M.V. Narasimhachari

Profile of Thiru. M.V. Narasimhachari

இன்றைய நடன உலகில் இந்தியாவில் பரத நாட்டியம், குச்சுப்பிடி, கதகளி, கதக், ஒடிஸ்ஸி, மோகினி ஆட்டம் என்று பல் வகைப்பட்ட நாட்டியத்தில் குச்சுப்பிடி என்ற வகையில் பிரபலமாக விளங்கி வருபவர் M.V. நரசிம்மாச்சாரி ஆவார். “சிம்மம்“ என்று செல்லமாக நாட்டியக்கலைஞர்கள் என்றில்லாமல் இசைத்துறையிலுள்ளவர்கள் யாவரும் இவரை அன்புடன் அழைப்பர். எம்.எஸ். சத்யநாராயணாச்சாரி பிரபாவதி தம்பதியருக்கு 12.12.1942ல் இவர் மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஹரநாத் பாபா பஜனைப் பாடல்கள் பாடியதால் ஹரநாத் என்றும் அழைக்கப்பட்டார்.
நரசிம்மாச்சாரிக்கு ஆனந்த் என்ற மூத்த சகோதரரும் கிருஷ்ணா என்ற இளைய சகோதரரும் லட்சுமி, பவானி, கமலா என்ற மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. மூத்தவர் ஆனந்தின் மகள் சாய்ஸ்ரீ நடனம், வாய்பபாட்டிலும் சிறந்து விளங்குபவர், இளையவர் கிருஷ்ணாவின் மகள் ஹரிணி, சாய்ஸ்ரீயைப் போல நடனம் வாய்ப்பாட்டிலும் சிறந்து விளங்குபவர். நரசிம்மாச்சாரிக்குப் பிறந்த இரு மகள்களான லாவண்யா, லாஸ்யா ஆகிய இருவரும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபின் எம்.பி.எ மேல்படிப்பும் முடித்துளளனர். இவர்களின் “ரஸோகம்“ என்ற அமைப்பினை Dr. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். நரசிம்மாச்சாரி தனது மனைவி வசந்தலட்சுமியுடன் சேர்ந்து “கலா சமர்ப்பணா“ என்ற நாட்டியப் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ஆந்திர மாநிலத்தில் பிரபலமான நாட்டியக் கலைகளில ஒன்றான “குச்சுப்பிடி“ என்ற நாட்டிய வகையை இவர்கள் கற்றுத் தேர்ந்து உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று நமது இந்திய பாரம்பரிய நாட்டியக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்த்து வருகின்றனர். நரசிம்மாச்சாரியின் பிறப்பிடம் சென்னை ஆகும். வசந்தலட்சுமி ஆந்திரமாநிலத்திலுள்ள கனிகிரியில் பிறந்தார். இவருக்கும் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
நாட்டியக் கலையில் நரசிம்மாச்சாரி புகழ் பெற்று விளங்கி வந்தாலும் வாய்ப்பாட்டு, இசை, மிருதங்கம், நட்டுவாங்கம், யோகா மற்றும் மேற்கத்திய இசையில் பியானோ வாசிப்பதில் வல்லவராக விளங்கி வருகிறார். தனது குருவாக நாட்டியக் கலையில் திருமதி ருக்மணி அருண்டேல் அவர்களையும், அடையார் கே. லட்சுமணன் அவர்களையும், திருப்பதியில் பிரசித்தி பெற்ற காஞ்சனமாலா அவர்களையும் “கலாகேஷ்ரா“ N.S. ஜெயலட்சுமி அவர்களையும் பெருமையுடன் குறிப்பிட்டார். இசைத் துறையில் பேராசிரியர் சாம்பமூர்த்தி M.D.ராமனாதன், S.R. ஜானகிராமன் ஆகியோரைத் தமக்குக் குருவாக எண்ணுகிறார் மிருதங்கக் கலையில் தமக்கு குருவாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் சீடரான சண்முகானந்தம் பிள்ளையையும் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியின் சீடரான முருகபூபதியையும் குறிப்பிடுகிறார்.
