Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 

சிலர் பேரம் பேசி அடிமாட்டு விலைக்குக் கேட்டு திட்டு வாங்குவார்கள். சிலர் விலையைக் குறைத்துக் கேட்டு விட்டு மெதுவாக வேறு கடைக்கு நடப்பார்கள்; கடைக் காரர் எப்படியும் கூப்பிடுவார் என்பதால் தான் இந்த ஸ்லோமோஷன் நடையெல்லாம் . கூப்பிடவில்லையென்றால் கூட வேறு கடைக்குச் சென்று, அதைவிட அதிக விலை கொடுத்து அதே பொருளை வாங்குபவர்களும் உண்டு.

அதற்காக அநியாய விலை கொடுத்து வாங்கச் சொல்கிறீர்களா© என்று கேட்கலாம். வியாபாரியின் பொருள், அவரது லாபம், நமது நிலை இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வியாபாரியின் மொத்த மூலதனமே உங்கள் ஒரு நாள் கைச்செலவாக இருந்து நீங்கள் பேரம் பேசினால் அதில் மனித நேயம் இல்லை என்பதே என் கருத்து. நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால், ஒரு சிறு வியாபாரியின் பொருளை எண்பது ரூபாய் விலைக்கு வாங்கி மீதி இருபது ரூபாய் சீல்லரை இல்லாமல் தவிக்கும் போது அந்த இருபது ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிப்பாருங்கள். ©வள்ளல்© என்ற பட்டம் உங்கள் பெயருடன் வந்து ஒட்டிக் கொள்ளும்.

டெலிபோனில் பேசும்போது எதிர் முனையில் உள்ளவர் மனநிலை,சூழ்நிலை அறிந்து பேச வேண்டும் என்பதை பலர் உணர்வதில்லை. மேலும் நாம் சொல்ல வரும் விஷயத்தின் முக்கியத்துவம் எந்த அளவு என்பதை முதலில் உணர்த்த வேண்டும்.

பிரச்சினையின் உச்சியில் போராடிக் கொண்டிருக்கும் ஒருவர், அது சம்பந்தப்பட்ட தொலைபேசிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிலர் வெட்டிக்கு போனி பேசி, என்ன டிபன்© எத்தனை மணிக்கு குளிச்சீங்க© என்று கேட்டு அறுப்பார்கள்.இன்னும் சிலர் அவர்களாக போன் செய்து விட்டு, ம்...சொல்லுங்க...என்று நம்மிடம் கேட்பார்கள். மறுமுனையில் யார், எப்படி இருப்பார்கள் என்பதை காட்டும் மாயக் கண்ணாடி இல்லை என்பதை உணர்ந்து பேச வேண்டும். தொலைபேசியில் ஹலோ சொல்லி ©நான் யார் என்று சொல்லுங்கள்© என்று கேட்கிற அறிவு குறைந்தவர்களைத் திட்டத்தான் தோன்றும். தொலைபேசி அணுகு முறையில் எனக்குப் போலீஸ் துறையை மிகவும் பிடிக்கும். அவர்கள் தான் தொலைபேசியை எடுத்தவுடன் தங்களது பெயர், பதவியைக் கூறிவிட்டு மற்ற விஷயத்துக்கு வருவார்கள். மனித குலத்திற்கு விஞ்ஞானம் அளித்த மிக அற்புதமா பரிசு ©தொலைபேசி© இதைத் தொல்லைபேசி ஆக்கி விடாதீர்கள்.

நான் என் குருநாதர் திரு. பாக்யராஜ் சார் அவர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஓர் இளைஞர் வாய்ப்புக் கேட்டு வந்தார். அவரிடம் ஏதாவது நாடகத்தில் நடித்த முன் அனுபவம் உண்டா© என்றேன். இல்லை ஆனால் நான் பாக்யராஜ் சார்போல் வந்து விடுவேன் என்றார். சினிமாவுக்குள் நுழைய என்ன பயிற்சி மேற்கொண்டிருக்கிறீர்கள்© என்றேன். ©நான் பாக்யராஜ் சார் போல முடிவளர்த்து வைத்து உள்ளேன்© என்றார். எனக்கு அதிர்ச்சியுடன் கோபமும் வந்தது. அதைக்காட்டிக் கொள்ளாமல் பாக்யராஜ் சார் போல் முடி வளர்த்தால் முன்னேற முடியாது. மூளையை வளருங்கள் என்றேன். இதே போல் இளையராஜா சார் போல் ஜிப்பா போட்ட ஒருவர் நான் பெரியாளாகி விடுவேன் என்றார். நான் உடனே ஜிப்பா போட்டால் பெரியாளாக முடியாது, நல்லா டியூன் போட்டால் தான் அப்படி ஆக முடியும் என்றேன். ஒரு மாதுளம் பழத்திலிருந்து ஒரு முத்தை வெளியே எடுத்து விட்டுப் பிறகு மீண்டும் அம்முத்தைப் பொருத்தப் பல மணி நேரமாகும்.முழு மாதுளம் பழத்திலுள்ள எல்லா முத்துக்களையும் உதிர்த்து விட்டு மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது. அதே போல் தான் ஒருவர் போல் ஒருவர் ஆகிவிட முடியாது. உங்களுக்கென்று தனித் தன்மையை உழைப்பால் வளர்த்துக் கொண்டால் நீங்களும் முத்தாகலாம்.

இப்பொழுதெல்லாம் பலர் டிபன் சாப்பிடுவதே மாத்திரை சாப்பிட்டாக வேண்டுமே என்பதால் தான். ஆம். பலருக்கு மாத்திரை இல்லாமல் நித்திரையே இல்லை. இப்படி அவசியமான மாத்திரை விசயத்தில் சிலர் அனாவசியமாக நடந்து கொள்வது விளையாட்டு வினையாகி விடும் என்பதை உணராமலிருப்பதால்தான் !

எம்.பி.பி.எஸ். படித்தாலே டாக்டர் தான். இருந்தாலும், நாம் மூளைக்கு யார் சிறந்த டாக்டர், இதயத்துக்கு யார் ஸ்பெஷலிஸ்ட் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கிறோம். ஆனால் மாத்திரை விஷயத்தில் பலர் எப்போதோ டாக்டர் சொன்ன மாத்திரையை மனதில் வைத்துக் கொண்டு, தான் சாப்பிடுவதோடு இல்லாமல் மற்றவர்களையும் வாங்கி சாப்பிடும்படிக் கூறி எல்லாம் தனக்குத் தெரிந்ததாக நடந்து கொள்கிறார்கள். 

 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home