Padma Shankar

Profile of Padma Shankar Violin

இன்றைய கர்நாடக இசை உலகில் குறிப்பாக இளைய தலைமுறையினரில் தலை சிறந்து விளங்கும் வயலின் வாத்யக்கலைஞர்களில் பத்மாசங்கர் ஒரு அற்புதக்கலைஞர் ஆவார். இவர் நாராயணன், லட்சுமி தம்பதியருக்கு மகளாய்ப் பிறந்தார். இவரது பூர்வீகம் பம்பாய் ஆகும். இவரது தங்கையின் பெயர் ப்ரியா, கணவரது பெயர் அபிஷேக்சங்கர் ஆகும். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவரது குருவாக விளங்கியவர்களில் தாய் லட்சுமிநாராயணன் அவர்களும் ராமகிருஷ்ணசர்மாவும், வயலின் மேதை லால்குடி ஜி. ஜெயராமன் ஆகியோர் அடங்குவர்.
மும்பையில் இவர் தன் பள்ளிப் படிப்பை செயிண்ட் அந்தோணியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை R.A. PODDAR COLLEGE OF COMMERCE & ECONOMICS –ல் B.COM முடித்து விட்டு I.C.W.A விலும் தேறினார். இது தவிர DIPLOMA IN FRENCH –லும் தேர்ச்சி பெற்றார். இவருக்கு தமிழ் மொழியைத் தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும்.
இவரை கர்நாடக இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சங்கீதா ஸ்வாமிநாதன் என்ற வாய்ப்பாட்டுக்கலைஞர் ஆவார். இவர் முதன் முதலில் மேடையேறிய இடம் சென்னை ஸ்ரீகிருஷ்ணகான சபா ஆகும். தமது பதினொன்றாம் வயதில் மானாமதுரையில் நடந்த சதாசிவ ப்ரம்மேந்திர உற்சவத்தில் முதன்முதலாக வயலின் கச்சேரி செய்தார். இவர் தனது எட்டாவது வயதில் மேடையில் முதன் முதலாகப் பாடிய பாடல் ஸ்ரீத்யாகப்ரம்மம் அவர்களின் மோகன ராகத்தில் அமைந்த “பவனுத“ என்ற பாடலாகும். ஏறக்குறைய 500 கீர்த்தனைகளுக்கு மேல் கற்றுத் தேர்ந்தவர். சென்னை நாதஇன்பம் என்ற அமைப்பு இவருக்கு “நாத ஒளி“ பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. கர்நாடக இசை சம்பந்தமாக நிறைய சான்றிதழ்களும், பட்டங்களும் விருதுகளும், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். சமீபத்தில் 03.07.2011 அன்று சென்னை ஸ்ரீகிருஷ்ணகான சபா இவருக்கு சிறந்த இசைக் கலைஞராக யக்ஞ ராமன் விருதினை வழங்க இருக்கிறது.
இவர் கர்நாட இசை நிகழ்ச்சிகள் நடத்த அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இஸ்ரேல், மஸ்காட் போன்ற நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். வயலின் இசைப்பது தவிர இவர் ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞரும் கூட. கவிதைகள் புனையும் ஆற்றல் பெற்றவர். சிறந்த ஆசிரியை, ஹிந்தி, தமிழ் மொழிகளில் இவர் பக்திப் பாடல்கள் இயற்றி அவை ஒலிநாடா, மற்றும் குறுந்தகடுகள் வடிவில் வெளிவந்துள்ளன என்றார். இது தவிர 2011–ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சம்பந்தமான பாடல் ஒன்றை இந்தியில் எழுதியிருக்கிறார். “ஜீத்தேகா தூ“ என்று தலைப்பிட்ட அந்த இசைத் தொகுப்பு YOU–TUBE - ல் ஒளிபரப்பப்பட்டு வருவதைக் காணலாம்.
வீணை மற்றும் கீ–போர்டு வாசிக்கத் தெரிந்த இவரின் பொழுது போக்கு நிறைய இசை சம்பந்தமான புத்தகங்கள் படிப்பது என்றார். இவர் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களை தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கம் உண்டு.