நட்டுவாங்கத்திற்கு புஷ்பா சங்கர், அடையார் கே. லட்சுமணன் ஆகியோர் தமக்குக் குருவாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார். மேற்கத்திய இசையில் பியானோ வாசிக்கும் கலையை திரைப்பட இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் என்பவரிடம் கற்றுக் நரசிம்மாச்சாரியின் பள்ளிப் பருவம் சென்னை மயிலாப்பூரில் உள்ள கேசரி உயர்நிலைப்பள்ளியில் S.S.L.C. வரையிலும். அதன் பிறகு ஆந்திராவில் உள்ள வால்டேர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பும் பிறகு எம்.எஸ் முதுநிலை பட்டப்படிப்பினை தமிழ்நாடு பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
“சங்கீத சிரோமணி“ என்ற பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கலாஷேத்திராவில் முதல் வகுப்பில் டிப்ளமோ பட்டயப்படிப்பிலும் தேறினார். இது தவிர கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி சம்பந்தமாக “யோகா“ வில் முதுநிலைப்பட்டப்படிப்பான எம்.எஸ்.சிலும் தேறினார். நரசிம்மாச்சாரி அவர்கள் DANCE THERAPY. HYPNATISM, PRANIC, HEALING, ரெய்க்கி (REIKI), ப்ராணாயாமம் (PRANAYAMAM), ஆயுர்வேதம் (AYURVEDAM), ஆகிய பல துறைகளிலும் தன் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டு சான்றிதழ்கள் பெற்று இருக்கிறார். நாட்டியக்கலையில் தன்னை இந்த அளவுக்கு உயர்த்தும நிலைக்கு ஈர்த்தவர் “கலாஷேத்ரா“ ருக்மணி அருணடேல் என்று குறிப்பிட்டார்.
குச்சுப்பிடி நாட்டியக்கலையை நரசிம்மாச்சாரி அவர்கள் தனது தந்தை சத்யநாராயணாச்சாரியிடமும், பசுமர்த்தி வேணுகோபாலகிருஷ்ணஷர்மாவிடமும் மஹான்காளி சத்யநாராயணண் அவர்களிடமும் கற்றுக் கொண்டார். இவர்கள் மூவரும் குச்சுப்புடிக் கலையில் கொடிகட்டிப் பறந்தவர்கள் ஆவர். கதக் நடனக் கலையை விஷ்ணு வைச்சால்கர் என்பவரிடமும், கதக்களியை ஏ. ஜனார்த்தன் (முன்னாள் கலாகேஷத்ரா முதல்வர்) என்பவரிடமும் ஒரிஸ்ஸாவில் பிரபலமாக விளங்கும் ஓடிஸ்ஸியை ரமணி ரஞ்சன் ஜேனா என்பவரிடமும் மோகினி ஆட்டத்தை வசந்தா அர்விந்த் என்பவரிடமும் கற்றுத் தேர்ந்தார். தியாராஜர் உற்சவம் நடை பெற்ற சமயம் நரசிம்மாச்சாரி அவர்கள் தமது ஐந்தாவது பிள்ளைப் பிராய வயதில் தன் அண்ணன் M.V. ஆனந்த் அவர்களுடன் சேர்ந்து குச்சிப்புடி நாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார்.
இவரது பொழுது போக்கு பெரும்பாலும் புத்தகம் படித்தலே மற்றும் செஸ், கேரம் ஆகிய விளையாட்டுகளில் பங்குகொண்டு தான் படித்த கல்வி நிறுவனங்களில் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமில்லாமல் தங்கக் கோப்பைகளாகப் பரிசுகள் பல பெற்றிருக்கிறார். தஞ்சையை ஆண்ட ஷாஜி மகாராஜாவின் “பல்லக்கி சேவா பிரபந்தம்“ என்ற இசை நடனத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவரது நாட்டியத்வனி, ஆன்மிகச் சுற்றுலா என்ற இரண்டு குறுந்தகடு ஸ்வாதி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மறக்கமுடியாத அனுபவங்கள்: அமெரிக்காவில் ஒருமுறை இவரது வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் தாம் சாய்பாபாவைப் பற்றி எழுதிய பாடலை அந்நிகழ்ச்சியில் பாடும்படி கேட்டுக் கொண்டார். நரசிம்மாச்சாரி அவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாடி திருப்தி செய்தார். பாடலில் வரும் வார்த்தைகளை உடனே அதை இசை வடிவமாக்கி அங்குள்ள ரசிகர்களைப் பரவசமடையச் செய்தார்.
