HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
வித்தியாசமான மற்றும் முக்கியமான நிகழ்ச்சிகள்

மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் தலைமையில், மாணவர்கள் முன்னிலையில் ஸ்ருதி இன்னிசை மழை என்ற பெயரில் இசைக் குழுவின் துவக்க விழா 1987 மியூசியம் தியேட்டர்.

கவிஞர் மு.மேத்தா தலைமையில் இசைக்குழுவின் 50வது இசை நிகழ்ச்சி 1988 அண்ணாமலை மன்றம்.

அபூர்வ சகோதரர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் 200வது இசை நிகழ்ச்சி 1988 மியூசிக் அகாடமி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் இதயக்கனிக்கு எங்கள் இசை அஞ்சலி என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டும் 1989 அண்ணாமலை மன்றம்.

இசைஞானி இளையராஜாவின் அன்னக்கிளி முதல் அஞ்சலி வரை 1990 அண்ணாமலை மன்றம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, இளையராஜா ஹிட்ஸ் என்று ஒரே நாளில் தொடர்ந்து ஐந்து இசை நிகழ்ச்சி - 1990 அண்ணாமலை மன்றம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, சூப்பர் ஆக்டர் கமல் பாடல்கள் மட்டும் - 1990 அண்ணாமலை மன்றம்.

தமிழ் திரையுலக பிரம்மா இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பாடல்கள் மட்டும் 1991 அண்ணாமலை மன்றம்.

நாட்டுப்புற நாயகி டாக்டர். விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்ட நாட்டுப்புற பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சி - 1991 இராயபுரம்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் தலைமையில் 1200வது இசை நிகழ்ச்சி - 1991 அண்ணாமலை மன்றம்.

இயக்குநர் கலைமாமணி கங்கை அமரன் தலைமையில் ஒரே நாளில் 12 மணி நேரத்திற்குள்ளாக இசை ஞானி இளையராஜாவின் 150 பாடல்கள் - 1991 அண்ணாமலை மன்றம்.

இயக்குநர் கலைமாமணி கங்கை அமரன் தலைமையில் ஒரே நாளில் 12 மணி நேரத்திற்குள்ளாக இசை ஞானி இளையராஜாவின் 150 பாடல்கள் - 1991 அண்ணாமலை மன்றம்.

வேற்று மொழி ரசிகர்களின் வேண்டுகோளுக் கிணங்க இந்திப் பாடல்கள் மட்டும் இடம் பெற்ற ஹிந்தி ஹிட்ஸ் - 1991 அண்ணாமலை மன்றம்.

சகல கலா வேந்தன் - டி.ராஜேந்தர் அவர்கள் தலைமையில் இசைக்குழுவின் 6வது ஆண்டு பிறந்த தின விழா - 1992 அண்ணாமலை மன்றம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாளுக்கு இளைய திலகம் பிரபு தலைமையில் சிவாஜி பாடல்கள் மட்டும் - 1992 அண்ணாமலை மன்றம்.

கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ் தலைமையில் வாழை அம்பலத்தில் ஐயப்பன் வீற்றிருக்க ஐயப்ப பக்தி பாடல்கள் மட்டும் - 1992 காமராஜர் அரங்கம்.

நகைச்சுவை நாயகன் எஸ்.வி.சேகர் அவர்கள் தலைமையில் இசைக்குழுவின் 7வது ஆண்டு பிறந்த தின விழா 1993 அண்ணாமலை மன்றம்.

அடுக்கு மொழி அரசன் டி.ராஜேந்தர் அவர்கள் தலைமையில் ட்ரம்மர் சிவமணி அவர்களின் தனி ஆவர்தனத்தில் டி.ராஜேந்தர் பாடல்கள் மட்டும் - 1993 அண்ணாமலை மன்றம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் தீபாவளி சிறப்பு இசை நிகழ்ச்சி - 1993 காமராஜர் அரங்கம்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் முன்னாள் தமிழக அமைச்சர் திரு. மாணிக்கவேல் அவர்களின் 100வது ஆண்டு பிறந்த தினவிழா - 1993 பல்கலை கழக நூற்றாண்டு விழா மண்டபம்.

சென்னை லஷ்மன் ஸ்ருதி Vs மதுரை வைகை ஒரே மேடையில் இரட்டைக்குழல் துப்பாகியாக இரண்டு இசைக் குழுவினர்கள் இசைத்தது 1994 மதுரை நத்தம்.

நம்மவர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் தலைமையில் 2000 வது இசை நிகழ்ச்சி - 1994 காமராஜர் அரங்கம்.

பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்க, இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் சிறப்புரையாற்றி நிறைவு செய்து தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை இசை நிகழ்ச்சி - 1994 காமராஜர் அரங்கம்.
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - ஷாகுல் ஹமீது தலைமையில் ரம்ஜான் சிறப்பு இசை நிகழ்ச்சி - 1994 அண்ணாமலை மன்றம்.
பின்னணிப் பாடகர் கலைமாமணி மனோ தலைமையில் 8வது ஆண்டு பிறந்த தின விழா - 1994 காமராஜர் அரங்கம்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா பாட்டுக்கள் - 1994 அண்ணாமலை மன்றம்.
இளவட்டங்களின் வேண்டுகோளுக்கிணங்க இளைஞர்களுக்காகவே நடத்தப்பட்ட காதல் வெற்றி மற்றும் காதல் தோல்வி பாடல்கள் - 1994 அண்ணாமலை மன்றம்.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி தலைமையில் மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் - 1994 காமராஜர் அரங்கம்.
இசைஞானியின் இளவல் மேடை ஞானி கங்கை அமரன் தலைமையில் ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் உங்கள் விருப்பம் நிகழ்ச்சி - 1994 காமராஜர் அரங்கம்.
கர்நாடக சங்கீத கச்சேரிகள் மட்டுமே நடைபெறும் மதுரை தமிழிசை சங்கத்தில் முதல் முறையாக எமது இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது - 1994 இராஜா முத்தையா மன்றம்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மடிப்பாக்கம் ஏரியில் ஏரியின் நடுவே தண்ணீரின் மேலே அமைக்கப்பட்ட மிதக்கும் இசைக் கச்சேரி - 1994 மடிப்பாக்கம்.
நகைச்சுவை அரசன் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் தலைமையில் கேலி கிண்டல் பாடல்கள் - 1994 காமராஜர் அரங்கம்.
நடிகர் டூயட் ரமேஷ் அரவிந்த் தலைமையில் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் பிறந்த நாளுக்கு கமல் பாடல்கள் மட்டும் - 1995 கலைவாணர் அரங்கம்.
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் எஸ்.பி.பி.ஹிட்ஸ் ஒன்லி - 1995 காமராஜர் அரங்கம்.
நவரச நாயகன் கார்த்திக் தலைமையில் மணிரத்னம் பாடல்கள் மட்டும் - 1995 காமராஜர் அரங்கம்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தலைமையில் பக்தி இசைப் பாடல்கள் மட்டும் - 1995 ராணி சீதை மன்றம்.
கவியரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் ராசாவும் ரோசாவும் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மட்டும் இடம் பெற்ற மே தின சிறப்பு நிகழ்ச்சி - 1995 அண்ணாமலை மன்றம்.
கோகோ கோலா குளிர்பானம் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியாவிற்குள் வந்த போது அதன் அறிமுக விழாவாக இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா தலைமையில் கோகோ கோலா டு இந்தியா - 1995 ராஜா முத்தையா மன்றம்.
தேனிசைத் தென்றல் தேவா தலைமையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ரஜினி ஹிட்ஸ் - 1995 காமராஜர் அரங்கம்.
இலங்கையில் கொழும்பு மாநகர் அரிமா சங்கத்தின் (லயன்ஸ் கிளப் ஆப் கொலம்போ) அழைப்பின் பேரில் திரைப்பட நடிகை கஸ்தூரி, கோவை சரளா, நடிகர் சார்லி மற்றும் பின்னணிப் பாடகர்கள் சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது, மின்மினி, சிந்து இவர்களுடன் கொழும்பு சுகததாசா உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான இசைப் பேரணி - 1995 கொழும்பு.
ஃபேன்டா குளிர்பானம் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியாவிற்குள் வந்த போது அறிமுக விழாவாக ட்ரக் வண்டிகளில் சென்னை நகர வீதிகளில் வெல்கம் டு இந்தியா - 1995.
சன்.டி.வியில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் அமீது அவர்கள் இயக்கி நடத்தும் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு - 1995 - 1996 அண்ணா அரங்கம் சென்னை.
6 - லிருந்து 66 - வரை என்ற தலைப்பில் 6 - வயதிலிருந்து 66 - வயது பாடகர்கள் பாடியது - 1996 காமராஜர் அரங்கம்.
ஆனந்த விகடன் ஆதரவால் புதுமைப் பெண் ரேவதி தலைமையில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பெண்களுக்காக நடத்தப் பட்ட லேடீஸ் ஸ்பெஷல் - 1996 காமராஜர் அரங்கம்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் டி.வி.எஸ் - ரோட்டரி கிளப் இணைந்து இளையதிலகம் பிரபு தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்திய 40 சினிமா நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட டி.வி.எஸ்.எக்ஸ் எல் நட்சத்திர இரவு - 1996 மதுரை தமுக்கம் மைதானம்.
