தமிழ் நாட்டில் 17 ஆண்டுகள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான
இசை நிகழ்ச்சிகள் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை
சந்தோசப்படுத்தியுள்ள எங்கள் இசைக்குழுவின் சார்பில்
புதிய முயற்சி ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும்,
அதே நேரத்தில் அது மக்களுக்கும் எங்களைப் போன்ற இசைத்
துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கும் உபயோகமாக இருக்க
வேண்டும் என்ற நோக்கத்திலும் 2003ம் ஆண்டு மே மாதம்
24ம் தேதி திரையுலகின் சகலகலாவல்லவர் பத்மஸ்ரீ
கமல்ஹாசன் அர்களால் திறக்கப்பட்டது லஷ்மன் ஸ்ருதி இசை
வளாகம். லஷ்மன் ஸ்ருதி இசை வளாகத்தில் உள்ள பிரிவுகள்
அதில் ஒவ்வொன்றிலும் என்ன இயக்கங்கள் நடைபெறுகின்றன
என்பதும் விரிவாக தங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவாறு
அளிக்கின்றோம்.
லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்
லஷ்மன் ஸ்ருதி மியூசிக் பார்க்
லஷ்மன் ஸ்ருதி பயிற்சி அரங்கம்
லஷ்மன் ஸ்ருதி சவுண்ட் மற்றும் லைட்ஸ் மற்றும்
லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு போன்ற பிரிவுகளாக எங்களது இசை
வாளகம் இயங்கி வருகின்றது.
லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்
லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் இதன் முக்கிய அம்சம்
இசைக்கருவிகள், அதன் உபகரணங்கள், இசைத்துறை புத்தகங்கள்,
ஆடியோ சிடி, கேசட்டுகள், விசிடி மற்றும் டிவிடிக்கள்
விற்பனை செய்வது.
இந்தியாவின் கலாச்சாரத்தினை ஒட்டிய கர்நாடக இசை,
ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை போன்றவற்றிகான
இசைக்கருவிகள் வகையில் ஹார்மோனியம், தபேலா, மிருதங்கம்,
வீணை, தம்புரா, சித்தார், தவில், நாகசுரம், கடம்,
மோர்சிங், பம்பை, உடுக்கை, உருமி, தப்பு, டேப், கொம்பு,
ஷெனாய், புல்லாங்குழல், புல்புல்தாரா, பிடில்,
குடுகுடுப்பை, துந்தனா, டோ லக், டோ லகீ, கோல்,
ஸ்ருதிபெட்டி, டோ ல்நகரை, டமுக்கு, தண்டோ ரா,
கடசிங்காரி, தாளம், மகுடி, பிரம்மதாளம், கோவில் மணி,
சப்ளா கட்டை, தாளக் கட்டை, கொலுசு போன்றவையும் மற்ற
இசைக்கருவிகளான, கிட்டார், கீ போர்ட், பியானோ, வயலின்,
ட்ரம்ஸ், ட்ரிபிள் காங்கோ, தும்பா, பேங்கோஸ், பேஞ்ஜோ,
மேண்டலின், கீஃப்ளூட், ரிக்கார்டர் ஃளூட், அக்கார்டியன்,
ட்ரம்ப்பட், க்ளாரினெட், சாக்ஸ்போன், ட்ராம் போன்,
பீகல் ட்ரம்ப்பட், செல்லோ, ஃப்ரெஞ் ஹார்ன், காரனெட்,
பேஸ்ட்ரம்ஸ், ஸ்னேர்ட்ரம்ஸ், சைட் ட்ரம்ஸ், ரோட்டோ
ட்ரம்ஸ், மொராக்கோஸ், டேம்புரின், ஜீம்பே, கப்பாஸ்,
மௌத் ஆர்கன், பிட்ச் பைப், பேக் பைப்பர், சின்ட்ரம்,
பாங்டா ட்ரம்ஸ், பேஸ் டோ லக், எலக்ரட்ரானிக் வீணை,
வில்லுப்பாட்டுக்கான சலங்கையுடன் கூடிய வில்,
கோலாட்டக்குச்சிகள் போன்ற பலவிதமான இசைக் கருவிகளும்
விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இசைக்கருவிகள் பற்றி அறியவும் அவறறை
பயில்வதற்கான புத்தகங்களும், வாய்ப்பாட்டு
பயிற்சிக்கான புத்தகங்களும், கீர்த்தனைகள், ஸ்லோகங்கள்,
பஜனை பாடல்களுக்கான புத்தகங்களும், இசையமைப்பாளர்கள்,
இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள்
ஆகியோரைப் பற்றி அறியவும் அவர்களது வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்ள உதவும் புத்தகங்களும், இசைக்கலையின்
வரலாறு, இசைக்மேதைகளின் ஆராயச்சித் தொகுப்பு,
இசையறிஞர்களின் அரிய குறிப்புகள் ஆகியவற்றிற்கான
புத்தகங்கள், திரைப்பட பாடலாசிரியர்களின் பாடல்
தொகுப்புகள் பக்தி பாடல் தொகுப்புகள், பிரபல
கவிஞர்களின் கவிதை தொகுப்புகள், பழங்காலப் பாடல்களின்
தொகுப்புகள், நாட்டியக் கலைஞர்களுக்கான புத்தகங்கள்,
இசை தவிர மற்ற கலைகளைப் பற்றி அறிய உதவும் புத்தகங்கள்
என்று இசையும் அதனைச் சார்ந்த கலைகளுக்கான எல்லா
விதமான புத்தகங்களும் விற்பனையகத்தில் இடம் பெறுகின்றன.
