HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
 
இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுடன் 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழு நடத்துனர் வே.லஷ்மணன் சந்திப்பு

18.9.2019 அன்று காலை மதிப்பிற்குரிய இயக்குநர்களின் பல்கலைக்கழகம் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களை, 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழு நடத்துனர் வே.லஷ்மணன் அவர்கள் சென்னையில் உள்ள அவரது ஏ.வி.எம் நகர் இல்லத்தில் சந்தித்து, ஆளுயர ரோஜா மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றார்.

'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவில் சில வருடங்களுக்கு முன் 'எஸ்.பி.எம்' அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இசை மேடையில் 'எஸ்.பி.எம்' அவர்களுக்கு பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் கரங்களால் கெளரவம் செய்யப்பட்டது. அந்நிகழ்வைப் படமாக்கி எஸ்.பி.எம் அவர்களுக்கு நினைவுப் பரிசாக லஷ்மணன் அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் (11), சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (25) ஆகியோர் இருவரையும் வைத்து அதிக படங்கள் இயக்கிய இயக்குநர்.

இசைஞானி இளையராஜா அவர்களுடன் 37 படங்களில் பணியாற்றியவர்.

இந்தியாவில் அதிக வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்தவர்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை மக்களுக்கும், நிறைந்த லாபத்தை தயாரிப்பாளர்களுக்கும் வழங்கிய இந்தியாவின் ஒரே வெற்றிப்பட இயக்குநர்.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இயக்குநர்களின் பல்கலைக்கழகமாம் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

தேசத்தின் திறமைசாலிகளுக்கான விருதுகளும், மாநிலத்தின் மதிப்புமிகு விருதுகளும் அன்னாரைச் சேர ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நன்றி, 'லஷ்மன் ஸ்ருதி' இசைக்குழு

More News