Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குனர் ஆர். பாண்டியராஜனுடன் நேர்காணல்
 

1) தங்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் எது?

கன்னி ராசி

2) தங்கள் இயக்கத்தில் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள் எவை?

கன்னிராசி - 105 நாட்கள்
ஆண்பாவம் - 225 நாட்கள்
பாட்டி சொல்லை தட்டாதே - 175 நாட்கள்
காலம் மாறிப்போச்சு - 225 நாட்கள்
மனைவி ரெடி - 100 நாட்கள்
கதாநாயகன் - 100 நாட்கள்
ஊரைத்தெரிஞ்சுக்கிடேன் - 135 நாட்கள்
வாய்க்கொழுப்பு - 120 நாட்கள்

3) தங்கள் இயக்கத்தில் வெளிவந்த குறும்படம் எது?

மகன் 2002.  ஹைதரபாத்தில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  இத்திரைப்படம் ”ஃபில்ம் டிவிஷன் ஆஃப் இந்தியா” ஆல் வாங்கப்பட்டது. நடிப்பு மூன்றாவது மகன் பிரேமராஜன்.

 2007 ஆம் ஆண்டில் “இருதுளிகள்” என்ற குறும்படம் இயக்கியது.
இத்திரைப்படம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

4) தங்களின் பிறந்த ஊர் எது?

சைதாப்பேட்டை சென்னை.

5) தாங்கள் முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கே. பாக்யராஜ் அவர்களின் உதவியாளர் பழனிச்சாமி அவர்களிடம் தூறல் நின்னு போச்சு படத்துக்காக முன்பணம் 150 ரூபாய்.

6) தாங்கள் முதன் முதலில் வாங்கிய பெரிய சம்பளம் எவ்வளவு?

கன்னி ராசி கதை, வசனம், இயக்கத்திற்கு 12,000 ரூபாய்

7) தங்கள் வாழ்நாளில் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து என தாங்கள் எதை பாதுகாத்து வருகிறீர்கள்?

மக்கள் திலகம் என்னுடைய கைகளில் முத்தமிட்டது. அந்த புகைப்படத்தை இன்று வரை பாதுகாத்து வருவது.

8) தங்களுக்கு பிடித்த புத்தகம் அல்லது தாங்கள் படித்ததில் பிடித்த புத்தகம் எது?

'வாழ்வியல் நிகழ்ச்சிகள்' பேராசிரியர் கு. ஞான சம்பந்தன் எமுதியது.
’யாவரும் கேளீர்’ ரவிவர்மன் எழுதியது.

9) தாங்கள் வாங்கிய விருதுகள் யாவை?

ஆண்பாவம் - சிறந்த புதுமுகம் (சினிமா எகஸ்பிரஸ்)
கோபாலா கோபாலா - சிறந்த வசனகர்த்தா (தினகரன் விருது)

10) தாங்கள் திரைப்படத்தில் பாடிய பாடல் எது?

எல்லாரும் எல்லாருக்கும் (நெத்தியடி)

11) தாங்கள் திரைப்படத்திற்காக எழுதிய பாடல் எது?

பாக்கெட்டில் பத்து காசு இல்லேண்ணா (நெத்தியடி)

12) தாங்கள் இதுவரை எந்தெந்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?

நெத்தியடி

13) தங்களுடைய உதவியாளர் யார்?

ராஜா , சுருளி

14) தாங்கள் உருவாக்கிய இயக்குனர்கள் யார்?

அவர்கள் சொல்ல வேண்டும்.

15) தங்கள் முதல் கதாநாயகன் பிரபு பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

என்னையும் இயக்குனராக ஏற்று கொண்ட பெரிய மனிதர்.

16) தங்கள் முதல் கதாநாயகி ரேவதி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

என்னைக் கதாநாயகனாக தூக்கி நிறுத்தியவர்.

17) தங்களது முதல் தயாரிப்பாளர் யார்? அவரைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

'கன்னி ராசி' தயாரிப்பாளர்கள் சண்முகராஜன், மாணிக்கவாசகம். இருவரும் என்னை வைத்து ரிஸ்க் எடுத்தவர்கள்.

18) தாங்கள் இதுவரை நடித்ததில் தங்களுக்கே பிடித்த நடிப்பு எது?

குருநாதர் கே. பாக்யராஜ் கதைவசனத்தில் நடித்த 'தாய்க்குலமே தாய்க்குலமே'

19) தற்போதைய சினிமா பற்றி என்ன கருதுகிறீர்கள்?

தொழில்நுட்பம் உலக தரத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது இன்னொரு பக்கம் கலாச்சர மதிப்பு குறைந்து வருகிறது.

20) ஐம்பது வருடத்திற்கு முன்பாகவே நீங்கள் திரை உலகில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அப்போதும் நடித்து சிரிக்க வைத்திருப்பேன்.