வயலின் வாசித்ததில் இவருடைய இசைத் தொகுப்பு குறுந்தகடு வடிவில் சுமார் 15 வெளிவந்துள்ளன. 3 பக்தி இசைத் தொகுப்புகள் இவரது இசையில் வெளிவந்துள்ளன. அதே போல் அமெரிக்காவில், பாலாதேவி சந்திரசேகர் என்பவரின் நடனத்திற்காக 2 இசைத் தொகுப்புகளுக்கு இசையமைத்திருக்கிறார். சென்னையில் இவர் PADMA SHANKAR MAHADEVAN’S ACADEMY OF MUSIC என்ற இசைப்பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார். இது தவிர பிரபல ஹிந்தி திரைப்படப் பின்னணிப் பாடகராக விளங்கும் PADMA SHANKAR MAHADEVAN’S ACADEMY யில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, ஹிந்தி திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்களை ON LINE மூலம் கற்றுத் தருகிறார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இவர் “SKYPE” என்ற சாதனம் மூலம் கர்நாடக இசையை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார்.
விருப்பங்கள் கர்நாடக இசையில் வரும் எல்லா ராகங்களும் தமக்குப் பிடிக்கும் என்றார். வர்ணம் என்று எடுத்துக் கொண்டால் தன் குருவாகிய லால்குடி G. ஜெயராமன் அவர்கள் இயற்றிய சாருகேஸி ராகத்தில் அமைந்த “இன்னும் என் மனம்” என்று தொடங்கும் பாடலை விரும்புவதாகக் கூறினார். எல்லா வகைக் கீர்த்தனைகளும் தனக்குப்பிடிக்கும் என்று சொல்லும் பத்மாசங்கர் அவர்களுக்கு நிறைய தில்லானா வகையுறாக்களும் பிடிக்கும் என்கிறார். சிறந்த இசை மேதைகள், ஆண், பெண் பாடகர்கள், பக்க வாத்யக் கலைஞர்கள் யாவரையும் தனக்குப் பிடிக்கும் என்றார். சிறந்த கலையரங்கமாக மும்பையிலுள்ள N.C.P.A LITTLE THEATRE –ஐக் குறிப்பிட்டார் ஸ்ரீதியாகய்யர், ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமிதீட்சிதர் ஆகிய சாகித்ய கர்த்தாக்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.
எல்லா சபாக்களும் தான் விரும்புபவை என்றார். கர்நாடக இசை உலகில் தனக்குப் பிடித்த தோழியாக காயத்ரி வெங்கட்ராகவன் அவர்களைக் குறிப்பிட்டார். தன்னிடம் கற்றுக் கொள்ளும் எல்லா மாணாக்கர்களையும் தான் விரும்புவதாகத் தெரிவித்தார். தமக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக “தில்லானா மோகனாம்பாள்“ படத்தைத் தெரிவித்தார். பாடலாசிரியர்களில் வாலியும் குல்ஜார் அவர்களும் தமக்குப் பிடித்தமானவர்கள் என்றார். இசையமைப்பாளர்கள் அனைவரும் தமக்குப் பிடித்தமானவர்கள் என்றார். திரைப்பட பின்னணிப் பாடகிகள் வரிசையில் லதா மங்கேஷ்கர், ஆஷாபோன்ஸ்லே ஆகியோரின் பாடல்களை விரும்புவதாகத் தெரிவித்தார்.
திரைப்பட நடிகர்களில் அமிதாப் பச்சன் அவர்களையும், நடிகைகளில் மாதுரி தீட்சித்தையும் சிறந்த ஹாஸ்ய நடிகராக நாகேஷ் அவர்களையும் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார். தன்னுடன் பழகும் உறவினர்கள் யாவரும் தன்னால் விரும்பப்படுபவர்களே என்றார். உணவு வகைகளில் தனக்கு “CHAT ITEMS” ரொம்ப பிடிக்கும் என்றார். எல்லா வண்ணங்களும் தனக்குப் பிடித்தமானவையே என்றார். பெரும்பாலும் தான் புடவை அணிவதையே விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஜெருஸலேம் தான் விரும்பும் இடம் என்று தெரிவித்தார். நாடுகளில் இந்தியாவை தான் மிகவும் விரும்புவதாக தெரிவித்தார். தான் விரும்பும் புத்தகமாக ANN RYND BOOK -ஐ தெரிவித்தார். இசைத்துறை தவிர, கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரை அதிகம் பாராட்டுவதாகத் தெரிவித்தார். கார்களில் தனக்குப் பிடித்த வாகனம் மாருதி ஆட்டோ வேன் என்றார்.
