Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
 'கன்னிராசி' படம் முடிந்து 'ஆண்பாவம்' படத்துக்காக சில ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காததால் பேசாமல் நானே நடித்து விடலாமா© என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது 'கன்னிராசி' படத்தில் நான் கேமிரா ஆங்கிளுடன் இருக்கும் என்னுடைய ஸ்டில்ஸை ப்ரேம் செய்து எடுத்துக் கொண்டு வந்து ஸ்டில்ஸ் ரவியின் உதவியாளர் ஆறுமுகம் என்னிடம் கொடுத்தார்.

கொடுத்துவிட்டு '' சார் அடுத்து நீங்க எடுக்கப் போற படத்துல என்னை ஸ்டில் போட்டோ கிராபரா அறிமுகப்படுத்துங்க'' என்றார்.

நான் நடிக்க நினைக்கும் போது என்னிடம் கரெக்டாக ஸ்டில்ஸ் போட்டோகிரபராக சான்ஸ் கேட்டார். உடனே நான் அவரிடம்'' என்னை மட்டும் அழகா போட்டோ எடுத்துக் காண்பிச்சிரு.. நல்லா இருந்தா நீதான் ' ஆண்பாவம்' படத்துக்கு ஸ்டில் போட்டோகிராபர்னு© உறுதியளித்தேன். அவரும் நான் எதிர்பார்த்தபடியே ஸ்டில்ஸ் எடுத்துக் கொடுத்தார். நானும் சொல்லியபடி'ஆண்பாவம்' படத்தில் ஸ்டில் போட்டோகிராபராக அவரை அறிமுகப்படுத்தினேன். நான் மட்டும்'' சின்ன சின்ன விடு கட்டி'' படத்தில் நம் முகத்தை முடி படம் எடுத்தார்களே என்று மனம் தளர்ந்திருந்தால், ' ஆண் பாவம்' படத்தில் ஹீரோவாக நடிக்க தைரியம் வந்திருக்காது. இதற்கு ஒரே காரணம் தன்னம்பிக்கைத்தான்.

ஒருவருக்கு மரியாதை கொடுக்கிறதுங்கறது, நாம கத்துக்க வேண்டிய சமாச்சாரம் அல்ல. அது நம்மையறியாமலேயே நம்ம கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துடுது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்த மேடையிலும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கமாட்டார். அப்படி இருந்தும் யாரும் பார்த்திருக்க முடியாது.

அதே மாதிரி யாரையாவது பார்த்தா வணக்கம் சொல்றதிலேயும் யார் முதல்ல சொல்றதுங்கற ஈகோவுலேயே டைம் எடுத்துக்குவாங்க. அதனால எனக்கு அந்த மாதிரி பழக்கம் வந்துடக் கூடாதுங்கறதுக்காக சின்னவங்களோ, பெரியவங்களோ முதல்ல ஒரு கும்பிடு போடறதனாலே நன்மை தானே தவிர நிச்சயமா தீமை கிடையாது. போடாம இருக்கறதனால வம்பு வர்றதக்கு வாய்ப்பு உண்டு.அதனால முதல்ல கும்பிடு போடுறதல நான் எப்பவுமே தவறினது இல்லை. இதுக்கு எனக்கு வழிகாட்டியும் உதாரண புருஷரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். அவரை எப்பவாவது சந்திக்கப் போனா, நாம கும்பிடக் கை எடுக்கறதுக்கு முன்னாலேயே அவர் கும்பிட்டுடுவாரு. காரை விட்டு இறங்குற போது, நாம முதலில் கும்பிடலாம்னு நினைப்பேன். கதவு திறந்தால் கும்பிட்டுக்கிட்டே இறங்குவாரு

ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கறதுலேயும் இந்த ஈகோ பிராப்ளம் உண்டு. அவன் என்ன அவ்வளவு பெரிய மனுசனா© அவனை நான் போய்ப் பார்க்கணுமா© அவன் வந்து பார்க்கக்கூடாதா© அந்த அளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிட்டானா© இப்படி யார் வந்து பார்க்கிறது எந்த இடத்துல பார்க்கறதுங்கறதுல நிறைய குழப்பங்கள் இருக்கு.

