Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
சில பேருக்கு அவர்களுடைய உருவ அமைப்பும் புகழும் கூடுதல் பலத்தைக் கொடுக்கும். எப்பவாவது தனக்குப் பிடிச்ச தங்க நகைகள் வாங்கித் தரச் சொல்வாள் என் மனைவி. அவ என்கிட்ட கேட்கிற சமயத்துல பணப்பற்றாக்குறையில் இருப்பேன். அதனால் நான் அவகிட்ட....

''இதோ பாரும்மா! உனக்கு என்னென்ன நகை வேண்டுமோ, எந்தெந்த டிசைன்ல ஆசையோ அத்தனை டிசைன்லயும் கவரிங் நகையில வாங்கிப் போட்டுக்கிட்டு என்கூட எங்கே வேணும்னாலும் வா! யாராவது இது கவரிங் நகைன்னு சொன்னா... நீ என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன். ஏன்னா நம்மளைப் பொறுத்தவரை பாண்டியராஜன்ங்கற பேர் இருக்குதுல்ல, அதனால அந்தக் கவரிங் நகை கூட தங்கமாத்தான் எல்லோருடைய கண்களுக்கும் தெரியும்'' என்று சொல்வேன்.

சில பேர் தன்னுடைய உருவ அமைப்புக்குப் பொருந்தாத நிஜ வைரக்கல் பதிச்ச தங்க நகையே போட்டிருப்பாங்க. ஆனா அது மத்தவங்களுக்குக் கவரிங் நகையாகத்தான் தெரியும். ஆனா கடவுள் நம்மளைப் பொறுத்த வரைக்கும் கவரிங்கை கூட தங்கமா நினைக்கிற அளவுக்குப் பேரையும், மரியாதையையும் கொடுத்திருக்கான். அதனால அதைப் பயன்படுத்திக்குவோம்.

இரண்டாவது, பணப் பற்றாக்குறை காரணம் மட்டுமல்ல, பாதுகாப்பும் கூட. நாளைக்கு ஒரு செயின் காணாமல் போயிட்டாக்கூட இரு நூறு ரூபாய்தானே போயிடுச்சுன்னு பெரிசா கவலைப் படாம விட்டுடுவோம், என்று என் மனைவிக்குப் பாடம் போதிப்பேன்.

சில பேருடைய சந்திப்பு எனக்குப் பாடமாக அமைந்திருக்கிறது. ஒருமுறை வைரமுத்து அவர்கள் அவருடைய சித்தப்பா திரு. இராஜாராம் பாண்டியன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துக்குப் பிறகு திரு. இராஜாராம் பாண்டியன் அவர்களும் நானும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரும் நிறைய வெளிநாடுகள் சென்று உலக அனுபவம் மிக்கவர்.

கவிப்பேரரசு அவர்களுக்கு இவர் சித்தப்பா என்றாலும் உருவ அமைப்பில், நிறத்தில், பேச்சாறலில் மட்டுமல்லாமல் எதையும் பகிர்ந்து கொள்கிற பரந்த மனசு உட்பட, கவியரசைப் போலவே இவருக்கு பல ஒற்றுமை உண்டு. இவர்கிட்ட பேசினா நாம் பல புது விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். சமீபத்தில் வெளிநாட்டில் அவரைக் கவர்ந்த, என்னையும் கவர வைத்த ஒரு விஷயம்...

பல நாட்டுத் தொழிலதிபர்கள், மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்திருப்பார்கள். முறையான விழா நடப்பதற்கு முன்பாக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசி விவாதித்துக் கொள்வார்களாம். அதாவது உங்க ஊர் எப்படி© சாப்பாடு எப்படி© பழக்க வழக்கங்கள் பண்பாடு எப்படி© காதல், பொருளாதார மேம்பாடு எப்படி© என்று இப்படிக் காரசாரமாகப் பல விஷயங்களை மனம் விட்டு, ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு, இப்ப ''கம் டு தி பாயிண்ட்'' என்று எந்த நோக்கத்திற்காக மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்தார்களோ அதைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்களாம்.

இப்படியொரு பழக்கத்திற்குக் காரணம் மனம் விட்டு பரஸ்பர நட்புடன் பேசி, பகிர்ந்து கொண்டால், ஒரு மிகப் பெரிய ப்ராஜெக்டைப் பற்றி பேசும் பொழுது, எந்தக் கருத்தையும் திட்ட நலனுக்காகக் கூச்சப்படாமல் வெளிப்படையாக, பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு ,இல்லாமல் சொல்ல முடியும் என்கிற கருத்தை என்னிடம் சொன்னார்.

இதைக் கேட்ட பிறகு ஒரு விஷயம் எனக்கு பிடிப்பட்டது. மரியாதை நிமித்தமாகப் பல நல்ல விஷயங்களை நம்மால் தைரியமாகச் சொல்ல முடியாமல் போய்விடும். அதாவது அவர் இருக்கிற போஸ்ட்டுக்கு நாம் போய் இதைச் சொல்லலாமா© என்கிற பயம் வந்து சொல்லாமல் விட்டு விடுவோம்.

சினிமா பட டிஸ்கஷன்ல கூட இந்த மாதிரி சங்கடங்கள் ஏற்படுவது உண்டு. உதாரணத்துக்கு, 'காதலி காதலன் கிட்ட தன்னுடைய காதலை எப்படி வெளிப்படுத்துவாள்' என்பதைச் சொல்ல வேண்டும். நான் ஒரு சீன் நினைச்சுட்டு இருப்பேன். அதைச் சொல்ல நினைக்கும் பொழுது நம்ம லெவலுக்கு நாம சொல்றது டைரக்டருக்குப் பிடிச்சு இருக்குமா© என்கிற தயக்கம் வந்துவிடும். அப்பொழுது இன்னொருவர் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லி விடுவார். அவருக்கு சபாஷ் கிடைத்து விடும். அப்பத்தான் நமக்கு அடடே நம்ம தொண்டைக்குழியிலேயே நின்ன சீனை, சொல்லாம விட்டுட்டோமே என்று வருத்தப்படுவேன். இதற்கு என்ன காரணம்© சகஜமா பயமின்றி சொல்லத் தைரியமில்லை என்பதுதான்.

எல்லாருடைய சிந்தனையும் மூளையும் அந்த நேரத்துல அந்த சீனுக்கு என்ன வேணும்னுதான் தேடிக்கிட்டு இருக்கும். ஆனா இவ்வளவு பெரிய டைரக்டர்கிட்ட சொல்லும் போது, ஏத்துக்குவாரா என்கிற பயம் வந்ததால்தான் மற்றவர்கள் சொல்ல முடியவில்லை. ஒருவர்மட்டும் சரியென்று மனசுக்குப்பட்டதைத் தைரியமாகச் சொல்லிவிட்டார். பாராட்டும் கிடைத்தது.

எனவே, நமக்கு ஆயிரம் விஷயங்கள் தெரிந்தாலும் அதை வெளிப்படுத்துகிற முறை தெரிந்திருக்க வேண்டும். இதற்கு திரு. இராஜாராம் பாண்டியன் அவர்கள் சொன்ன வெளிநாட்டு சம்பவம் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. 

தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home