பொது தினசரி தான் மேற் கொள்ளும் பணிகளாக பூஜை செய்தல், சமையல் செய்தல் இசை கற்றுக் கொள்ள வேண்டிய வகையில் ஈடுபடுதல் மற்றவர்களுக்கும் இசையை கற்றுக் கொடுப்பது நிறைய சாதகம் செய்தல், தனது மகன் கருணாவுடன் நேரத்தைச் செலவிடுவதாகக் கூறினார். எல்லோரிடம் நட்பாக பழகுவதில் நிகரற்றவாக விளங்கி வருகிறார். கர்நாடக இசை தவிர தாம் ஒரு கவிதாயினி என்று பெருமைபடக் கூறிக் கொள்கிறார். இசைத்துறைக்கு வந்திருக்கா விட்டால் தாம் ஒரு பொறியாளராகவோ, கணக்கு அதிகாரியாகவோ ஆகியிருப்பேன் என்று தெரிவித்தார்.
தனது மூன்றாம் வயதிலேயே தாயார் தன்னை இசைக்கலைஞராக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தந்தையோ தன்னை நன்றாகப் படிக்க வைத்ததாகக் கூறினார். தான் விரும்பியபடியே கர்நாடக இசைக் கலைஞராக மிளிர்வதில் தனக்கு இன்றளவும் மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். தான் பழகிய நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் அளவிலா இன்பம் அடைவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் தாம் நிகழ்த்திய இசைக் கச்சேரிகளில் கண்ணியமான, கட்டுக் கோப்பான ரசகிர்களின் ரசனையை வியந்து ரசித்ததாகக் கூறினார்.
தாம் சமூகத்திற்குச் செய்யும் பணியாக AUTISM SCHOOL-ல் கர்நாடக இசையை வாய்ப்பாட்டு மற்றும் வயலின் மூலம் மாணவர்களக்குக் கற்றுக் கொடுப்பதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது தனது குடும்பத்தினர் யாவரும் தன்னிடம் மிக்க அன்புள்ளம் கொண்டவர்கள் என்றும் அவர்கள் தனக்கு எல்லாவற்றிலும் முழுச்சுதந்திரம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தார். தனக்கேற்பட்ட இசை அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் எண்ணம் தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார்.
தன் ரசிகர்கள் மற்றும் தன்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தன்னை ஊக்கப் படுத்தி வந்திருக்கிறார்கள் என்று கூறினார். தகவல் நுட்ப சாதனமாகிய ORKUT, FACE BOOK போன்றவற்றில் தொடர்பு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். சிறந்த பெண் சாதனையாளர் தினத்தன்று சென்னை வானொலியில நவரத்தினம் தொடரில் இவரது பேட்டி ஒலிபரப்பானதாகத் தெரிவித்தார்.
மறக்க முடியாதவை அவ்வப்போது தன் மனதில் தோன்றுபவர்கள் மகன் கருண் சாய்சங்கர் மற்றும் ஷீரடி சாய்பாபா என்றார். அவ்வப்போது தனது மனதில் தோன்றிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியாக ஒருமுறை அயல்நாடு சென்றிருந்த போது “டோவர் லேன்“ (DOVER LANE) என்ற இடத்தில் நடந்த வசந்த உற்சவத்தில் 6000 பேரடங்கிய ரசிகப் பெருமக்கள் முன்னிலையில் டாக்டர் எம். பால முரளி கிருஷ்ணா அவர்கள் தான் பாடிய மந்தாரி ராகத்தைப் பாடி முடித்த பின்னர் வயலினில் இவர் வாசிக்க ஆரம்பிக்கும் சமயம் பார்த்து வயலின் தந்தி ஒன்று லேசாகிப் போனது. பாலமுரளி அவர்கள் இதை எப்படியோ கவனித்து விட்டு தந்திக்கம்பி சரி செய்யப்படும் வரை சில கணங்கள் காத்திருந்தார். தந்திக்கம்பியைச் சரி செய்து வாசித்து முடித்த பின்னர் அவர் பாடியதை தான் வாசிக்கும் பொழுது சில உத்திகளைக் கையாண்டு பாடலுக்கு மேலும் மெருகேற்றினார். அவர் பாடியதற்கேற்ப தான் வாசித்ததை பாலமுரளி கிருஷ்ணா முதன்முதலாக பாராட்டி மகிழ்ந்ததும் ஆறாயிரம் ரசிகப் பெருமக்களின் கரவொலி அடங்க அதிகநேரமாயிற்று என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தனக்குள் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை கிடைத்தற்கரிய பொக்கிஷமாகத்தான் கருதுவது அனைவரின் அன்பையே என்றார்.
தான் நிகழ்த்தவிருக்கும் எந்த ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியும் விசேஷமான ஒன்றாகவே இருக்கும் என்கிறார். எந்த ஒரு கணமும் தனக்கு மகிழ்ச்சியையே தருவதாகத் தெரிவித்தார். தனது மகன் கருண் பிறந்த நாளான 25.05.2005 தேதியே தனக்குப் பிடித்த தினமாகும் என்றார்.
