HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
லஷ்ம்ன் ஸ்ருதியின் ஜாம்பியா இசைப் பயணம்

14-11-2009 - மூன்றாம் நாள் - இசை நிகழ்ச்சி

குழுவினரில் சிலருக்கு காய்ச்சல் உடம்பு வலி இருந்ததால் பகல் முழுவதும் எங்கும் போகாமல் நன்றாக ஓய்வெடுத்தோம். தபலா கலைஞர் கோட்டிக்கு மலேரியா காய்ச்சல் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவர் ஒத்திகையில் முழுவதுமாகக் கலந்து கொண்டிருந்தார். ஐந்து மணிக்கே அரங்கத்துக்கு சென்று நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்தோம். அரங்கம் நிரம்பி வழிய...மாலை 6.45 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. ஜாம்பியா தமிழ் சங்கத்தின் சுதா வைத்தியநாதன் லஷ்மன் ஸ்ருதி குழுவினரை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதல் பாடலாக தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை மாலதி பாடினார். அதைத் தொடர்ந்து ஜனனி ஜனனி பாடலை துரைராஜ் பாடினார். வந்தாரய்யா பெருமாள் (மாலதி) தாயிற் சிறந்த கோயிலுமில்லை (வந்தனா) தாயே கருமாரி (மாலதி) பாடல்களை வெகுவாக ரசித்தார்கள். அடுத்து குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடல்...துள்ளலும் உற்சாகமுமான இந்த பாடலுடன் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆறு பக்திப் பாடல்களுக்குப் பிறகு புதிய திரைப்படங்களில் இருந்து பாடல்களை பாட ஆரம்பித்தோம். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம்) அழகாய் பூக்குதே (நினைத்தாலே இனிக்கும்-புதியது) பாடல்களுக்கு இளைஞர் பட்டாளம் ஆட்டம் போட்டது. சிறுமி வந்தனா கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் இருந்து உன்னைக் கண் தேடுதே பாடலை பாடி முடித்தத்தும் ரசிகர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


     மாலதி, துரைராஜ், வந்தனா இசை நிகழ்ச்சி

தமிழ் சங்க தலைவர் கார்த்திக் கௌரவிக்கப் படுகிறார்

கந்தசாமி படத்தில் இருந்து அலேக்ரா  எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமி  வில்லு படத்தில் இருந்து டாடி மம்மி  தீம்தனக்க தில்லானா பாடல்கள் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தன. இளையராஜாவின் இளைய நிலா பொழிகிறது மச்சான பாத்தீங்களா பாடல்கள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தன. குடியிருந்த கோயில் படத்திலிருந்து ஆடலுடன் பாடலை பாடல் அரங்கத்தை அமர்க்களப்படுத்தியது. நிகழ்ச்சி சிறப்பாகப் போய்க் கொண்டிருந்த நிலையில்  திடீரென ஒரு ஆம்ப்ளிபையர் வேலை செய்யவில்லை. அதை சரி செய்ய முயற்சி செய்துகொண்டிருந்த போத  லேசாகப் புகை வரத் தொடங்கி...கடைசியில் தீப்பிடித்து எரியத் தொடங்கிவிட்டது. மாற்று ஆம்ப்ளிபயர் சரியாகப் பொருந்தவில்லை. நிகழ்ச்சிகளின் இடையே இதுபோல பல இடையூறுகளை சந்தித்த அனுபவம் இருந்ததால்  பதற்றம் அடையாமல் அதிக சத்தம் தேவைப்படாத மெல்லிசைப் பாடல்களாகத் தேர்வு செய்து பாட வைத்தேன்.
பொதுவாக கொஞ்சம் வயதானவர்களுக்காக...முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக இங்கே வந்து குடியேறியவர்களுக்காக ஒரு பாடல் என்று அறிவித்தேன்... அப்போது ஒருவர் எழுந்து நான் ஜாம்பியா வந்து 45 ஆண்டுகள் ஆகிறது என்று கூற எல்லோருக்கும் ஆச்சரியம். உடனே நான் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக வந்த அன்பே வா படத்தில் இருந்து ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை உங்களுக்காக சமர்ப்பிக்கிறோம் என்று பாடினோம். ரசிகர்களில் சிலர் முன்பக்க இருக்கையை சாரட் வண்டியின் குதிரையை பிடித்து ஓட்டுவதைப் போல செய்தபடி ரசித்தது வித்தியாசமாக இருந்தது.கண்ணே கலைமானே பாடல் பாடப்பட்டபோது அரங்கத்தில் அப்படி ஒரு அமைதி. யேசுதாசும் இளையராஜாவும் சேர்ந்து தாலாட்ட... கண்ணை மூடி ரசித்தார்கள்.

நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பாடல் வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்காக அம்மா என்றழைக்காத  பொதுவாக எம்மனசு தங்கம் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்களை வழங்கினோம். இதில் அம்மா என்றழைக்காத பாடல்... தலைவர் கார்த்திக் விருப்பத்துக்கிணங்க பிரத்தியேகமாக அறிவிப்பு செய்து வழங்கினோம்.

என் பேரு மீனா குமாரி  மன்மத ராசா  டாக்டர் விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணனின் நாட்டுப்புற பாடல் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆம்ப்ளிபயர் சரியாகட்டும் என்று அந்த பாடல்களை தள்ளிப் போட்டு வந்தேன். இடைப்பட்ட நேரத்தில் ஜாம்பியா தமிழ் சங்கம் சார்பில் லஷ்மன் ஸ்ருதி கலைஞர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கவுரவப்படுத்தினார்கள். தமிழ் சங்க தலைவர் கார்த்திக்குக்கு லஷ்மன் ஸ்ருதி சார்பில் மாலை அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கி கவுரவம் செதோம்.

நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களான

பயோ குரூப்
கென்யா ஏர்லைன்ஸ்
லீசிங் பைனான்ஸ் கோ லிமிட்டட்
ரிலையன்ஸ் டெக்னாலஜி லிமிட்டட்
சேபிள் டிரான்ஸ்போர்ட்ஸ் லிமிட்டட்
சவுத் கேட்

நிறுவனங்களின் நிர்வாகிகளும் கவுரவிக்கப்பட்டனர்.


சுமார் முக்கால் மணி நேரம் கழித்து ஆம்ப்ளிபயர் ஒருவழியாக சரி செய்யப்பட்டுவிட்டது. இந்த இடையூறுக்காக மிகவும் வருந்துகிறேன். இழந்த அந்த நிமிடங்களை ஈடு செய்யும் வகையில்  கூடுதலாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பாட நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் விரும்பினால் நாளை வந்து பாடவும் தயார். என்ன சொல்கிறீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டேன். நிகழ்ச்சியை தொடருங்கள். எவ்வளவு நேரமானாலும் நாங்கள் தயார் என்று ரசிகர்கள் உற்சாகமாகக் கூறினர்.

அவர்கள் ஆவலாகக் காத்திருந்த மன்மத ராசா பாடலை ஆரம்பித்ததும் அரங்கமே


மன்மதராச பாடலின் போது மாலதி

ஆட்டத்தில் அதிரத் தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த ஆப்ரிக்கர்களும் அந்த பாடலுக்கு நடனமாட ஆரம்பிக்க...கொண்டாட்டமாக இருந்தது. ஒன்ஸ் மோர் கேட்க மீண்டும் பாடி அவர்களை திருப்திப்படுத்தினோம். ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும்  ஆதரவும் பாடலைப் பாடிய மாலதியை நெகிழ வைத்துவிட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பாச்சி படத்திலிருந்து கும்பிட போன தெய்வம், கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் தகதகவென ஆடவா பாடல்களை மாலதி பாட  ரசிகர்கள் ஆட்டம் போட்டனர். மாலதி - வந்தனா இணைந்து வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தின் கண்ணும் கண்ணும் கலந்து போட்டிப் பாடலைப் பாடி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினர். காதல் ஓவியம் படத்தின் சங்கீத ஜாதி முல்லை - பாடல் துரைராஜின் குரலில் ரசிகர்களை உருக வைத்தது.


     மன்மதராச பாடலுக்கு ஆப்பிக்கர்களின் நடனம்

 

தமிழ் பாடல்களுடன்

ஆ அண்டே அமலாபுரம் (ஆர்யா - தெலுங்கு)
தும்பி வா (ஓலங்கள் - மலையாளம்)
தூம் மச்சாலே (தூம் - இந்தி)
ஜோதி அல்லி (கீதா - கன்னடம்)