21) சரித்திர, புராண படங்களில் நடிக்க நேர்ந்தால் எந்த வேடத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

தெனாலிராமன

22) கடவுள் வேடங்களில் நடிக்க நேர்ந்தால்?

நாரதர்

23) ரஜினி, கமல் இருவரிடமும் தங்களுக்குப் பிடித்த ஒத்துப் போன ஒரு நல்ல குணம் எது?

சிறந்த உழைப்பாளிகள்

24) திரை உலகில் யாருடைய திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்?

வைரமுத்து, இளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான்.

25) தங்கள் வாழ்வில் தாங்கள் உச்சகட்ட சந்தோஷம் அடைந்தது எப்பொழுது?

விழாக்களுக்கே அதிகம் செல்லாத இயக்குனர் மணிரத்னம் 'கோபாலா கோபாலா' வெற்றி விழாவில் என்னைப் பற்றி பேசியது. மணிரத்னம் பேசியது மூன்று தோல்வி படங்கள் கொடுத்த பிறகு ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்து பாண்டியராஜன் நீங்கள் இயக்குவதாக இருந்தால் தேதி தருகிறேன் என்கிறார் இயக்குவீர்களா என்று கேட்டார் அந்த நன்றிக்காக.

26) தாங்கள் வீட்டில் தனியாக இருக்கவேண்டிய தருணங்களில் என்ன செய்வீர்கள்?

தொலைக்காட்சி, இணையதளம், தொலைபேசி இவைகளுடன் உலகின் பல பாகங்களுக்கு செல்வேன்.

27) தங்கள் வீட்டில் இன்னொரு கதாநாயகன் ப்ரித்விராஜன் இருப்பதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னை யாரும் ஜெயிக்க அனுமதிக்க மாட்டேன் என் மகன்களைத் தவிர.

28) தங்கள் திரைக்கதையில் தங்களால் தீர்க்க முடியாத இடங்களில் தங்களுக்கு யோசனை சொன்ன உதவி இயக்குனர் யாரேனும் இருக்கிறார்களா?

பாலகிருஷ்ணன் முகில் ராஜாமணி, சுப்ரமணியம் இப்படி பல உதவி இயக்குனர்கள்.

29) தங்கள் படத்தை தியேட்டரில் பார்த்ததில் தங்களால் மறக்க முடியாத அனுபவம் எது?

வெற்றி படமான 'ஆண்பாவம்' படத்தை முதல் நாள் காலை காட்சியில் 19 பேருடன் பார்த்தேன். இரவு பல்லாவரம் தேவியில் ஹவுஸ்புல் வெளியில் ஒரு தியேட்டர் ஜனம். படம் முடிந்து வெளியே வர முடியாமல் திணறியது.

30) வெளிநாடுகளில் எங்காவது மாட்டிக்கொண்டு தவித்த அனுபவம் தங்களுக்கு இருக்கின்றதா?

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு தவித்த போது ஆபத்பாண்டவனாய் வந்து காப்பாற்றிய நண்பர் திரு.பஷீர் இன்று வரை குடும்ப நண்பராய் இருப்பவர்.

31) இதயமே அதிரும் அளவுக்கு தங்களைப் பாதித்த சம்பவம்?

என் தந்தையின் மரணம்.

32) தாங்கள் தொலைக்காட்சி தொடர் இயக்குவதாக இருந்தால் அந்த தொடர் எப்படி இருக்கும்?

பெரியவர்களும் என் தொடரை பார்ப்பதை தொடர்வார்கள்.

33) தங்களுக்கு சினிமாவைத் தவிர வேறு தொழில் நடத்திய அனுபவம் இருக்கின்றதா?

சினிமாவைத்த தவிர 23 தொழில்கள் நடத்தி லாபம் தவிர மற்ற எல்லாவற்றையும் சம்பாதித்தேன்.

34) தாங்கள் முதன் முதல் வாங்கிய வாகனம் எது?

'முந்தானை முடிச்சு' படத்திற்காக முன்பணம் 2000 ரூபாய் சம்பளம் அதில் 160 ரூபாய்க்கு சைக்கிள். செகண்ட் ஹாண்டு வண்டிதான் வாங்கினேன். அதில் கூட காரில் செல்பவர்களை முந்தி சென்று சந்தோஷப்படுவது இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

35) தாங்கள் முதன் முதலில் வாங்கிய கார் எது?

'ஆண்பாவம்' தயாரிப்பாளர் சுப்ரமணியம் அதன் 100வது நாள் வெற்றி விழாவில் வழங்குவதாக சொல்லி ஏழாவது நாளில் எனக்கு வழங்கிய மாருதி 800 டீலக்ஸ். 1985 ஆண்டில் மறக்க முடியாத விஷயம்.

36) பாக்யராஜ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால்?

பாண்டியராஜன் என்ற ஒரு மனிதன் சமுதாயத்தில் இருந்திருக்க மாட்டான்.

37) தற்போது பாக்யராஜ் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் தங்கள் மனதில் என்ன தோன்றும்?