நரசிம்மாச்சாரி இதுவரை ஐந்து குடியரசுத் தலைவர்களான பாபு ராஜேந்திர பிரசாத், வி.வி.கிரி சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் மற்றும் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதீபா பாட்டீல் ஆகியோரிடம் தேசிய விருதுகள் பெற்றதை இன்றும் பெருமையாகக் கருதுகிறார். பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களிடம் விருது வாங்கிய போது நரசிம்மாச்சாரி அவர்களுக்குத் திருமணம் ஆகவில்லை. மற்ற நான்கு குடியரசுத் தலைவர்களிடமும் திருமதி வசந்தலட்சுமி அவர்கள் தமது கணவருடன் சேர்ந்து விருந்து பெறும் வகையில் பெருமையடைந்திருக்கின்றார்.
ஒருமுறை திருமதி வசந்த லட்சுமி நரசிம்மாச்சாரி அவர்கள் DR. M. பாலமுரளி கிருஷ்ணாவின் 75–ம் வயது பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு கவிதையை எழுதித் தம் கணவரிடம் (நரசிம்மாச்சாரி) கொடுத்தார். நரசிம்மாச்சாரி அக்கவிதையை வாங்கி கொண்டு உடனடியாக இசையமைத்துப் பாடியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தமது பிறந்தநாள் கலந்து கொண்ட திரு எம். பாலமுரளிகிருஷ்ணா நரசிம்மாச்சாரில் இசைப்புலமையை வியந்து அவ்வரங்கத்திலேயே எல்லோர் முன்னிலையிலும் 300 டாலர்களைப் பரிசாக அளித்தார். ஒருமுறை “கலா மந்திர் ட்ரஸ்ட்“ நடத்திய விழா மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் நரசிம்மாச்சாரி அவர்கள் “சூளாதி சபத்தாளங்கள்“ என்ற அமைப்பில் ஆடிக் ஒரு வர்ணம் இயற்றி அதைத் தம் நடன நிகழ்ச்சியில் செய்து காட்டினார். இதுவரை யாரும் இந்திய இசை, நடனத்தில் ஒருவகையான வர்ணத்தை யாரும் செய்ததில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு ரூ 18000/- சன்மானமாக வழங்கினர். நரசிம்மாச்சாரி அவர்கள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இப்படியொரு வியத்தகு நிகழ்வு எந்தக் கலைஞரின் வாழ்வில் நடந்திருக்குமா என்பது சந்தேகமே! தமது 10வது வயதிலிருந்து 14 வயதிற்குள் பாலநாகம்மா என்ற சரித்திர நடன நாடகத்தை சுமார் 100 தடவை நடத்தியிருக்கிறார்.
மேலும் அவர் தம் 14-ம் வயதிலிருந்து 17 வயதிற்குள். “புர்ரகதா“ என்ற தெலுங்கு நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தினார். இதில் கலந்து கொண்டு நடித்த நரசிம்மாச்சாரி அவர்கள் ஒரு கையில் தம்பூரா மற்றொருகையில் சிப்ளாவும் என்ற தாளக் கருவியையும் மீட்டிக் கொண்டே நடனமும் ஆடி வசனங்கள் பேசியும் சபையோரை வியக்க வைத்தார். இது நிச்சயம் “கடவுள் கடாட்சம்“ என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்? என்று நரசிம்மாச்சாரி தெரிவித்தார்.
தான் படித்த S.S.L.C. வகுப்பில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதல் வகுப்பில் தேறினார். பிரபல வட இந்தியரான ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பிஸ்மில்லாகான் தான் வாசிக்கும் ஷெனாய் என்ற இசைக் கருவியில் ஹிந்தோள ராகத்தை மிகவும் பிறர் வியந்து ரசிக்கும் அளவுக்கு வாசித்ததையறிந்த நரசிம்மாச்சாரி அவர்கள் “தில்லானா“ என்ற நடன நிகழ்ச்சியின் ஓர் அங்கத்தில் ஹிந்தோள ராகத்தில் இசையமைத்திருந்தார். இந்தி நிகழ்ச்சி 1972 –ல் சிங்கப்பூர் பைன் ஆர்ட்ஸ் சொஸைட்டியில் அரங்கேறியது.