ராஜ் டி.விக்காக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க ஆதரவில் உள்ளத்தை அள்ளித் தந்த நவரச நாயகன் கார்த்திக் தலைமையில் திரை உலகமே திரண்டு வந்து நடத்திய இசை வேள்வியாம் முழுக்க முழுக்க நடிகர், நடிகைகள் மட்டுமே பங்கேற்று பாடிய நட்சத்திரப் பாட்டுக் கக்சேரி - 1996 காமராஜர் அரங்கம்.
பின்னணிப் பாடகர் கலைமாமணி மலேசியா வாசுதேவன், பின்னணிப் பாடகர் கலைமாமணி மனோ பங்கேற்றுப் பாட , தேனிசை தென்றல் தேவா அவர்கள் தலைமையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ரஜினி பாடல்கள் மட்டும் - 1996 காமராஜர் அரங்கம்.
வீரமணி ராஜு, சீர்காழி சிவசிதம்பரம், எல்.ஆர்.ஈஸ்வரி தலைமையில் ஐயப்ப பக்திப் பாடல்கள் - 1996 காமராஜர் அரங்கம்.
ராஜ் சாட் டி.வி. கிளப்பின் சென்னை, சேலம் திருப்பூர் நகர துவக்க விழா நிகழ்ச்சிகள் 1996-1997.
இசைக்குழுவின் 10வது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆதரவற்றோர் இவர்களுக்காக 10 இலவச இசை நிகழ்ச்சி - 1996-1997.
அகில உலக திரைப்பட சம்மேளன துணைத்தலைவர் ஏ.வி.எம்.சரவணன் தலைமையில் 50வது ஆண்டு பொன்விழா காணும் ஏ.வி.எம்.நிறுவனத்தின் ஏ.வி.எம்.விருதுவிழா - 1996 காமராஜர் அரங்கம்.
கவியரசு கண்ணதாசன், கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் வைரமுத்து இணைத்த மூவேந்தர் வழங்கிய முத்தமிழ்ப் பாடல்கள் - 1996 காமராஜர் அரங்கம்.
விஜய் டி.வி. திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய டாப்-10 1996 பாடல்கள் - 1996 பாப்பீஸ் வாலி ஹோட்டல்.
ஆனந்த விகடன் வைர விழாவின் போது எமது குழுவின் லைட்டிங் ஸ்பெஷல் இசை நிகழ்ச்சி 1996 காமராஜர் அரங்கம்.
கலைமாமணி மனோ, கலைமாமணி ஸ்வர்ணலதா, திரைப்பட தாரகை விசித்ரா இவர்களுடன் சென்னை, மதுரை, சேலம்,கோவை நகரங்களில் ஷா வாலஸ் நிறுவனத்தின் ஓல் டாவர்ன் ஷோ டைம் - 1996
விஜய் டி.வி.யில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கிய 60 பின்னணிப் பாடகர்கள் பங்கேற்று பாடிய லலிதாவின் இந்நாள் பொன் நாள் - 1996-1997 அண்ணா அரங்கம்.
இசைக்குயில் பி.சுசீலா, கலைமாமணி மலேசியா வாசுதேவன் பங்கேற்க அன்றும் இன்றும் - 1997 காமராஜர் அரங்கம்.
ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ட்ரீட் பைக் அறிமுக விழாவில் லேசர் நிகழ்ச்சி - 1997 YMCA கிரவுண்ட் ராயப்பேட்டை.
ஐரோப்பிய தமிழ் கலையகத்தின் சார்பாக முதல் முறையாக பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிஸில் இசை உலகில் இரு நிலவுகளான பத்மஸ்ரீ டாக்டர்.கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவருவரும் இணைந்து முதன் முதலாக ஒரே மேடையில் எமது இசைக் குழுவில் பாடிய வரலாற்று சிறப்பு மிக்க சிறப்பு நிகழ்ச்சி 1997 லா பாலைன் பாரீஸ் - பிரான்ஸ்
சுவிட்சர்லாந்து நாட்டின் தமிழ் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவர் இணைந்து பாட, திரைப்பட தாரகைகள் செல்வி.மீனா, விசித்ரா இருவர் நடனமாட மற்றமொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சி - 1997 பெர்ன் - சுவிட்சர்லாந்து.
தமிழ் நாட்டில் திரைப்படம் மற்றும் பல்வேறு பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தம்ப்ஸ் அப் விருதை 1990 ஆம் ஆண்டு முதல் 1998 வரை சிறந்த மெல்லிசை குழுவிற்காக பெற்றுள்ளது.
இசைக்குழு - பொறந்த வீடா, புகுந்த வீடா, ஒரு வசந்த கீதம், உல்லாசம், நாட்டுப்புற நாயகன் ஆகிய திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம் பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இயக்குநர் டி.ராஜேந்தர், இளையவேள் ராதாதவி, நடிகர்கள் நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், மயில்சாமி, தாமு, எஸ்.எஸ்.சந்திரன், சந்திரசேகர், நடிகை கஸ்தூரி ஆகியோர் பல குரல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள்.
15,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்க இசை உலகின் இரு சிகரங்கள் பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பங்கேற்றுப் பாடி சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்த தமிழ் மெல்லிசை உலக வரலாற்றில் சாதனைப் படைத்த இசை நிகழ்ச்சி 1977 - நேரு உள்விளையாட்டரங்கம் சென்னை.

Next >

Back To Index