சந்தோஷம் பயம் ஆச்சரியம் ஆனந்தம்.

38) தங்களுடைய எதிர்கால லட்சியம் என்ன?

இருக்கின்ற நல்ல பெயருக்கு எந்த வித தீங்கும் வராமல் பார்த்துக் கொள்வது மற்றும் மனதுக்குள் ஏராளமான ஆசைகள் உள்ளது நிறைவேறும் போது சொல்வேன்.

39) தங்களது நெருங்கிய ஆனால் பிரபலமில்லாத நண்பர்கள் யார்?

சேதுராமன், கல்யாண சுந்தரம்.

40) பிரபலமான நண்பர்கள் யார்?

லேனா தமிழ்வாணன், வைரமுத்து, கிராண்ட்மாஸ்டர் ஜீ.எஸ்.பிரதீப்,ரவிவர்மா(கேமரா மேன்).

41) தங்களுக்குள் முறிந்த ஆனால் தாங்கள் புதுப்பிக்க நினைக்கும் நட்புக்குரியவர் யார்?

யாருமில்லை.

42) சார்லி சாப்ளின், ஜாக்கிசான் இருவரில் ஒருவருடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடன் நடிப்பீர்கள்?

சார்லி சாப்ளின் அவர்களின் நகைச்சுவையும் தனது ஆக்ஷன் கலந்த நடிப்பையும் இணைந்து வழங்கும் ஜாக்கிசானுடன்.

43) தமிழ்நாட்டில் தங்களுக்கு பிடித்த இடம் எது?

நான் பிறந்த சைதாபேட்டை.

44) தாங்கள் எந்த ஸ்டூடியோவில் வேலை செய்யும்பொழுது மனதிருப்தி உண்டாகும்?

ஏவிஎம். காரணம் அதற்குள் செல்ல நான் பலமுறை பட்ட கஷ்டம்.

45) ஏவிஎம். தங்களை கதாநாயகனா ஒப்பந்தம் செய்த போது தங்களின் மனநிலை?

என்னை நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

46) தங்களுக்கு பாக்யராஜிக்கு பதில் பாரதிராஜாவிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருந்தால்?

எங்கிருந்தாலும் வாழ்ந்து இருப்பேன்.

47) 75 வருட தமிழ் சினிமா பற்றி ஒருவரியில் கூற முடியுமா?

தமிழ் சினிமா தலை நிமிர்ந்திருக்கிறது.

48) இனி வரப்போகும் சினிமா கலைஞர்கள் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முன்னோடிகளின் முயற்சிகளையும் சாதனைகளையும் தெரிந்து கொண்டு சிந்தித்து செயல் படுவார்கள் என்று நம்புகிறேன்.

49) தாங்கள் திரைப்பட கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டால் அங்கே என்ன மாற்றங்கள் செய்வீர்கள்?

பிராக்டிக்கலுக்கான நேரத்தை அதிகப் படுத்துவேன்.

50) திரைப்படங்கள் இல்லாத சமுதாயத்தைப் பற்றி தாங்கள் கற்பனை செய்ததுண்டா?

பாண்டியராஜன் என்ற கலைஞனுக்கு கனவு கூட அப்படி வராது.

51) தங்கள் மகன் தங்களை இயக்கும் நேரம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

சந்தோஷத்தில் நான் மயங்கி விழுவேன்.

52) தங்களது மகன் இயக்கத்திலும் ஜோடி கேட்பீர்களா?

நிச்சயமாக.

53) ஹாலிட்டில்-24மணி நேரத்திற்குள் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தங்களுக்கு சந்தர்ப்பம் தந்தால் என்ன செய்வீர்கள்?

நேரம் அதிகமென்று கூறி குறும்படம் ஒன்றை அழகாக எடுத்துத் தருவேன்.

54) எம்.ஜி.ஆர். ரஜினி, விஜய், இவர்கள் நாயகர்களாக நடிக்க, அசின், சரோஜாதேவி, த்ரிஷா, அம்பிகா இவர்களெல்லாம் நாயகிகளாக இணைய, சுஜாதா திரைக்கதை எழுத, கலைஞர் வசனம் எழுத, வைரமுத்து பாடல் எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரகுவரன், பி.எஸ்.வீரப்பா, ஜீவன் வில்லன்களாக நடிக்க, பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் இவர்கள் இணந்து இயக்க, இதற்கு ஐந்து வரிகளில் தங்களின் கதை என்ன?

ஏன் என்று கேட்கும் கதாநாயகன் எதிர்க்கும் வில்லன், இடையே காதல், மாறாத பாசம், நகைச்சுவை நெடி பரபரக்க ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்னும் இடைவேளை. எந்த வித மனபாரமும் ரசிகனுக்கு இல்லாத சந்தோஷமான க்ளைமாக்ஸில் எம்.ஜி.ஆர் அசின் டாட்டா காட்டி கையசைக்கும் சுபமான முடிவு.

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home