HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
 
   "லஷ்மன் ஸ்ருதி"யின் அமெரிக்க இசைப் பயணம் 2019

ஜி.ஜி கிரியேஷன்ஸ் சார்பாக 29.3.2019 வெள்ளிகிழமை மாலை அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி நகரில் எமது "லஷ்மன் ஸ்ருதி" இசைக்குழுவில் "பத்மபூஷண்" பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு பாடி ரசிகர்களை இசையால் மகிழ்வித்தார்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் வழங்கப்பட்டது.

இரண்டாயிரம் ரசிகர்களுக்கு மேல் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி அவர்களின் இளமை மாறாக் குரலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பின்னணிப் பாடகி 'சுர்முகி', குழுவின் பாடகர்கள் துரைராஜ், கிருத்திகா, துல்லியமாக இசைத்த லஷ்மன்ஸ்ருதியின் இசைக்கலைஞர்கள், வாஷிங்டன் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்களின் கோரஸ், அறிவிப்பாளர்கள் ரூபன், இந்து இவர்களுடன் மிக பிரம்மாண்டமான அரங்கம், துல்லியமான ஒலி அமைப்பு வண்ண விளக்குகளின் கண்கவர் ஒளி வீச்சு என்று நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பம்சங்கள், ரசிகர்களுக்கு பல்சுவையும் கலந்த இசை விருந்தாய் அமைந்தது.

தொடர்ந்து 30.3.19 சனிக்கிழமை, மாலை 6.00 மணி, சான் ஹோஸ் - சான் ஃபிரான்சிஸ்கோ (தமிழ்) தொடர்புக்கு : 614-805-0931, 31.3.19 சிக்காகோ, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணி (தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்) தொடர்புக்கு : 815-955-7794, 1.4.19. திங்கட்கிழமை, மாலை 7.00 மணி, செயிண்ட் லூயிஸ் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்) தொடர்புக்கு : 614-256-8742 ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அமெரிக்க வாழ் இசை ரசிகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிகளுக்கு வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.

More News