இவை தவிர தொழில் ரீதியான இசைக் கலைஞர்களுக்கென மற்றும்
ஒலிப்பதிவுக் கூடத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கென
ஸ்பீக்கர், மைக்ரோபோன், ஆம்ப்ளிஃபயர், சவுண்ட் மிக்சர்,
மிடி கெபிள், சவுண்ட் ப்ராஸர்ஸ், சவுண்ட் கார்ட்ஸ்,
சாம்ப்ளர்ஸ், ரிதம் பாக்ஸ், சீக்வென்ஸர்ஸ், எக்கோ, ஃப்ளேஞ்ர்,
ரிவேர்ப், டிலே போன்ற யூனிட்கள், வயர்லெஸ் மைக்ரோபோன்,
வயர்லெஸ் ஹெட்போன், எக்கோ அரஸ்ட்டர், க்ராஸ் ஓவர்ஸ்,
கம்ப்ரெஸர்ஸ், ஸ்டெபிலைசர்ஸ் போன்று ஒலிப்பதிவுக்
கூடத்திற்குத் தேவையான மற்றும் தொழில் ரீதியான அளவிற்கு
தேவையான கருவிகளுக்கும், ஹோட்டல்களுக்குள்ளே
அமைக்கப்பட்டிருக்கும் கான்ட்பிரன்ஸ் ஹால்களுக்கும்
தேவையான பி ஏ சிஸ்டம் பள்ளிகளுக்கு தேவையான,
கல்லூரிகளுக்கு பொதுநிகழ்ச்சிகளுக்கு தேவையான சவுண்ட்
சிஸ்டம், இசை நிகழ்ச்சிகளுக்கும்
பொதுக்கூட்டங்களுக்கும் தேவையான சவுண்ட் சிஸ்டமும்
விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக இசைக் கருவிகள் விற்பனையகத்தில் இசைக் கருவிகள்
மட்டுமே விற்கப்படும். முதன் முறையாக இதில் ஒரு
புதுமையை செய்துள்ளோம். அது இசைக் கருவிகள் அதற்குரிய
புத்தகங்களுடன் இசையை கேட்க விரும்பும் மக்களுக்காக
ஆடியோ கேசட்டுகள், சிடிக்கள், விசிடிக்கள், டிவிடிக்கள்,
போன்றவையும் விற்பனையில் இணைத்துள்ளோம். இசைக் கருவிகள்
பயில்வதற்கான ஆடியோ, வீடியோ, கேசட்டுகள் அதற்குண்டான
ஆசிரியர்கள் நேரடியாக பயிற்றுவிக்கும் ஆடியோ, வீடியோ,
சிடி கேசட், டிவிடிக்கள், புதிய மற்றும் பழைய திரைப்பட
பாடல்கள், தனி தொகுப்புகள், தமிழ் மொழியுடன் மலையாளம்,
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களும்
கிடைக்கின்றன. கரோக்கி சிடிக்கள், கேசட்டுகள்,
அவற்றிற்கான மைக், இசையுடன் பூஜை செய்யும்
பக்தர்களுக்காக நாமாவளிகள், மந்திர ஸ்லோகங்கள்,
அடங்கிய சாண்டிங் பாக்ஸ், முழுநீள திரைப்படங்கள்,
நகைச்சுவை தொகுப்புகள், குழந்தைகளுக்கான கார்டூன்
படங்கள், சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டிகள்,
போன்றவையும் விற்பனையகத்தில் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர இசைக் கருவிகளுக்குண்டான உபகரணங்கள் அவற்றை
பாதுகாத்து வைக்கத் தேவையான கருவிகள், உதிரி பாகங்கள்,
இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உதவும்
பெட்டிகள் என்று இசைத்துறை சம்பந்தமாக தேவைப்படும்
ஒவ்வொன்றையும் விற்பனைக்கு கொண்டு வந்து இசைக்
கலைஞர்ளுக்கும் பொது மக்களுக்கும் உதவும் வகையில்
லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ் நிறுவனத்தை
உருவாக்கியுள்ளோம்.