தனது சகோதரி பவானியின் நடன அரங்கேற்றத்தை 1969 –ல் நடத்திய நரசிம்மாச்சாரியின் திறமையை வெகுவாக ரசித்த சிறந்த இசைக்கலைஞராக விளங்கும் S.R. ஜானகிராமன் பேசியதாவது “காட்டில் திரிந்து கொண்டிருக்கும் யானையைப் பிடிக்க முயல்வது எவ்வளவு கஷ்டமோ அந்த அளவுக்கு சுதந்திரமாகத்திரிபவர் என்று நரசிம்மாச்சாரியைப் பற்றி வர்ணித்தார் பிரபல இசைக் கலைஞர் திரு. நெய்வேலி சந்தான கோபாலன் இவரைப் பற்றிக் கூறுகையில் “சங்கீதமும சாகித்யமும்“ இணைந்தவர் என்றும் குருகடாட்சம் இவருக்கு நிறைய இருக்கிறது என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஒருமுறை பிரபல நாட்டியக் கலைஞர் அனிதாகுஹாவின் சீடர்களான 3 பெண்மணிகளின் நடன அரங்கேற்றதைக் காண நரசிம்மாச்சாரி அவர்கள் வந்திருந்தார். இடைவேளை சமயம் நடனக் கலைஞர்களை கௌரவிப்பதற்காக நரசிம்மாச்சாரி அவர்கள் பேச அழைக்கப்பட்டார். அச்சமயம் இவர் சட்டைப் பையில் இருந்த (மொபைல் போன்) கைப்பேசி ஒலியெழுப்ப இவர் அறியவில்லை. சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறது என்பதை இவரே அருகிலிலுள்ளவர்களிடம் விசாரிக்கும் நிலையைக் கண்டு அங்கிருந்த ரேவதி சங்கரன் என்ற இசைக்கலைஞர் இவர் சட்டைப் பையிலிருந்து தான் என்று கூற சமயோசிதமாக சபையோர் முன் அத்தருணத்திலிருந்து தப்புவிக்கும் வகையில் நரசிம்மாச்சாரி தன் சட்டைப் பையிலிருந்த (மொபைல் கைப்பேசியை) எடுத்து “யாரது? இந்திரன் பேசுகிறீர்களா? என்னது, 3பெண்மணிகளைக் காணவில்லையா? அதுவும் ரம்பை, ஊர்வசி, மேனகை என்று சொல்கிறீர்களே! அவர்கள் மூலமும் இந்த அரங்கத்தில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சமயோசிதமாகக் கூற அரங்கத்திலுள்ள அனைவரும் பலத்த கரவொலி எழுப்பி ரசித்தது தம் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சியாகும் என்றார்.
தனக்கு வழங்கப்படும் பரிசுகள், சால்வைகள் போன்றவற்றை உடனே தானமாக வழங்கி விடுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறார். மிருதங்கக் கலையில் புகழ்பெற்ற மதுரை சீனிவாசன் அவர்களும் காரைக்குடி மணி அவர்களும் நடனத்தை அமைப்பது எப்படி என்பதற்குக் காரணமாக விளங்கி வந்திருக்கிறார்கள். அதேபோல் ஹரித்வாரமங்கலம் பழனிவேல் அவர்களும் மிகவும் தன்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் என்று பாராட்டினார்.