யோசிச்சுப் பார்த்தா நிறைய வாய்ப்புகளை இழப்பதற்கு இந்த மாதிரி ஈகோ பிரச்சினை காரணமா அமைஞ்சுடும். அதாவது நம்மளை அவங்க ஒரு மரியாதைக்காகக் கூப்பிட்டு இருக்க மாட்டாங்க. நமக்கு நல்லது பண்ணணும், நமக்கு நன்மை செய்யணுங்றதுக்குத்தான் கூப்பிட்டு இருப்பாங்க. ஆனா அவரு கூப்பிட்டு நான் போகணுமாங்கற ஈகோவுல போகாம இருந்தா, தனக்கு வர இருந்த நல்ல வாய்ப்பை இழந்திடுவாங்க. நமக்கு நேரம் கிடைக்காத பட்சத்தில் போகலைன்னா பராவயில்லை.ஆனா நமக்கு நேரம் கிடைச்சு பெரியவங்க, சின்னவங்க, பாப்புலர் ஆனவங்க, சாதாரணமானவங்க அப்படீங்கற பாகுபாடு பார்க்காம, சந்திக்கிறது ரொம்ப நல்ல பழக்கம். இதை ஓரளவுக்கு நான் கடைப்பிடிச்சுட்டு வர்றேன்.

முன்னாடியெல்லாம் யார் எந்த பங்ஷனுக்குக் கூப்பிட்டாலும் போயிடுவேன். ஆனா இப்ப இவரெல்லாம் நம்ம கூப்பிட்டா வருவாரா என்று நினைச்சுக் கூப்பிடுகிற இடத்துக்குத்தான், நான் விரும்பி போய் அவங்களை சந்தோசப்படுத்துவேன். நாம என்ன அவுங்களுக்கு ப்ரெசண்ட் பண்ணோங்கற எதிர்பார்ப்பை விட நம்முடைய ப்ரசெண்ட்டைத்தான் அவுங்க எதிர்பார்ப்பாங்க.

ஏ.வி.எம் சரவணன் சார்கிட்ட பழக வேண்டியதில்லை. பேச வேண்டியதில்லை. அவரைப் பார்த்தாலே நாம நிறைய விஷயங்களைக் கத்துக்கலாம். உதராணத்துக்கு அவர்கிட்டே ஒரு கல்யாணத்துக்குப் பத்திரிக்கை கொடுத்தோம்னா, அந்த நிகழ்ச்சிக்கு வர்றார்னா அன்னிக்கு வந்தாத்தான் தெரியும். ஆனா அவர் வர மாட்டார்ங்கறது நமக்கு இரண்டு நாட்களிலே தெரிஞ்சுடும்.

நாம அழைக்கிற தேதியில அவர் வர முடியலைன்னா உடனடியாக, '' நான் இந்த தேதியில் ஊரில் இல்லை. எனவே தயவு செய்து நான் வரவில்லையென்று வருத்தப்பட வேண்டாம்.என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று கடிதம் எழுதித் தெரிவிப்பார்.

இதனால் அவர் வந்தால் எவ்வளவு சந்தோஷமோ, அவர் வராமலும் அதற்கு ஈடாக சந்தோஷப்படுவார்கள். இப்படிக் கடிதம் எழுதி சந்தோஷப்படுத்தற சம்பிரதாயத்தை சரவணன் சார்கிட்டேத்தான் பார்க்கமுடியும்.

சினிமாவிலேயோ அரசியலிலேயோ அல்லது வேறு எந்த துறையிலேயோ பாப்புலராகிய ஒருவரை எப்பொழுதோ அறிமுகமான ஒருவர் திடீரென்று சந்திக்க வருவார். சந்திக்க வந்தவர் தன்னை யாரென்று கூறாமலேயே '' என்னைத் தெரியவில்லையா©'' என்று கேட்பார். அவரும் யோசித்துப் பார்ப்பார். அந்த சந்திப்பு மறந்து போய் இருக்கும்.காரணம் தினம் நுறு பேரை சந்திப்பதால்.ஆனால் வந்தவர் அப்பொழுதுகூட தன்னை யாரென்று சொல்லாமலேயே மீண்டும்...

என்னைத் தெரியவில்லையா©'' என்று டென்ஷன் படுத்தி எரிச்சலை உண்டாக்குவார். அதற்கு அவர் முதலிலேயே இந்த ஊர்ல இந்த நிகழ்ச்சியில இந்த சந்தர்ப்பத்துல சந்திச்சோம். ஞாபகம் இருக்கா© என்று சொல்லி இருந்தால் ஈஸியா புரியும்.

இது மாதிரி நான் நிறைய அனுபவப்பட்டிருக்கேன். அதனால நான் ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டேன். எங்கே போனலும் யாரைச் சந்திச்சாலும் என்னை அவுங்க நான் யாருங்கறதை தெரிஞ்சு வச்சு இருந்தாலும், அவுங்ககிட்ட நான்தான் பாண்டியராஜன்னு என்னை அறிமுகப்படுத்திக்குவேன். என்னைத் தெரியுதான்னு நாம கேட்கறதை விட, நம்மை யார்னு அறிமுகப்படுத்திக்கிட்டா தப்பில்லை.

தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home