என பிற மொழிப் பாடல்களையும் பாட  எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தினோம். ஒரு கட்டத்தில  அரங்கில் குறைவான ரசிகர்களே இருந்தனர். சரி...நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்வது அங்கு வழக்கமாம். அரங்கு மீண்டும் நிறைந்துவிட்டதால்  மேலும் ஒன்றரை மணி நேரத்துக்கு நிகழ்ச்சியைத் தொடர்ந்தோம். நிறைவு செய்யும் விதமாக ஆசை நூறு வகை...பாடலை வழங்கினோம். ஒட்டுமொத்த அரங்கமும் ஆட்டம் போட்டது. மொத்தம் ஐந்தரை மணி நேரத்துக்கு நடந்த நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

ஜாம்பியா தமிழ் சங்க நிர்வாகி ஸ்ரீராம் நன்றியுரையை தொடங்கியபோது நேரம் அதிகாலை 1.15 மணி. அவர் மேடை முழுவதும் நடந்தபடி...வெகு இயல்பாக பேசிய விதம் தனித்தன்மையுடன் வித்தியாசமாக இருந்தது. ஒலி  ஒளி அமைப்பாளர்கள  தொழில்நுட்ப நிபுணர்கள்  அரங்க அமைப்பில் உதவியவர்கள் என்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியேறத் தொடங்கிய ரசிகர்கள் கூட பொறுமையாக நின்று அவர் பேசுவதைக் கேட்டனர்.

ஆம்ப்ளிபயர் சேதம் அடைந்தபோது  நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செயல்பட்ட விதமும் குறிப்பிடத்தக்கது. பதற்றம் அடையாமல் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்தது அவர்களின் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியது. அந்த சமயத்தில்  ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில் ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் பானங்களையும் வழங்கினர். இது எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒரு நடைமுறையாக இருந்தது. மேடை சம்பந்தப்பட்ட விஷயங்களை சேகர் என்பவர் சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்.அவருக்கு உதவியாக டெய்ஸ்கே டெய்ஸ்கே என்ற ஆப்ரிக்கர் உதவியாளராக இருந்தார். ரசிகர்களுக்கும் இசைக் குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டார் பாபு. சங்க தலைவர் கார்த்திக் எப்போதும் சிரித்த முகத்துடன் ஒட்டுமொத்த பொறுப்பையும் தோளில் சுமந்தார். மயூர் மற்றும் அவரது சகோதரர் லால்ஜி உள்பட மேலும் பலரும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் லஷ்மன் ஸ்ருதி சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சியின் டிவி கவரேஜுக்கு ஜாம்பியா அரசு தொலைக்காட்சி நிறுவனமான டிவிடா பொறுப்பேற்றது. ககுசா தலைமையிலான டிவி குழுவினருக்கும் எங்கள் நன்றி.

* போட்ஸ்வானா நாட்டின் தமிழ் சங்க உறுப்பினர் மணிமாறன் 1600 கி.மீ. காரிலேயே பயணம் செய்து எங்கள் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தார்.


* ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு போய் விடலாம் என்றுதான் வந்தேன். நாளைக்கு அலுவலகம் வேறு போக வேண்டும். அப்படி இருந்தும்  என்னால் நகர முடியவில்லை. முழுவதுமாக ரசித்தேன். இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது என்றார் ஒரு ரசிகர்.

* லுஸாகாவில் இருந்து 300-400 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களில் இருந்து பலர் வந்திருந்தனர். எங்கள் மொழியிலும் ஒரு பாடலை பாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி என்று தெலுங்கு  கன்னடம்    மலையாளம்  இந்தி ரசிகர்கள் எங்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர். எல்லோருடனும் இணைந்து புகைப்படம் எடுத்து முடித்தபோது அதிகாலை 2.30 மணி. அதன் பிறகே  இரவு உணவை முஸ்கான் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் பரிமாறினர்.

நிகழ்ச்சியில் தங்களை வெகுவாகக் கவர்ந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்ட சில அம்சங்கள்...

* வந்தனா கார்ட்லெஸ் மைக் பயன்படுத்தி நாக்க முக்க பாடலை பாடியது.

* துரைராஜின் கண்ணே கலைமானே

* டிரம்ஸ் சுரேந்தரின் சோலோ அதிரடி.

* கே.பி.சுந்தராம்பாள்  விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்  எஸ்.ஜானகி  எல்.ஆர்.ஈஸ்வரி பி.சுசீலா  சுனிதி சவுகான  ஜிக்கி... என பலரது குரல்களில் மாலதி பாடி அசத்தியது.

* எனது 15 நிமிட மிமிக்ரி.


                 லஷ்மன் பலகுரல் நிகழ்ச்சி
                 நிரம்பி வழிந்த ஹிந்து அரங்கம்

12, 13, 14, 15, 16-11-09           Back to Index