Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
 

இன்று புதுசு - நாளை பழசு.

குளித்து முடித்தவுடன் டவல்....டவல் என்று பாத்ரூமில் இருந்து வரும் அலறல் குரல் இல்லாத வீடுகள் குறைவு என்றே நினைக்கிறேன். இதில் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அடக்கம் தான். பாதி குளியலில் கண்ணில் சோப்பு நுரையுடன் மோட்டர் போடுங்க என்று கத்துவதும் பலரது வழக்கம். இந்த வீடுகளில் சிறுவர்ள் அண்ணன் தம்பிகளாக இருந்தால், இந்தக் கூக்குரல்களால் ஏற்படும் சண்டை சொத்துத் தகராறுக்கு மேல் இருக்கும்.

இதற்கு ஒரே தீர்வு - இன்று பயன்படுத்திய துண்டைக் காயப்போட்டதும், நாளைக்குத் தேவைப்படும் துண்டைப் பாத்ரூமில் வைத்து விடுங்கள். தம்பி குளிக்கப்போகும் போது, டேய், மோட்டார் போடட்டுமா©©என்று அண்ணன் கேட்டால், தம்பிக்கு குற்றால அருவியில் குடும்பத்தோடு குளித்த சந்தோஷம் உண்டாகும்.

இது எங்கள் வீட்டிலும் நடைமுறையில் சாத்தியப் பட்டதில்லை - சண்டை தொடர்கிறது. எழுதியாவது மனதைக் குளிர்ச்சிப்படுத்திக் கொள்கிறேன்.

சில நேரங்களில் நாம் செய்யும் தொழிலில், நம் நண்பர்களோ அல்லது நெருங்கியவர்களோ வேலைக்குத் தேவைப்படுவார்கள்.அப்படி அவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கும்போது, "இந்த வேலைக்குத் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்" என்று கேட்டால், "என்னங்க உங்க விட்ட போய் பணத்தைப் பற்றி பேசுவதா" அதெல்லாம் பின்னால் பார்த்துக்கலாம்" என்றால், நீங்கள் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

நானூறோ, நாலாயிரமோ, வேலைதொடங்கும் முன் பேசி விடுங்கள். நீங்கள் இந்த வேலைக்கு ஆயிரம் ரூபாய் தரலாமென்று நினைத்திருப்பீர்கள். வேலை முடிந்த பின்பு உங்களுக்கு வேண்டப்பட்டவர் கூலாக, இந்த வேலைக்கு நான் வெளியே பதினைந்தாயிரம் வாங்குவேன், நீங்கள் வேண்டப பட்டவர் என்பதால் பத்தாயிரம் கொடுங்கள் போதும் என்று சிரித்த முகத்துடன் கூறினால், அவர் வில்லனா "நீங்கள் வில்லனாகப் போகிறீர்களா" என்ற நிலை வரும். எதற்கு இந்த வம்பு©

வேலை துவங்கும் முன்,©இது என் தொழில். லாபம், நஷ்டம் இரண்டும் கலந்தது. உங்களுக்கு இது வேலை. அதனால் நட்பு - வேண்டப்பட்டவர் என்ற அன்பையும், நன்றியையும் உங்கள் சம்பளத்தில் காட்டுங்கள்© என்று முன் கூட்டியே சொல்லி விடுங்கள். இப்படி நாசுக்காகக் கூறி கொஞ்சம் முன் பணம் கொடுத்து வேலைக்கு கூலி எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தி விடுங்கள். வேலையும் ஒழுங்காக நடக்கும். நட்பும் நடப்பில் இருக்கும்.

ஒரு நண்பர் நாம் அழைப்புக் கொடுத்ததும் நம் வீட்டு விழாவுக்கு வரவில்லையென்றால் அவரை©எதிரி©லிஸ்டில் சேர்த்து விடுவது பலரது பழக்கம். அவர் ஏன்வரவில்லை என்ற காணத்தைக் கேட்டால் தான் தெரியும் உண்மை என்னவென்று! விழாக்களுக்குப் புறப்படும் முன் திடீரென்று மிக முக்கியமான வேலை வந்து விட்டால் நாம் கூட விழாவைத் தவிர்த்து விட்டு வேலையைத்தானே கவனிப்போம். அதனால் ஒரு விழாவிற்கு வரவில்லை என்பதால் பல வருட நட்பை, உறவைத் துண்டிப்பது குறுகிய குணமாகும்.

திட்டமிட்டுச் செயல்படும் பல பிரபலங்களே சில நேரங்களில் கடைசி நேரத்தில் விழாக்களை விட மிக முக்கிய வேலைக்குச் சென்று விடுவதை நான் கவனித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை விழாக்களை விட தொழிலுக்கும், துக்க சம்பவங்களுக்கு ஆறுதல் சொல்வதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

இப்போதெல்லாம் நரைத்த தலைகளைப் பார்ப்பது அரிதாகி வட்டது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்று சொல்ல முடியாத காலம். முடி வெட்டிக் கொள்ளும் போதே டை அடிப்பது பழக்கமாகி விட்டது. இது விஞ்ஞான வளர்ச்சி. மனிதனை இளமையாக்கும் இந்த வளர்ச்சியை வரவேற்பதை விட்டு விட்டு சிலர் கேலி பேசுவது குறும்பு. பழமை நம் கலாச்சாரம் - விஞ்ஞானம் நம் முன்னேற்றம்.

முகத்தில் ©மரு© இருந்தால் கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் வரும். இப்போது மருத்துவம் மருவை மறு நிமிஷமே அகற்றிவிடும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. பக்க விளைவுகள் இல்லாத, பிற்காலத்தில் பிரச்சினையில்லாத எந்த விஞ்ஞான மருத்துவத்தையும் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் உடம்பைக் குறைக்க ஓர் ஆபரேஷன், மூக்கை சரி செய்ய ஓர் ஆபரேஷன் என்று அதே வேலையாக இருப்பார்கள் - இது கொஞ்சம் ஒவர்.

எல்லாருக்கும் ஒரே மாதிரி கண்ணும், ஒரே மாதிரி மூக்கும் இருந்து விட்டால் ஒருவருக்கு ஒருவர் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. பிரச்சினையிருந்தால் மட்டும் சரி செய்து கொள்ளலாம். இரண்டு தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த செய்திகளைப் பார்த்தேன். மருத்துவ முன்னேற்றத்திற்கு மனிதகுலம் தலை வணங்க வேண்டும்.

ஒரு தொழிலில் ஒருவர் வெற்றி பெறாவிட்டால் அவரை வசைபாட இவ்வையகம் தயங்குவதே இல்லை. இது எல்லாத் துறையிலும் பொருந்தும். ஒன்றை யோசியுங்கள்- ஒருவர் மேடை ஏறும் போது இன்று பிரமாதமாகப் பேசித் தன் திறமையை வெளிப்படுத்த நினைப்பாரா© அல்லது இன்று தம் பேச்சால் சொதப்பிவிட வேண்டுமென்று நினைப்பாரா© வெற்றி தோல்வி எல்லார் வாழ்விலும் வரும்.சில சமயம் சாதித்த அறிவாளிகள் தோல்வியைக் கொடுத்தால், தகுதியற்றவர்கள் அவர்களைக் கேலி செய்துபேசும் போது வேதனையாக இருக்கும். ஒரு விஷயம் - வெளியே தெரியும்.

வெற்றியும் உண்டு, மனதிற்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கும் வெற்றியும் உண்டு.

 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home