HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL SERVICE RENTAL EVENT MANAGEMENT CAREERS CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
கவிதைத்தொகுப்பு
 

          காதல்

  •   அடியே உன்
      பருவ எழிலில்
      மயங்கித்தானடி
      என் பட்டப்படிப்பின்
      ஆறாம் பருவத்தில் கூட
       பதினாறு பேப்பர்கள்
       பாக்கி உள்ளன!

                     கவிஞர் குலோத்துங்கன்

   

            இந்தியா

  •    மொகலாயன்
       ஃப்ரெஞ்சுக்காரன்
      ஆங்கிலேயன்
      அரசியலான்
       இத்தனை பேர்
       கொள்ளையடித்தும்
       எனது
       இந்தியாவில்
       இத்தனை வளமா?
          
             வே.லஷ்மணன் (லஷ்மன் ஸ்ருதி)

   
         ஒரு தலைக் காதல்
  •     நீ எவனுக்கோ
       அடிக்கப் போகும்
     
     லாட்டரி டிக்கட்

                     வே.லஷ்மணன் (லஷ்மன் ஸ்ருதி)

   
        நிலா நடுக்கம்
  •  நில நடுக்கம் தெரியும்
    நிலாவில் நடுக்கம்
    நேற்றுதான் தெரியும்
    நீ நிமிர்ந்து பார்த்ததால்

    தன்னை விட அழகா
    நிலா நினைத்து நடுங்கியது
    அதுதான் நிலா நடுக்கம்

    தமிழில்
    இதுவரை இல்லாத வார்த்தை
    நிலா நடுக்கம்
    அதுவும்
    தமிழுக்கு
    உன்னால்தான் கிடைத்தது

                     வே.லஷ்மணன் (லஷ்மன் ஸ்ருதி)

 

   
         கலப்புத் திருமணம்
  • கை கலப்புக்குப் பின்
    நடக்கும்
    கலப்பு திருமணம்

                     வே.லஷ்மணன் (லஷ்மன் ஸ்ருதி)

   
         சிரிப்புக்குறள்
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆனால்
    அன்பிற்கும் உண்டே உதைக்கும்கால்

                     வே.லஷ்மணன் (லஷ்மன் ஸ்ருதி)