Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
 

சின்ன விஷயம் என்று அக்கறை காட்டாமல் இருப்பது தான். நாம் பல நேரங்களில் செய்யும் பெரிய தவறு. ஆம். சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சினைக்கு அஸ்திவாரம்.

சைக்கிளில் காற்று கம்மியாக இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பஞ்சரில் ஆரம்பித்து டயரையே மற்றும் அளவு வளர்ந்திருக்கும். பையன் காலாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் பெயில் ஆகியிருந்ததைக் கவனிக்காமல் விட்டால் ஓர் ஆண்டு வீணாக வாய்ப்பு உண்டு. குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகும் போது அதைக் கவனிக்காமல் விட்டால் காலையில், வீட்டுத் தண்ணீர் டேங்கில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இருக்காது. வீட்டில் செல்(கரையான்) அரிப்பைக் கவனிக்காத ஒருவர் அந்த வீட்டையே விற்றுவிட்டார் என்றால் பாருங்களேன் !

இதிலிருந்து நாம் மனதில் பதிவு செய்ய வேண்டியது சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் தான் பெரிய ஆபத்திலிந்து தப்பிக்கலாம்.

ஓட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுக்கும்முன் விலைப்பட்டியலைப் பார்த்து விடுவது மிகவும் முக்கியமானது. இது சிறிய ஓட்டலிலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை பொருந்தும். சில பொருட்களில் ©ஸ்பெஷல்© என்று ஒரு வார்த்தை சேர்ந்து இருக்கும் . அந்தப் பொருளின் விலையை நிச்சயம் கவனிக்க வேண்டும். ©ஸ்பெஷல்© என்ற வார்த்தைக்கு விலை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதேபோல், தாங்கள் இதற்கு முன் சாப்பிடாததாகவும் இருந்தால் அதைப்பற்றி விசாரிப்பது நல்லது. சில பலகாரங்களின் பெயர் படிப்பதற்குப் பிரமாதமாக இருக்கிறதென்று ஆர்டர் கொடுத்து விடுவீர்கள். ஆனால், அந்தப் பல காரம் உங்கள் டேபிளுக்கு வந்தபிறகு அதன் ருசியே உங்களுக்குப் பிடிக்காமலிருந்தால், காசு வீணாவதோடு சங்கடமும் ஏற்படும்.

எனவே, கூச்சப் படாமல் சாப்பிடுவது போல், சாப்பிடப் போகிற பொருள் எப்பேர்ப்பட்டது. எவ்வளவு விலை என்பதையும் கூச்சப்படாமால் கேட்பது நல்லது.

நாம் தயாரிக்கும் ஒரு பொருள் பிரமாதமாக வியாபாரம் ஆகிறது என்றால், அப்பொருளை விட இன்னும் பிரமாதமான ஒரு பொருளைத் தயாரிக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் நீங்கள் தயாரிக்கும் பொருளைவிட சிறப்பாகவும், விலை குறைவாகவும் ஒரு பொருள் திடீரென்று விற்பனைக்கு வரலாம். அந்தப் பொருள் உங்களை வீழ்த்த வந்ததாகக் கோபப் பட்டால் நஷ்டம் நமக்குத்தான். புதுப்புதுக் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

உங்கள் தயாரிப்பு மக்களிடம் வெற்றிகரமாக இருக்கும் போதே, அடுத்த உங்களது புது வரவுக்காக அறிவை விதைத்து வையுங்கள். நாம் தயாரிக்கும் பொருள் மற்ற பொருட்களிலிருந்து எந்த எந்த விஷயத்தில் தனித்தன்மை கொண்டது என்பது தான் வியாபாரத்தின் வெற்றியாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ரகசியம் மக்களின் ரசனை அதை நாம் ©அறிவு© என்ற பூதக்கண்ணாடி போட்டுக் கண்டுபிடித்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

சிலர் வில்லங்கம் உள்ள சொத்து ஏதாவது விலைக்கு இருக்கா, என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வில்லங்கம் உள்ள சொத்து விலை குறைவாகக் கிடைக்கும் என்பது, இவர்களது பேராசை, பிரச்சனை வந்தால் கோர்ட்டுக்குப் போகலாம். இவர்கள் கோர்ட்டுக்குப் போவதற்காகவே வில்லங்கச் சொத்தை விலை பேசுவார்கள்.

ஒரு முறை கோர்ட்டுக்குப் போகும் போது ஏற்படுகிற மன உளைச்சல் இருக்கிறதே, அந்த வேதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சொத்து விற்கும் போது, ஒருவர் துக்கத்துடன் தான் விற்பார். அவரது இயலாமையைப் பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவது, வாங்குபவருக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் அதுபோல் துரோகச் செயல் வேறு எதுவும் இல்லை. ©நியாயமான விலைக்கு வாங்கும் சொத்துதான் நிலைத்து நிற்கும்© என்ற நிஜத்தைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை.

சொத்து ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பத்திரங்கள் தான் புதிதாகவும், புதுப்பெயருடனும் சேர்ந்து கொண்டே போகின்றன. வில்லங்கச் சொத்து வாங்குபவர்களெல்லாம், நாம் ஏதோ 200 ஆண்டு காலம் வாழப் போகிறோம் என்ற மூட நம்பிக்கையில் தான் கொள்ளை லாபம் அடிக்கும் செயலில் இயங்குகிறார்கள். பெரும்பாலும், நகை வியாபாரிகள் நகையை விற்கும் போது வாழ்த்திக் கொடுப்பார்கள். அந்த மனப்பான்மையோடு சொத்து விற்பவரும் வாழ்த்திக் கொடுக்கும் படி வியாபாரம் நடந்தால் தான், அந்த சொத்து நிலைக்கும்.

சின்ன அளவு வீடாக இருந்தாலும், பங்களா வீடாக இருந்தாலும், வீட்டில் மிக முக்கியமாகப் பராமரிக்க வேண்டிய இடம் ©பாத்ரூம்©. நம் உடம்பில் உள்ள அழுக்கைப் போக்கும் இடம் ©பாத்ரூம்© அதுவே அழுக்காக இருந்தால் எப்படி© அங்கேயே துர்நாற்றம் வீசினால் நம் உடம்பில் உள்ள துர்நாற்றம் எப்படிப் போகும்©

 

  1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home