Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
 

இரண்டு குடும்பத்துக்கு இடையே சண்டை, இரண்டு அணியினர்க்கு இடையே பிரச்சினை. முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் கோரிக்கையில் குழப்பம். இதற்கெல்லாம் சமரசப் பேச்சுவார்த்தை நடப்பதைப் பலரும் பார்த்திருப்போம். முதல் சுற்றிலேயே சமரசம் ஏற்படும் பேச்சுவார்த்தையும் உண்டு. பேச்சு வார்த்தையால் பிரச்சினை பெரிதானதும் உண்டு.

கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பவர்கள் முதலில் தங்களது கோரிக்கைகளைப் பட்டியலிட்டு எது நமக்கு மிக முக்கியமானது, எதை விட்டு கொடுத்தால் நமக்குப் பெரிய பாதிப்பு வராது என்று திட்டமிடுவார்கள். இது வெற்றிக்கு பெரிய வித்து.

என்னுடைய கோரிக்கையில் ஒன்றைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் ©அலை எப்ப ஓயுரது, தலை எப்ப முழுகிறது©© என்ற பழமொழி பழக்கமான மொழியாகிவிடும். விட்டுக் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். சண்டை, பிரச்சினை, மோதல் இதெல்லாம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.

சிலருக்கு தொலைபேசி பில் வந்தவுடன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து விடும். முதலில் தொலைபேசி நமக்குச் செய்கிற நன்மைகளை எண்ணி பாருங்கள். மறைமுகமாமக தொலைபேசி நமக்கு சம்பாதித்துத் தருகிறது என்பதை மறந்து விடுகிறோம்.

பல கோடி வியாபாரங்களைக் கூட தொலைபேசி முடித்துவிடும். அவசரச் செய்திகள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் போன்ற வேலைகளைத் தொலைபேசி மூலம் நாம் முடிக்கும் போது நம்மை டபுள் ஆக்‌ஷன்- இரட்டை வேடம் மாதிரி அல்லவா மாற்றிவிடுகிறது © பக்கத்து நாட்டைப் பக்கத்து வீடாக சுருக்குகிறது. இந்த ...©டிரிங்.....டிரிங்...© ஓசை இல்லையென்றால் காதல் கூட கொஞ்சம் குறைந்து போயிருக்கும்.

நாம் சந்திக்க வேண்டிய நபர் வீட்டில் இருக்கிறாரா© என்று தெரிந்து கொள்ள தொலைபேசி இல்லையென்றால் எவ்வளவு தூம் வீணாகப் போய்வர வேண்டும். அநாவசிய விஷயங்களுக்கும் போனைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வீட்டுப் போன் கட் ஆனால், இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் பாதி ஒதுங்கி விட்டீர்கள் என்று அர்த்தமாகிவிடும். போன் வாங்குவது பெரிதல்ல- உங்கள் நம்பர் எப்போதும் ஒரே நம்பராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தன் தொலைபேசி துண்டிக்கப்படாமல் வாழ்கிறார் என்றால், அவர் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்கிறார் என்று அர்த்தம்.

பலர் குளிப்பதை ஒரு பெரிய வேலையாகக் கருதி, தள்ளிப் போட்டுக் கொண்டே ஒரு வாரம் வரை கூட குளிக்காதவர்களும் உண்டு. ஒரு விஷயம் ! உங்களை வேலைக்குள் தள்ளி விடுவதே குளியல்தான் . குளித்து முடித்து எந்த வேலைக்குப் போகப் போகிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் குளிக்க ஆரம்பித்தவுடன் தானாகவே பதில் கிடைத்து விடும். புயல் போல் புறப்பட்டு விடுவீர்கள்.

மேலும் குளிக்கும்போது தோன்றும் யோசனைகள், திட்டங்கள் பெரும்பாலும் பயனுள்ளதாகவும், நிறைவேறக் கூடியதாகவும் இருக்கும். குளியலைத் தள்ளிப் போட்டால் நீங்கள் சோம்பேறி லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உற்சாகம் குறையும் போது குளித்துப் பாருங்கள்- குளியலின் மகிமை தெரியும்.

இரண்டு நாள் ஷேவிங் செய்யாமல் இருந்தால் நீங்கள் ஏதோ துக்கத்தில் இருப்பது போல் உங்களுக்கே தோன்றும். தாடி பொருந்தியவர்களுக்கு இது பொருந்தாது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, ஷேவிங், குளியல் என்று வேலைக்கு வெளியேறுங்கள். உங்கள் பேங்க் சேவிங் அக்கவுண்ட் கூடும்.

சிலர் தன்னிடம் இல்லாத ஏதோ ஒரு திறமையைச் சுட்டிக்காட்டி, அது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் நான் பெரியாளாகிவிடுவேன் என்று புலம்புவார்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியவில்லை என்றால், அது ஒன்றுதான் வெற்றிக்கு முட்டுக்கட்டை என்று நினைப்பார்கள்.

ஒரு விஷயம், நீங்கள் எதில் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது தான் அறிவு கூர்மை. விதோவன் என்ற மாபெரும் இசை மேதைக்குக் காது சரிவரக் கேட்காது என்ற செய்தி படித்துப் பதறிப் போனேன். உங்கள் குறைகளைத் தெரிந்து, களைய ஆரம்பிக்கும் போதே உங்கள் நிறைகளை மெருகூட்ட ஆரம்பிக்கிறீர்கள். துவண்ட நேரங்களில் நீங்கள் இதுவரை அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்- துள்ளி எழுவீர்கள்.

வெற்றிக்கு இதுதான் பாதை என்று தெரிந்துவிட்டால் எல்லாரும் அதே பாதையில் பயணம் செய்யத் துவங்கி விடுவார்கள். தன்னம்பிக்கை அடைய பணம் காசு செலவு செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக யோசியுங்கள்! பெருமை உங்கள் வீடு தேடி வந்து சேரும் !

வீடுகளில் கதவுகளைத் திறந்து விட்டு, பின் மூடாமல் விட்டு விட்டால் கதவு ©டமார்© என்று அடிக்கும் சத்தம் இருக்கிறதே - வீடே இடிந்து விடும்போல் இருக்கும். கதவு ©படால்© என்று மூடாமல் இருக்க ஒரு புஷ் பொருத்துவோம். அதைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பதால் தான் இந்த ©டமார்© இடி. புஷ் இல்லாத போது ஒரு துண்டுப் பேப்பவரை மடித்து வைத்தால் கூட இதைத் தவிர்க்கலாம்.

சில நேரங்களில் கதவு பின்னாலிருந்து ©தடால்© என்று அடிப்பதால், தலையில் அடிபட்டு பெரிய விபத்து கூட நேரலாம். கதவிடுக்கில் கால் மாட்டினால் கூட வேதனை தானே ! ஜன்னலும் இப்படித்தான்.

 

 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home