HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
வித்தியாசமான மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகள்
வெள்ளி விழா நாயகன் மோகன் தலைமையில் மோகன் நடித்த படங்களின் பாடல்கள் மட்டும் இடம் பெற்ற நிகழ்ச்சி - 1997 காமராஜர் அரங்கம்.
ஜவஹர்லால் நேரு பிறந்த தினமான குழந்தைகள் தினத்தன்று முழுக்க முழுக்க குழந்தைகள் மட்டுமே அரங்கத்தில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து 6 மணி நேரம் குழந்தைகளே பாடி 6 பாடல்களுக்கு குழந்தைகளே இசையமைத்துப் பாடி அதிசயிக்க வைத்த சில்ட்ரன்ஸ் ஸ்பெஷல் - 1997 காமராஜர் அரங்கம்.
நகைச்சுவை சிற்பி காமெடி கிங் இயக்குநர் மணிவண்ணன் தலைமையில் நகைச்சுவை பாடல்கள் மட்டும் இடம் பெற்ற காமெடித் திருவிழா - 1997 காமராஜர் அரங்கம்.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தலைமையில் சமர்ப்பணா என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பள்ளி வளர்ச்சி நிதிக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கும் இசை விழா - 1998 காமராஜர் அரங்கம்.
இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து இருபதாயிரம் ரசிகர்களிடையே பாடி சிங்கப்பூரை கலக்கிய இசை நிகழ்ச்சி - 1998 இன்டோர் ஸ்டேடியம் சிங்கப்பூர்.
இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து 5 மணி நேரம் தொடர்ந்து பாடி அதிசயிக்க வைத்த மலேசிய நாட்டு நிகழ்ச்சி - 1998 கோலாலம்பூர் மலேசியா.
தென்னிந்தியாவில் முதல் முறையாக ஒரு இசை நிகழ்ச்சியாக கிரிக்கெட், புட்பால் போன்ற விளையாட்டுகளுக்காக அமைக்கப்படும் காலரி அமைத்து 2500 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவில் பிரம்மாண்டமான அளவில் அரங்கம் அமைக்கப் பட்டு, இசை உலகின் இரு சிகரங்கள் இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் பங்கேற்று பாடி ஸ்தம்பிக்க வைத்து வரலாறு படைத்த மதுரை மாநகர் மருத்துவக் கல்லூரி மைதான நிகழ்ச்சி - 1998 மருத்துவக் கல்லூரி மைதானம் மதுரை.
பட்டிக்காடா பட்டணமா என்ற தலைப்பில் பட்டிக் காட்டுத் தலைப்பில் 12 பாடகர்களும், பட்டணத்தில் 12 பாடகர்களும் பங்கேற்று ஒரே மேடையில் 24 பாடகர்களும் 16000 ரசிகர்களுடன் ஆடிப்பாடி சென்னை நகரைக் குலுங்க வைத்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி - 1998 நேரு ஸ்டேடியம் சென்னை.
கலை மாமணி மனோ, கவிக்குயில் இசையரசி சித்ரா இணைந்து பங்கேற்றுப் பாடிய மனோ சித்ரா ஹிட்ஸ் நிகழ்ச்சி - 1998 ஹார்பர் பெவிலியன் சிங்கப்பூர்.
கலைமாமணி மனோ, கலைமாமணி ஸ்வர்ணலதா இணைந்து பங்கேற்றுப் பாடிய சுதந்திர தின சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி - 1998 காந்தி மியூசியம் மதுரை.
ஒரே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து மலாட், செம்பூர், முலுண்ட், டோம்பிவிளி, என்று மராட்டியத் தலைநகர் மும்பையின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் அவர்களுடன் வழங்கிய மும்பை வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கான நிகழ்ச்சி - 1998 மும்பை மாநகர்.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் பேலஸ் மைதானத்தில் கந்தர்வ குரலோன் பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கவிக்குயில் சித்ரா, எஸ்.பி.பி.சரண் இணைந்து 20000 ரசிகர்களுடன் கொட்டும் மழையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் பாடல்களை வழங்கிய நிகழ்ச்சி - 1998 பேலஸ் கிரவுண்ட்ஸ் பெங்களூர்.
