Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
 

நோய் உருவாகும் இடமும் அதுதான். நோயைக் குணப்படுத்தும் இடமும் அததுன். நம்ம வீட்டுக்கு யாராவது வந்தால், நம் பாத்ரூமைப் பார்த்துப் பாராட்டினால் நீங்கள் அரண்மனையில் வாழ்வது போன்ற ஒரு மகிழ்ச்சி உண்டாகும். பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது அணிச்சை செயலாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் உள்ள வீட்டில் பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது கஷ்டம் தான். கஷ்டத்தைப் பார்த்தால் நாளைக்கு வரும் நோய்க்கு யார் வேதனைப்படுவது © பாத்ரூமைச் சுத்தமாக வைத்து கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். ©நீங்கள் கருமியாகக் கூட இருங்கள். ஆனால் நோய்க்கிருமி வராமலிருக்க பாத்ரூமைச் சுத்தமாகப் பார்த்துங்குங்க.©

புது வருடம் பிறந்தவுடன் இப்போதெல்லாம், இலவசமாக அதிகம் கிடைப்பது டைரிகள் தான். பெரும் பாலானவர்கள் இப்போது கடைப்பிடிக்கும் புதுப்பழக்கம். இந்தாண்டு டைரியை அடுத்த ஆண்டு பயன்படுத்துவது.

அன்பளிப்பாகவோ, இலவசமாகவோ எந்தப் பொருள் கிடைத்தாலும் அதன் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. காற்று இலவசமாகக் கிடைப்பதால் அதைப் பொருட்படுத்துவதில்லை. காற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தால் நம் கதி என்ன© டைரியும் அது போலத்தான். அன்பளிப்பாக வரகிற டைரியையே நாம் பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறோம்.

வரவு செலவுகளைப் பதிவு செய்ய டைரியை விடச் சிறந்த கணக்கர் உண்டா© உங்கள் புரோகிராம்களை எடுத்துச் சொல்ல டைரியை விட சிறந்த சம்பளம் வாங்காத பி.ஏ உண்டா© எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி எண்கள், இன்னும் என்னென்னவோ வசதிகள். எத்தனை பேர் டைரிகள் நமது பெயர், விலாசம், தொலைபேசி எண், ரத்தப்பிரிவு இப்படித் தகவல்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம்©

டைரியை முழுமையாகப் பய்னபடுத்தினால் நீங்கள் ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள் என்றே சொல்லலாம். டைரி எழுதுவது ஒரு வரலாற்றுப் பதிவு. பட்டப் படிப்பு முடித்து வேலை பார்க்கும் ஒருவர். அவரது பத்தாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டும் போது புன்னகை பூப்பது போல டைரி உங்களின் வளர்ச்சியின் அளவுகோல்.

நாம் நேசிக்கும் நபர் மீதோ அல்லது நமது நண்பர்கள் மீதோ சில நேரங்களில் அவர்களது செய்கைகளால் நமக்குக் கோபத்தைக் கொட்டி தீர்க்கும் வகையில் கடுஞ் சொற்களால் எழுதித் தபாலில் அனுப்பி, நமது கோபத்தைத் தனித்துக் கொள்வோம்.

கொஞ்சம் யோசித்தால், ©எதுவும் முடிவல்ல© என்ற பக்குவத்தோடு அவரை நேரில் பார்க்கும் போது, உங்கள் கோபத்தை சூழ்நிலைக்கேற்ப அவரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு சரியான பதிலை அளிக்கலாம். அல்லது, தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் நாம் அவசரப் பட்டுக் கோபத்தைக் கடிதம் மூலம் எழுதியிருந்தால், கடிதம் சின்ன விஷயத்தைப் பெரியதாக்கிவிடும்.

கடிதம் அன்பையும், நட்பையும், வெளிப்படுத்துவதற்கு மட்டுமே அதிகம் பயன் படவேண்டும். கோபக் கடிதங்கள் சில நேரங்களில் கோர்ட்டில் கூட ஒரு சாட்சி ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.

வக்கீலிடமும், டாக்டரிமும் உண்மையை மறைக்கக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால் செயலில் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். என்று பார்த்தால் பாதிக்குப் பாதி கூட இருக்காது.

வக்கீலிடம் பேசும்போது, ©நான் நல்லவன்©, ©நான் நல்லவன்© என்று பாயிண்ட் வைத்தே பேசுவார்கள். தான் செய்த தவறை, ©இது ஒரு தவறா©© என்று மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துப் பேசினால் , உங்கள் வழக்கில் வக்கீல் எப்படி வாதாடி வெற்றி பெறுவார்© செய்த தவறை முதலில் சொல்லி விட்டால் உங்களைக் காப்பாற்ற அவர் முயற்சி எடுப்பார். உங்கள் பலத்தைச் சொல்லுமுன், உங்கள் பலவீனத்தையும் சொல்லி விட்டால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

அதோ போல் தான் டாக்டரிடமும் உங்கள் வீக்னசை சொல்லக் கூச்சப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற முயற்சிப்பவரிடம் என்ன கூச்சம்© இந்த விஷயம் வக்கீலிடமும், டாக்டரிடமும் மட்டும் தான் பொருந்தும், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் உளறிக் கொட்டினால், அது வீண் வம்பில் தான் முடியும்.

பலருக்கும் பயன்படும் தகவல்களைத் தெரிந்து கொண்டால், அதைமற்றவர்களுக்கு சொல்லவே மாட்டார்கள் சிலர். இது குறுகிய மனப்ன்மையாகும். சமுதாயத்தில் அறிவிக்கப்படும் எல்லா பயனுள்ள விஷயங்களும் எல்லோரும் அறிந்து கொள்ளத்தான். ஒரு அப்ளிகேஷன் பார்ம் வாங்கிவிட்டால் கூட, தன் நண்பனுக்கும் சேர்த்தே தன் செலவில் வாங்கும் நண்பனும் உண்டு.

வேகமான உலகில் எங்கே, என்ன கிடைக்கின்றது© எப்படி வாங்குவது© என்பதை அறிந்தால், தெரியாதவர்களுக்குத் தெரியபடுத்துங்கள். அது தர்மத்துக்கு நிகரானது. ஒருவருக்கு வேலை கிடைக்க நீங்கள் வழிகாட்டிப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கை வளப்படும்.ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உதவி புரிந்து பாருங்கள். உங்கள் மனம் குழந்தை மனசாக மாறும்.

நாம் மட்டுமே முன்னேற வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்© என்ற எண்ணத்துக்குத் தீனி போட்டால், நீங்கள் ஒரு வகை மிருகமாக மாறி வருகிறீர்கள் என்று அர்த்தம். மனிதன் என்ற பெயர் உங்களுக்குப் பொருந்தாது.

சிலர் அவசரத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ கேட்பார்கள். இது ஒரு உதவி என்று அவர்களும் பெருந்தன்மையுடன் கொடுப்பார்கள். எப்போதாவது இப்படி உதவி கேட்பதில் தப்பில்லை. சிலர் எப்போதுமே ஏதாவது காரணம் சொல்லி ஓசியில் வண்டி கேட்டு உபத்திரவம் செய்வதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள்.இது ©புத்திசாலித்தனம்© என்ற பெயரில் செய்யும் பிராடுத்தனம்.

 

 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home