நம்மை முழு மனிதனாக்கிப் பத்து மாதம் நம் வாரிசை வயிற்றில்
சுமக்கும் நம் மனைவிக்காக உழைத்துக் கொண்டிருக்க வேண்டும். நாம்
பட்ட கஷ்டம், நம் சந்ததிக்கு வரக்கூடாது என்பதற்காக வேர்வை
சிந்திக் கொண்டிருக்கிறோம்.
இதைப் புரிந்து கொண்டால்,
போர்வைக்குள் உறங்காமல் வேர்வை சிந்தப் புறப்பட்டவிடுவீர்கள்.
கண்ணீரும்
வேர்வைக்கும் ஓர் ஒற்றுமை உண்டு ! இரண்டும் உப்புகரிக்கும்...
வேர்வையை அதிகரித்தால்
கண்ணீர் குறையும்...உழையுங்கள்...உழையுங்கள்....!
எந்தக் காரியத்திலும்
உடனே வெற்றி கிட்ட வேண்டும் என்று நம் உள்ளம் துடிக்கிறது. அது காலதாமதமானால் ©விரக்தி©
வந்து வாழ்க்கையின் வழக்கமான வேலைகளில் நம் கவனம் குறைகிறது. புலம்பல்கள் புயல்
வேகத்தில் புறப்பட்டு விடுகின்றது. கிரிக்கெட்டில் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக்
கவனியுங்கள். விளையாடப் போகும் குழந்தைகள் தாங்கள் மட்டையைப் பிடித்தவுடன் எல்லாப்
பந்தையும் சிக்ஸர் அடிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நான்காவது அடிக்க
வேண்டுமென்ற ஆசை வேகத்துடன் செல்வது வழக்கம் . ஆனால் அதிகக் கவனத்துடன் உஷாராக ஒரு
பந்தையும் வீணாக்காமல் ஒரே ஒரு ரன்னாக எடுத்து
விடலாம் என்று ஆடத் தொடங்கினால் அந்தக் குழந்தைக்கு அதிக ரன்னும் கிடைக்கும்,
அதிஷ்டமிருந்தால் சிக்ஸரும் கிடைக்கும்.
சந்தோஷப்பட வேண்டிய
விஷயங்கள் நம்மைச் சுற்றியே இருந்தாலும், இல்லாத ஒன்றைத் தேடி சோகத்தைக் கட்டிப்
பிடித்து ஒப்பாரி வைக்கிறோம். உதாரணத்திற்கு, தலைமுடி கொட்டியவர்கள் சிலர் தலைமுடி
நிறைய உள்ளவர்களை ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், நீங்கள் எந்தத் தண்ணீரில்
குளிக்கிறீர்கள்© என்ன ஷாம்பூ உபயோகிக்கிறீர்கள்© எந்த எண்ணை தேய்க்கிறீர்கள்© என்று
நச்சரிப்பார்கள். ஆனால் இவர் தனக்குத் தலைமுடி நிறைய இருந்த போது ஒரு நாளாவது
கண்ணாடியைப்ப பார்த்து
சந்தோஷப்பட்டிருப்பாரா என்றால்
இருக்காது.
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பபட்ட ஒருவர் அரை கிளாஸ் கஞ்சி குடிப்பதாகப் கேள்விப்பட்ட அவர்
உறவினர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததற்காக சாமியெல்லாம் கும்பிட்டு
சந்தோஷப்படுவார்கள். ஆனால் அதே நபர் நோய் வருவதற்கு
முன்பு 20 இட்லியும், 10 பரோட்டாவும் சாப்பிட்டிருப்பார். அப்போத இதே உறவினர்கள்
"எவ்வளவு சாப்பிடுகிறான்
, தரித்திரம் பிடித்தவன்"
என்று அர்ச்சரித்திருப்பார்கள்.
"நன்றி கெட்டவர்கள்"
இது நாம் அடிக்கடி பயன்படுத்தும்
வார்த்தை. நம்மிடம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் நெருங்கிப் பழகியவர்கள் நம்மை
விட வளர்ச்சி அடைந்த பின்பு நம்மை மதிக்காமல் போனால், அவர்களையே நினைத்து
நன்றியில்லாதவர்கள் என்று ஆதங்கப்பட்டுப் புலம்பிக் கொண்டேயிருக்கிறோம். ஒரு
விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மிடம் பழகும் போது என்றாவது நான் உயர்ந்த
பிறகு உங்களிடம் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியிருக்கிறாரா© நன்றியோடு இருப்பது
அவரவர் தனித்தன்மை. நாம் அந்தத் தனித்தன்மை படைத்தவரா என்று தினமும் பரிசோதித்துக்
கொள்வோம்.
பலர்
வேலை பார்க்கும் இடங்களில் தங்கள் தகுதிக்கேற்ற வேலை
இதுவல்ல என்று புலம்பிக் கொண்டே முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்க மாட்டார்கள்.
மேலும் பெரிய கம்பெனியில் அப்ளிகேஷன் போட்டிருப்பதாகவும், அந்த வேலைக்குப் போன
பிறகு தனது முழுத்திறமையும் எல்லோருக்கும் தெரியும் என்பார்கள். அதனால் செய்யும்
வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். திடீரென்று
தற்போதுள்ள வேலையும் போய்விடும் அல்லது நீக்கப்படுவார்கள். இதற்குக் காரணத்தை
ஆராய்ந்தால் இந்த வேலையில் இவர் முழு ஈடுபாட்டுடன் இல்லாததே ஆகும். ஆகாய
விமானத்தில் பறக்கப் போகும் பிராயணி வீட்டிலிருந்து ஆட்டோவிலோ அல்லது காரிலோ தான்
விமான நிலையம் செல்ல வேண்டும். விமானம் வீட்டுக்கு வந்து ஏற்றிச் செல்லாது என்பதை
உணர்ந்தால் மேலே சொன்னவை விளங்கும்.
நீங்கள் சினிமாவுக்கு
வராமலிருந்தால் என்ன வேலைக்குப் போய் இருப்பீர்கள்© என்று பலர் என்னைக் கேட்டதுண்டு
சினிமா வாய்ப்பு தேடும் வேலையில் இருப்பேன் என்று பதில்
அளித்திருப்பேன்.
தியாகிகளைப்
பாராட்டுகிறோம், வணங்குகிறோம். ஆனால்,
நாம் தியாகியாக இருப்பதில்லை. குறைந்த பட்சம் குடும்பத்தில் தியாகத் தன்மையுடன்
நடந்து கொண்டால் போதும். பிரிவு, மனமுறிவு என்ற அரக்கனை விரட்டலாம்.
|