பல்வேறு மெல்லிசைக் குழு பாடகர்களை சிறப்பு பங்கேற்பாக அழைத்து பலகுரல் கலைஞர்களை வரவழைத்து வித்தியாசமான முறையில் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக வழங்கிய கமல் ஹிட்ஸ் நிகழ்ச்சி - 1998 காமராஜர் அரங்கம்.
பத்மஸ்ரீ டாக்டர். கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து பாடி ஐந்து மொழிகளில் பாடல்களை வளைகுடா நாட்டுக்காக வழங்கிய வெற்றிகரமான நிகழ்ச்சி - 1998 இந்திய தூதரகம் குவைத்.
வீரமணி ராஜு, சீர்காழி ஜி.சிவசிதம்பரம், வீரமணி சோமு, சக்திதாசன், முருகதாஸ், விழுப்புரம் கர்ணன், கலைமாமணி ஸ்வர்ணலதா ஆகியோர் பங்கேற்றுப் பாடிய பக்தி இசை பூஜை - 1998 காமராஜர் அரங்கம்.
கவியரசு வைரமுத்து, தேனிசைத் தென்றல் தேவா பங்கேற்று சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிறந்த நாள் இசை நிகழ்ச்சி - 1998 காமராஜர் அரங்கம்.
சகலகலா வல்லவர் இயக்குநர் டி.ராஜேந்தர் அவர்கள் பங்கேற்று சிறப்பித்த டி.ராஜேந்தர் இசையில் பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பி. பாடல்கள் மட்டும் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி - 1998 காமராஜர் அரங்கம்.
இயக்குநர் அகத்தியன், சார்லி, யார் கண்ணன் பங்கேற்று சிறப்பித்த மதங்களை கடந்த இரு மணங்கள் என்ற தலைப்பில் ஒரு இளம் காதல் மண தம்பதியருக்கு மறுவாழ்வு, நிதி வழங்கும் நிகழ்ச்சி - 1999 கலைவாணர் அரங்கம்.
எவர் கிரீன் குஷ்பு பங்கேற்று சிறப்பித்த கவிஞர் பழநி பாரதி பாடல்கள் மட்டும் இடம் பெற்ற நிகழ்ச்சி 1999 காமராஜர் அரங்கம்.
சேலம் மாநகரில் முதல் முறையாக ரசிகர்களுக்கு காலரியுடன் 30,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவில் பிரம்மாண்டமான அளவில் அரங்கம் அமைத்து இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் பங்கேற்று கொட்டும் மழையில் ரசிகர்ளுக்காக குடையுடன் நின்று பாடி பரவசமூட்டிய சேலம் போஸ் மைதான இசை நிகழ்ச்சி 1999 போஸ் மைதானம் சேலம்.
இந்திய ராணுவ வீரர்களின் நல நிதிக்காக கார்கில் நிவாரண நிதி திரட்டும் பொருட்டு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், சீர்காழி எம்.எஸ்.ராஜேஸ்வரி, சி.எஸ். மீனாட்சி சுந்தரம், மால்குடி சுபா ஆகியோர் பங்கேற்று முழுக்க முழுக்க தேசபக்தி பாடல்கள் இடம் பெற்ற ராணுவ மரியாதை இசை நிகழ்ச்சி, 1999 கலைவாணர் அரங்கம். சென்னை.
ஹிந்தி திரையுலகின் ஜாம்பவான்கள் பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரன், உதித் நாராயணன், கவிதா கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பாடிய சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழா, 1999 நேரு ஸ்டேடியம், சென்னை.
பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பி. அவர்களின் மகன் இளைய நிலா எஸ்.பி.பி.சரண் அவர்கள், பின்னணி பாடகி பாப்குயின் அனுராதா ஸ்ரீராம், திரைப்பட தாரகைகள் மஞ்சுளா விஜயகுமார், வனிதா விஜயகுமார், ப்ரீதா விஜயகுமார் இவர்களுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன், சூரிச் நகரங்களில் நடைபெற்ற வெற்றிகரமான நிகழ்ச்சி மற்றும் டென்மார்க் நாட்டில் ஹேர்னிங் நகரில் தமிழ் ரசிகர்களுடன் இரண்டு முறை இடைவேளை விடப் பட்டு தொடர்ந்து 6 1/2 மணி நேரம் நடைபெற்ற நீண்ட நிகழ்ச்சி.
பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பி., பாப்குயின் அனுராதா ஸ்ரீராம் இணைந்து பங்கேற்று பாடிய கார்கில் நிவாரண நிதி இசை நிகழ்ச்சி, 1999 வ.உ.சி.திடல், ஈரோடு
பின்னணிப் பாடகர் மனோ பங்கேற்று 12,000 ரசிகர்களுடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி, 1999 திருவண்ணமாலை.
ஒரு நிகழ்ச்சி முழுவதும் பிற பாடகர்கள் இணைந்து பாடாமல் எல்லா பாடல்களையும் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் நிறைவு வரை பாடி பாடல் ஒவ்வொன்றுக்கும் ஜீவனைக் கொடுத்து சிறப்பித்த பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய One Man Show நிகழ்ச்சி 1999 காமராஜர் அரங்கம். சென்னை
காமிரா கவிஞர் பாலு மகேந்திரா தலைமையில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான லைட்டிங் அமைப்புடன் Philips நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ஸ்பெஷல் 1999 காமராஜர் அரங்கம். சென்னை
பாடும் நிலா டாக்டர் எஸ்.பி.பி., மால்குடி சுபா, திரைப்பட தாரகை மஞ்சுளா விஜயகுமார், வனிதா விஜயகுமார், ப்ரீதா விஜயகுமார் இவர்களுடன் கொட்டும் மழையில் அரிமா சங்கத்திற்காக வழங்கிய இசை விழா 1999 நாமக்கல்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் பங்கேற்று சிறப்பித்த பக்திப்பாடல்கள் இசை நிகழ்ச்சி 1999 காமராஜர் அரங்கம்.
2000 ஆண்டின் இனிதே துவங்க ஜனவரி 1-ம் தேதி சேலம் மாநகரில் ஹோட்டல் எல்.ஆர்.என் மைதானத்தில் உன்னிமேனன், ஹரிணி, வினோதினி, சுரேஷ், சக்கரவர்த்தி ஆகியோருடன் லஷ்மன் ஸ்ருதியின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
2000 ஆண்டில் ஜனவரி 29, 30 ஆகிய தேதியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் இரு சிகரங்களான பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ், பாடும் நிலா டாக்டர். எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகியோருடன் கவியரசு வைரமுத்து அவர்கள் தொகுத்து வழங்க இசைக்குயில்கள் சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் பங்கேற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுமார் 6 மணி 30 நிமிடம் நடந்தேறிய அரங்கம் அதிர்ந்த அற்புதமான இசை நிகழ்ச்சி.
விசாகப் பட்டிணம் ஸ்டீல் ப்ளாண்ட் வளாகத்தில் பின்னணிப் பாடகர் மனோ பங்கேற்ற முழுக்க முழுக்க தெலுங்குப் பாடல்கள் மட்டுமே இடம் பெற்ற இசை நிகழ்ச்சி.
குறுகிய காலத்தில் 300 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு கருணைக் கரங்கள் சார்பில் நடைபெற்ற தேவா 300 பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஜெயா டிவி நேரடி ஒலிபரப்பு செய்ய கவியரசு வைரமுத்து, இயக்குநர் பார்த்திபன், கே.சுபாஷ், பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிணி, சுபா, ஆகியோர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி.
கோயம்புத்தூர் மாநகரில் முதல் முறையாக ரசிகர்களுக்கு காலரியுடன் 30,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவில் பிரம்மாண்டமான அளவில் அரங்கம் அமைத்து இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா டாக்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இருவரும் பங்கேற்ற கோவை இசை நிகழ்ச்சி 2000 CIT கல்லூரி, கோவை. இந்நிகழ்ச்சியில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக பத்மஸ்ரீ டாக்டர்.கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் புதல்வர் இளைய நிலா எஸ்.பி.பி.சரண் மற்றும் தைய தையா பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற பின்னணிப் பாடகி மால்குடி சுபா ஆகியோர் பங்கேற்றுப் பாடினார்கள். இந்நிகழ்ச்சியை திரைப்பட மற்றும் டி.வி. புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி தொகுத்து வழங்கினார்.
தொடரும் எங்கள் இசைப் பயணம் உங்களுடன்..............

< Back

Back To Index