தனது வளர்ச்சியில் அக்கறை கொண்ட தனது தாய் மாமா. ராமாச்சாரி அவர்கள் தன்னை மிகவும் ஈர்த்தவர் என்கிறார். அவர் ஒரு சிறந்த கலை விமர்சகர் ஆவார். “நடனா“ என்ற பள்ளியை நிறுவி அதை நடத்திக் கொண்டிருந்தார். தனது 16வது வயதில் தந்தையை இழந்த நரசிம்மாச்சாரிக்கு இவர் போதித்தது “எதையும் வித்தியாசமாகவும், வெற்றிகரமானதாகச் செய்“ என்று தான். இன்றும் அவர் சொன்னதைக் கடைப்பிடித்து வருகிறார் (2010 –ல் வாணி மஹாலில் நடந்த நடன நிகழ்ச்சியில் இவர் பாடிய தோடி ராகம் கேட்டு நித்ய ஸ்ரீ மஹாதேவன் அவர்கள் தானாகவே முன் வந்து மேடை ஏறி வந்து ஒலிபெருக்கியில் நரசிம்மாச்சாரியைப் பாராட்டு மழையில் நனைத்ததை மறக்கவே இயலாது என்கிறார்.
கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த “அம்மா ஆனந்த தாயினி“ என்ற பாடலைப் பாடிய இவரை சிக்கில் சகோதரிகள் நீலா, குஞ்சுமணி வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்கள். “ட்ரையோ ஸிஸ்டர்ஸ்“ என்று அழைக்கப்படும் ராதிகா சுர்ஜித், ஷோபனா பாலச் சந்திரன், காயத்ரி ஆகியோரின் நடன நிகழ்ச்சியில் நரசிம்மாச்சாரியின் பங்கு மகத்தானது என்று வியந்து டாக்டர் எம். பால முரளி கிருஷ்ணா பாராட்டியிருக்கிறார். அருணா சாய்ராமும் அவரது கணவரும் நரசிம்மாச்சாரி கீரவாணியில் பாடிய பாடலைக் கேட்டு மெய் மறந்து ரசித்ததாகக் கூறினர். தன் மாணவியரின் அரங்கேற்றத்தில் இவர் பாடிய சங்கராபரண ராகத்தை ஆர். வேதவல்லி அவர்கள் மிகவும் ரசித்ததாகக் குறிப்பிட்டார்.
ஒருமுறை பெங்களுரில் தமது நடன நிகழ்ச்சிக்கும் வந்திருந்த பிரபல இசைக்கலைஞர் T.V. சங்கர நாராயணன் அவர்கள் ஆற்றிய உரை நரசிம்மாச்சாரிக்கு தான் சாகும் வரை எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மேலும் வலுவாக்கியது. நரசிம்மாச்சாரி அவர்கள் தியாகப்ரம்யத்தின் “ராமகதை“யைப் பல தரப்பட்ட இசை விற்பன்னர்களுடன் கலந்து ஆலோசித்து சிறந்ததொரு நிகழ்ச்சியாகத் தயாரித்து அளித்திருக்கிறார்.
தான் தயாரித்தளித்த ஒவ்வொரு நடன நிகழ்ச்சியும் மன நிறைவைத் தந்ததாக குதூகலத்துடன் குறிப்பிடுகிறார். 1981–ம் வருடம் டானா என்று அழைக்கப்படும் (TELUGU ASSOCIATION OF NORTH AMERICA) என்ற அமைப்பு இவரை அழைத்து சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய அளவுக்கு நிகழ்ச்சியை அமைத்துச் தரச் சொன்னார்கள். ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியைப் பார்க்க பிரபல STATISTICIAN DR. C.R. RAO என்ற புகழ் பெற்ற மனிதர் கொலம்பஸ் என்ற இடத்திலிருந்து வருகை புரிந்திருந்தார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாயிருந்தது. அச்சமயம் பார்த்து முதலில் “சிவலீலையும்“ அடுத்த்தாக தில்லானாவும் நடைபெறுவதாக இருந்தது.
அச்சமயம் பார்த்து ஒலி பெருக்கி மின்தடையால் திடீரென்று வேலை செய்யாமல் போகவே என்ன செய்வது என்று ஒரு கணம் கூட யோசிக்காமல் அபிநயங்களைக் காட்டி ஒருவாறு நிகழ்ச்சியை சமாளித்து நடத்திக் கொண்டிருந்த போதே மின்தடை நீங்கியது. சுமார் 4000 பேர் அமர்த்தி இருக்க கூடிய அந்த அரங்கத்தில் உள்ள அனைவரும் நரசிம்மாச்சாரிக்கு நிகழ்ச்சியின் முடிவில் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தமது பாராட்டைச் செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு “இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள்“ என்ற தலைப்பைக் கொடுத்திருந்தனர். சுமார் 1200 டாலர்கள் இவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. ஐந்து நிகழ்ச்சிகள் நடத்துவதற்குச் சென்ற நரசிம்மாச்சாரிக்கு இந்த ஒரு அரிய நிகழ்ச்சியின் மூலம் எண்ணிக்கை 42 நிகழ்ச்சிகளாக நிகழ்ச்சிகளாக ஆக உயர்ந்தது.
இவருக்கு கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ஹிந்துஸ்தானி இசை, பஜனைப் பாடல்கள், அபங்க் (ABHANG) என்ற இசை ஆகியவை பிடிக்கும். பட்டணம் சுப்ரமண்ய ஐயர் “சுப்ரமண்ய ஐயர் மனஸா வ்ருதா கர்வமேடிகோ மஹாராதுயைன மனுஜீலோ என்ற பாடலில் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை வரும் “மானஸா“ என்ற வார்த்தை (ஒவ்வொரு முறையும்) அடிக்கடி வரும்படி இயற்றியிருந்தார்கள். இப்பாடல் ஆபோகி ராகத்தில் அமைந்திருந்தது. இதன் சிறப்பை உணர்ந்து கேட்டு ரசித்த எஸ். ஆர். ஜானகிராமன் அவர்கள் நரசிம்மாச்சாரியின் இசைப் புலமையை வெகுவாகப் பாராட்டினார். நரசிம்மாச்சாரி அவர்கள் பெரும்பாலும் தன் இசைக் கச்சேரிகளில் பிரபல இசைக் கலைஞர்கள் M.D.ராமனாதன், எஸ்.ஆர். ஜானகிராமன், மற்றம் DR.M. பாலமுரளிகிருஷ்ணா போன்றோரின் பாணியையே பின்பற்றுகிறார்.
உணவுப் பழங்க்கவழக்கங்களில் குறிப்பிட்ட நேரத்தில் “டயட்“ உணவையே உட்கொள்கிறார். உடற்பயிற்சியை தினமும் தவறாமல் மேற்கொள்கிறார். வாய்ஸ் கல்சர் (VOICE CULTURE) பயிற்சியை தினந்தோறும் செய்கிறார். பெரும்பாலும் எண்ணெய் ஆகாரங்களைத் தவிர்க்கிறார். குளிர்ந்த பானங்கள் அருந்துவதில்லை. அதேபோல அதிக சூடான ஆகாரங்களையும் தவிர்க்கிறார். எப்போழுதும் பேசுவதைத் தவிர்த்து விடுகிறார். மனத்தில் மட்டும் பாடல்களை மனனம் செய்வதில் அதிக நேரம் செலவிடுவார். “சோபில்லு சப்தஸ்வர சுந்தருவ பஜிம்பவே மனஸா“ என்ற பாடல் வரிகளுக்கேற்ப ஸ்வரங்களை என்றும் எப்பொழுதும் வணங்குவதாகக் கூறுகிறார். தனக்கு DR. M. பாலமுரளி கிருஷ்ணாவின் இசை மிகவும் பிடிக்கும் என்கிறார். திரு T.N. சேஷகோபாலன், தஞ்சாவூர் கல்யாண ராமன் (பிரபல சங்கீத வித்வான் G.N. பாலசுப்ரமண்யம் அவர்களின் சீடர்) ஆகிய இருவரின் இசை தன்னை ஈர்த்துவிடுகிறது என்று கூறுகிறார். பொகுவாக யோகா, நடனம், உறக்கத்திலும் இசை, நடனம் கற்றுக் கொடுத்தல், விளளயாடுதல் இவற்றை மேற்கொள்கிறார்.
முகவரி: நரசிம்மாச்சாரி, கலா ஸமர்ப்பணா, 30 முர்ரேஸ் கேட் ரோடு, ஆள்வார்பேட்டை, சென்னை-600018 , தொலைபேசி: 249990319, கைப்பேசி: 9444850349

More Profiles