HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
 
உணர்ச்சி பூர்வமும் அறிவு பூர்வமும்

பிள்ளைகளின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும்
பெரும் பங்கு வகிப்பது தாயா, தந்தையா என்ற தலைப்பில் சுவையான பட்டி மன்றம் நடுவர் ராஜா தலைமையில் நடந்தது. தலைப்பை விளக்கிய நடுவர் வளர்ச்சி என்பது அறிவையும், ஆளையும் குறிக்கும் என விளக்கினார்.

தந்தையே அணியின் தலைவர் புலவர் இராமலிங்கம்,படி என்று சொல்லி அறிவை வளர்ப்பது தந்தையே என ஆணித்தரமாக வாதிட்டார். தோளில் சுமந்து மக்களுக்கு உலகை காட்டுபவர் தந்தை என்று கூறிய அவர், வ.உ.சி.யின் மகன், நேருவின் மகள் உதாரணங்களை சுவையுடன் விளக்கினார்.

தாய் அணித் தலைவர் பேராசிரியர் சுந்தரவல்லி குழந்தையை நலமுடன் பேணி வளர்ப்பது தாயே என உறுதியிட்டார். பகத்சிங்கின் தந்தை மன்னிப்பு கோரி மகனை விடுவிக்க முயன்றாலும், மேஜர் சரவணனின் தாயார் மகனை நாட்டுக்கு அர்ப்பணித்த பெருமையை சான்றாக உரைத்தார்.

நகைச்சுவைக்கிடையே அருள்பிரசாத் ஆண் அறிவு பூர்வமாக மக்களை நல்வழிப் படுத்துகையில்,பெண்
உணர்வு பூர்வமாக நடந்து கொள்வதை சுட்டிக் காட்டினார். மகாத்மா காந்தி தனது மகனை, தவறு செய்த போது தண்டித்ததை உதாரணமாகக் கூறினார்.

வழக்கறிஞர் ஜான்சி தாய் அணிக்காக பேசுகையில், குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுபவர் தாயே என்று கூறி, மகாத்மா காந்தியின் தாயார் எவ்வாறு அவரை வளர்த்தார் என விளக்கினார். பெண்ணின் கண்ணீர் பிள்ளைகளை நல்வழிப் படுத்தும் சக்தியான ஆயுதம் என ஆணித்தரமாக உரைத்தார்.

பலத்த கரவொசையுடன் நகைச்சுவை ததும்ப பேசிய சிவகுமார்,வெளிநாட்டிலும், இராணுவத்திலும் அவதியுடன் மக்களுக்காக உழைக்கும் தந்தைமாரைப் பற்றி விளக்கினார். தாய் அணிக்கு இறுதியாக வாதாடிய பாரதி பாஸ்கர் இன்றைய சூழலில் "Emotional Question" பெறும் முக்கியத்துவத்தை சான்றாக உரைத்து பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் செலுத்துபவர் தாயே என சூளுரைத்தார். பெண்ணின் பொறுமை
குணம் அதற்கு அடிகோலியது என்றார்.

தந்தை தனது பிள்ளைகளுக்காக அயறாது உழைத்து, பள்ளிகளில் சேர்க்கவும், மருத்துவமனையில் நேரம் கிடைக்கவும் அல்லல் படுகிறான் எனக் கூறிய ராஜா, ஒருவரின் அடையாளமான Initial ஐ தருவது தந்யே என்றார். குழந்தைகளுக்கு பகிர்தலின் நன்மையை கற்பிக்கும் முதல் ஆசிரியர் தாயே என்ற நடுவர், பிரார்த்தனை மற்றும் கண்ணீரால் பிள்ளைகளை நல்வழிப் படுத்துவதில் சீரிய பங்கு தாய்க்கே என்று தீர்ப்பளித்தார். கோடை வெயிலில் இதமான தென்றலாக அமைந்தது இந்த வாத அரங்கம்.

மனோஹர்

More Reviews