் தொழிலாகட்டும் நல்லுறவு ரொம்ப முக்கியம். எக்காரணம் கொண்டும் நான் வேலையிலோ, தரத்திலோ விட்டுக்கொடுப்பதில்லை. எனது பலமே வேலையின் திறமைதான். செய்வதைத் திருத்தவும் செய்ய வேண்டும் காலத்தோடும் செய்ய வேண்டும் என்பது எனது கொள்கை.

  காலம் தவறினால் பல விஷயங்கள் காணாமல் போய்விடக்கூடும். இது அவசர உலகம் போட்டி உலகம். அதனால் நமக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது. அதை உரிய நேரத்தில் வெளிப்படுத்தவும் வேண்டும் அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.’’

   பெருமாளுக்கு இளகிய மனது. உதவி என்று யார் வந்து கேட்டாலும் மறுப்பதில்லை. முடிந்த அளவிற்கு செய்து கொடுத்துவிடுவார். இதுவரை 250 பேர்களுக்கு மேல் குவைத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வேலை வாங்கி கொடுத்திருப்பது இவரது சிறப்பு.

  குவைத்தில் உள்ளூர் பெரும்புள்ளிகளுடன் இவருக்கு நல்ல நட்பும் தொடர்பும் இருந்து வருகிறது. யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் இவர், அந்த செல்வாக்கை வைத்து சிக்கலை தீர்த்து வைத்துவிடுவார்.

   பக்தி, தன்னிடம் உதவி பெற்றவர்களின் அன்பும் பிரார்த்தனையும் தனக்கு மாபெரும் பலம் என்று பெருமிதப்படுகிறார் பெருமாள்.

      ஜி.கே. ராமகிருஷ்ணன்:

  பொதுஜனசேவை என்பது எல்லாருக்கும் முடிகிற காரியமில்லை. அதற்கு முதலில் ஆழ்ந்த அன்பும் மனிதாபிமானமும் வேண்டும். சகிப்புத் தன்மையும் சொந்த சுகங்களை விட்டுக் கொடுத்து எடுத்துச் செய்யும் மனோபாவமும் வேண்டும். சுயநலம் மறக்கணும் வரட்டு கெளரவத்தைக் தவிர்க்கணும். அப்போதுதான் உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்யுமுடியும் இந்த மாதிரி பிரகாசிப்பவரில் திரு.ஜி.கே ராமகிருஷ்ணனும் ஒருவர்.

   திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டான் ஊரில் பிறந்து அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்து, மெரின் என்ஜினியரிங் Directorate of Marine Engineer Training  மற்றும் கல்கத்தாவில் முடித்தவர்.

  இவரது தாத்தா ஜி.ஆர்.கிருஷ்ணன் ஊரில் மிகப் பிரபலமாய் இருந்தவர் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு, அவரது கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர். அந்த நாளிலேயே ஹரிஜன்களை கோயிலுக்குள் அனுமதித்து, தீண்டாமைக் கொடுமையை விரட்ட உதவினார்.

   ராமகிருஷ்ணன் தனது இளமைப் பருவத்திலிருந்தே தன் தாத்தா மூலம்,காந்தி,சுவாமி சிட்பவானந்தா போன்றவர்களின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு,அவற்றைக் கடைபிடித்தும் வருகிறார்.

  ராமகிருஷ்ணன், சரஸ்வதி கிருபையால் DMET சிறப்பாகப் படித்து. இந்தியா –அயல்நாடுகளில் ஜீனியர் முதல் சீஃப் என்ஜினியர் வரை பிரமாதமாய் வளர்ந்தார். இவர் Maritime Safety and Personal  மற்றும் Safety Servival –Qualify Control  ஸ்பெஷலைஸ் பண்ணினவர்.

  11 வருட அனுபவத்திற்குப் பின் 1990 UK  ஷிப்பிங் கம்பெனியில் சேர்ந்து, அங்கு நான்கு வருடமும் பிறகு 5 வருடங்கள் ஹாங்காங்கிலும் பணியாற்றி, 1999-ல் Kuwait Oil Tanker Co-வில்  Fleet Quality Control  சூப்பரிண்டென்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார்.

  கல்லூரி நாட்களிலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கையைக் கற்று. அவற்றைப் பரப்பி வருகிறார்.

  ஸ்ரீராம கிருஷ்ண மடம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரமத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டு சேவை செய்து வருகிறார்.

  சொந்த ஊரில் விவேகானந்தர் போதனைக் கூடம் நிறுவி இளைஞர்களுக்குச் சமூக சேவைக்காக உதவி வருகிறார்.

  தமிழ் இலக்கியம், பக்தி நூல்கள் படிப்பதும், தமிழ் கருந்தரங்கங்களில் கலந்துகொள்வதும் இவரது பொழுதுபோக்குகள்.

  குவைத் பாரதி தமிழ்மன்றம் மற்றும் SIARA  அமைப்புக்களில் துணைத்தலைவர் பதவியுடன், குவைத் ராமகிருஷ்ணா ஸ்ட்டி சென்டரிலும் பங்கு வகிக்கிறார்.

  ராமகிருஷ்ணனின் மனைவி திருமதி டாக்டர் கோமதி மதுரையைச் சேர்ந்தவர். Internal Medicine ல் MD படித்து குவைத் ALJAHRA ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார். இவர்களுக்கு அபிநவ் எனும் மகன் உண்டு.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles