HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
 
   "லஷ்மன் ஸ்ருதி"யின் அமெரிக்க இசைப் பயணம் 2019

அமரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இயங்கிவரும் "வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்" வளர்ச்சி நிதிக்காக (Bay Area Tamizh Mandram ) 30.3.2019 சனிக்கிழமை மாலை சான்ஃபிரான்சிஸ்கோ அருகில் உள்ள "சான் ஓஸ்" நகரில் எமது "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவில் "பத்மபூஷண்" பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு பாடி ரசிகர்களை தன் மெல்லிசையால் மகிழ்வித்தார்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் முழுவதும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வழங்கப்பட்டது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ரசிகர்களுக்கு மேல் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் "திரையிசைத்திலகம்" கே.வி.மகாதேவன், "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன், "இசைஞானி" இளையராஜா, "இசை வித்தகர்" வித்யாசாகர், "இசைப்புயல்" ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான் மற்றும் எஸ்.பி.பி அவர்களே இசை அமைத்த படங்களில் இருந்து பாடல்கள் வழங்கப்பட்டது.

"வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்" சார்பாக எஸ்.பி.பி அவர்களுக்கும், லஷ்மணன் அவர்களுக்கும் பாராட்டு மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆதரவை வழங்கிய ஸ்பான்சர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

எஸ்.பி.பி அவர்களின் தேன் போன்ற, வரிக்கு வரி உணர்வு கொடுத்துப் பாடும் இளமை மாறாக் குரலுக்கு கிடைத்த வரவேற்பு அரங்கத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

அவருடன் இணைந்து பாடிய பின்னணிப் பாடகி 'சுர்முகி', "லஷ்மன்ஸ்ருதி" இசைக்குழுவின் பாடகர்கள் துரைராஜ், கிருத்திகா, 100℅ இயற்கையான வகையில் துல்லியமாக அனைத்து இசைக்கருவிகளையும் இசைத்த "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள், சான் ஜோஸ் நகரில் இயங்கி வரும் மெல்லிசைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்களின் கோரஸ், இவர்களுடன் மிக பிரம்மாண்டமான "சிட்டி சிவிக் அரங்கம்", துல்லியமான ஒலி ஒளி அமைப்பு என்று நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றன.

ரசிகர்களுக்கு பல்சுவையும் கலந்த இசை விருந்தாய் இந்த மாலைப் பொழுது அமைந்தது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைய இருக்கும் தமிழ்க் கலாச்சார மையக் கட்டிடத்திற்கான நிதி சேர்க்கும் இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி மணடபத்திலேயே எராளமான தமிழ் மக்கள் நிதி வழங்கி தங்கள் பங்களிப்பை செலுத்தினார்கள். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இதற்கான நிதி வழங்கி தமிழ்க் கலாச்சார மையம் பிரம்மாண்டமாய் அமைய உதவும்படி எமது குழுவின் சார்பாக அன்போடு வேண்டுகோள் வைக்கின்றோம்.

அதே போல் யூபி6 மீடியா மற்றும் ஜி ஜி கிரியேஷன்ஸ் சார்பாக 29.03.19 வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணிக்கு அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி.சி. மாநகரிலும், 31.3.19 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு யூபி6 மீடியா மற்றும் ஆர் ஆர்.இண்டர்நேஷனல் சார்பாக சிக்காகோ மாநகரிலும்,ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்குபெற்ற இந்த இரு நிகழ்ச்சிகளிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்பட பாடல்களுடன் மிக பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

More News