இசைக் கருவிகளை நாங்களே தயாரித்து விற்பனை செய்யும்
வகையில் சில ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தற்போது
முதற்கட்டமாக தபேலா, மிருதங்கம், தவில் போன்ற தோல்
வாத்தியக் கருவிகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறோம்.
அடுத்த கட்டமாக தஞ்சாவூர் பகுதியில் வீணை
தயாரிப்பாளர்களுடன் இணைந்து வீணை தயாரிப்பை துவக்க
உள்ளோம். தொடர்ந்து கிட்டார், வயலின், ட்ரம்ஸ் என்று
பல விதமான இசைக்கருவிகளையும் அரசாங்கத்தின் உதவியுடன்
தயாரிக்க இருக்கிறோம்.
எதிர் காலத்தில் இந்திய இசை அறிஞர்கள், விஞ்ஞானிகள்,
மற்றும் அனுபவம் வாய்ந்த இசைக் கருவிகளை தயாரிப்போர்கள்
ஒத்துழைப்பின் பேரிலும் எங்களது தயாரிப்பில்
எலக்ட்ரானிக் கீபோர்ட், எலக்ட்ரிக் கிட்டார்,
எலக்ட்ரானிக் ட்ரம்ஸ், எலக்ட்ரானிக் ரிதம் பேட்,
டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்ஸ், லேசர் விளக்குகள்
போன்றவற்றை சர்வதேச தரத்துடன் தயாரித்து விற்பனை
செய்யும் திட்டத்தையும் வைத்துள்ளோம்.
அவற்றை வெளிநாட்டில் உள்ள இசைக் கலைஞ்ர்கள் கூட போட்டி
போட்டு வாங்கும் அளவிற்கு தரமான இசைக்கருவிகளை எங்கள்
தயாரிப்பில் கொண்டு வர வேண்டும் என்பதுடன், இது இந்திய
தயாரிப்பு தரமானதாக இருக்கும். இந்திய தயாரிப்பைத் தான்
நான் பயன்படுத்துகிறேன் என்று வெளிநாட்டவர்களை சொல்ல
வைக்கவேண்டும் என்பதே எங்கள் இசை வளாகத்தின் கனவு!
மேலே செல்ல...
லஷ்மன் ஸ்ருதி மியூசிக் பார்க்
லஷ்மன் ஸ்ருதி இசை வளாகத்தின் மற்றுமொரு பிரிவுதான்
லஷ்மன் ஸ்ருதி மியூசிக் பார்க். லஷ்மன் ஸ்ருதி இசைப்
பள்ளி 2003 ம் ஆண்டு அக்டோ பர் 5ம் தேதி
ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் நமது
பாரம்பரிய இசை வகைகளான கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி
மற்றும் மேற்கத்திய சங்கீதம் உட்பட அனைத்தும்
பயிற்றுவிக்கப் படுகின்றன. தேர்ச்சி பெற்ற அனுபவம்
வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு இசைப்பள்ளி இயங்கி வருகிறது.
வாய்ப்பாட்டு, ஹார்மோளியம், வீணை, வயலின், ட்ரம்ஸ்,
புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கிட்டார்,
சாக்ஸ்போன் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. எதிர் வரும்
காலங்களில் இந்த இசைப்பள்ளியை இசைக்கென தனியொரு
பல்கலைக் கழகமாக கொண்டு வரவேண்டுமென்பது எங்களது
தற்போதைய திட்டமாகும்.
மேலே செல்ல...
லஷ்மன் ஸ்ருதி இசைப் பயிற்சி அரங்கம்
450 சர அடி பரப்பளவில், சராசரி மேடைக்குண்டான இடத்தில்
இசைப் பயிற்ச்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2000
வாட்ஸ் ஒலி அமைப்பில் பயிற்ச்சிக்கு தேவைப்படும்
அனைத்து இசைக் கருவிகளுடன், குளிர்சாதன வசதி
செய்யப்பட்டு, ஒலி அமைப்பு அருகில் உள்ள மற்றவர்களை
பாதிக்காத வகையில், எதிரொலி கேட்காமல் சவுண்ட் ஃப்ரூப்
செய்யப்பட்டு, இசைப் பயிற்சியினை கேமிரா மூலம் நீங்கள்
அகன்ற திரையில் பார்க்கும் வசதியுடன் அரங்கம் நவீன
முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்கள் தவிர
நடன கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், பட்டி மன்ற
குழுவினர்கள், பேச்சுப் போட்டிக்கு செல்பவர்கள்,
விரிவுரையாளர்கள், கதா காலட்ச்சேபம் செய்பவர்கள்,
பிரசங்கிகள், சீக்குவன்சர், ஃபீடிங் செய்பவர்கள்,
மேஜிக் நிபுணர்கள் இப்படி மேடையில் தங்களை திறமையை
வெளிப்படுத்த விரும்பும் அனைத்துக் கலைஞர்களையும்
மனதிற் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது லஷ்மன் ஸ்ருதி இசைப்
பயிற்சி அரங்கம். தங்களது பயிற்ச்சியை ஆடியோ,
வீடியோவில், ஒலி ஒளிப்பதிவு செய்து கொள்ளும் வசதி
செய்யப்பட்டுள்ளது.
பயிற்சிக்குத் தேவையான டேப்
ரிக்கார்டர், சிடி ப்ளேயர், போன்றவையும் கலைஞர்களுக்கு
வழங்கப்படுகிறது. ஒளி அமைப்பை ஏற்படுத்தி பயிற்சி
செய்யும் கலைஞர்களுக்காக அனைத்து வசதிகளும்
செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் போது சவுண்ட் பேலன்ஸ்
செய்வதற்காக ஆப்ரேட்டர் ஒருவர் பயிற்சி அரங்கில்
இருப்பார். புதிதாய் பயிற்சி செய்யும் கலைஞர்களுக்கு
தேவைப்பட்டால் இசைக்குறிப்புகள் கொடுத்து, இசைக்
கருவிகளை இசைப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி பயிற்சியை
ஒருங்கிணக்கும் கண்டக்டர் ஒருவரும் வழங்கப்படும். இசைக்
கலைஞர்கள் பயிற்சிக்கென தேவைப்படும் கேசட் மற்றும்
சிடிக்களின் லைப்ரரியும் பயிற்சி அரங்குடன் இணைக்கப்
பட்டுள்ளது. வேண்டுவோர் அதை உபயோகித்துக் கொள்ளலாம்.
அதே போல் பாடல் வரிகள், பாடல்களுக்கான இசைக்
குறிப்புகள் போன்றவையும் லைப்ரரியில் உள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படி பல வசதிகளை பயிற்சி
அரங்கிற்கென ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்தனை
வசதிகளுடன் கூடிய இந்த பயிற்சி அரங்கினை கலைஞர்களின்
சிரமத்தைக் குறைக்க உருவாக்கி மிகக் குறைந்த
கட்டணத்தில் அணைவருக்கும் வழங்கி வருகிறோம். இது வளரும்
கலைஞர்களுக்கும் வழங்கி வருகிறோம். இது வளரும்
கலைஞர்களுக்கும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள
நினைக்கும் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என
நாங்கள் நம்புகிறோம். எதிர் காலத்தில் இதை இன்னும்
விரிவு படுத்தி இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள்,
நாடகக் கலைஞர்கள், கிராமியக் கலைஞர்கள், பேச்சாளர்கள்
என்று ஒவ்வொரு பிரிவிற்கும் தனித் தனி அரங்கமாக அமைக்க
திட்டமிட்டிருக்கிறோம்.
மேலே செல்ல... |