தாம் ஜெருசெலத்திற்கு FUSION CONCERT நிகழ்ச்சி நடத்தச் சென்ற போது கர்நாடக இசையை வயலினில் வாசித்தார். இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் இயேசு கிறிஸ்து பிறந்த ஊராகும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் நறுமணங் கொண்ட கல்லைத் தொட்ட கணம் தன் மனதில் ஓர் இனம் புரியாத அமைதி நிம்மதி இவற்றை உணர்ந்ததாகவும் அந்த அனுபவம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு எல்லையில்லா ஆனந்தத்தையளித்தது. கட்டிடக்கலை, கலாச்சாரம், சிற்பக்கலை இவையனைத்தும் நிறைந்த அந்த 3000 வருட புராதன பழைய சின்னத்தை 2007 –ல் தான் பார்த்த நிகழ்வே இன்று வரை சிறந்த மறக்க முடியாத அனுபவமாகத் திகழ்கிறது என்றார்.
இசையைப்பற்றி பிறக்கும் போதே தனக்குள் இசையார்வம் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். முதல் மேடை நிகழ்ச்சியாக தம் 5 –ம் வயதில் மும்பை பாலவிஹாலரில் நடந்தது என்று தெரிவித்தார். 1990 –ல் பெப்ஸி விளம்பரத்திற்காக இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட்டின் மேற்பார்வையில் தான் நிகழ்த்திய நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த சன்மானத் தொகை ரூ 3000/- ஐ தன்னுடைய தந்தையாருக்குத் தங்கச்சங்கிலி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
தனது 8ம் வயதில் மும்பை சண்முகானந்தா கலையரங்கத்தில் முதல் விருதினைப் பெற்றார். தான் நிகழ்த்திய மேடைக் கச்சேரிகளில் இதுவரை தனக்கு மேடை பயமே வந்ததில்லை என்றார். முதன்முதலாக தான் செய்த மேடைக் கச்சேரி செய்து முடித்த பின்னர் தனக்கு ஓர் நிம்மதியும் ஆனந்தமும் அடைந்ததாகத் தெரிவித்த அதே நேரம் இன்றும் வயலின் நன்றாக வாசிக்க வேண்டும் என்ற தணியாத தாகம் தன்னுள் இருந்த கொண்டே வருகிறது என்றார். தான் பங்கு கொள்ளும் இசை நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்யப்படும் போது மிகவும் சாதாரண நிலையில் இருந்ததாகக் கூறினார். முதன் முதலாக தனது வயலின் இசை நிகழ்ச்சி (C.D) குறுந்தகடு வடிவில் வெளியான சமயம் தனக்கு வியப்பாகவும் சொல்லொணா ஆனந்தத்தையளித்ததாகக் கூறினார். தனது வயலின் இசை நிகழ்ச்சியினை வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, குறுந்தகட்டில் கேட்கவோ, கண்டாலோ தமக்கு மனநிறைவைத் தருவதாகத் தெரிவித்தார்.
எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பாக உலகப் கோப்பை கிரிக்கெட் 2011–க்காக தான் ஹிந்தி மொழியில் ஒரு பாடல எழுதிய தருணத்தைப் பெருமையாகக் குறிப்பிட்டுக் சொல்கிறார். தனக்குக் கிடைத்த திருப்தியிலேயே பிப்ரவரி 2011 –ல் AUTISTIC SOCIETY-யில் பள்ளி மாணவர்களுடன் தனியாக வயனில் வாசித்ததைக் குறிப்பிட்டார். கர்நாடக இசையல்லாது எந்த ஒரு துறையும் தமக்குப்பிடித்தமான ஒன்றே என்றார். தன் குரு இசைமேதை லால்குடி ஜி. ஜெயராமன் அவர்களின் பாணியைப் பின்பற்றுவதாகக் கூறினார்.
தனது கைகளில் உள்ளஎந்த விரலுக்கும் பங்கம் வராத வகையில் பத்திரமாகப் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்கிறார். கூர்மையான பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்த்து வருகிறார். குளிர்ப்பிரதேசங்களில் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கம்பளிப்போர்வையைப் பயன்படுத்துகிறார். கனமான பொருட்களின் அருகிலோ, நேரடியாகவோ வயலின் இசைக் கருவியை வைக்காமல் பார்த்துக் கொள்கிறார். குழந்தைகள் இருக்குமிடத்தில் வயலின் இசைக் கருவி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்.
எப்பொழுதும் தன்னை கவனித்துக கொள்ளும் மருத்துவராக ஷீரடி ஸ்ரீசாய்பாபா இருந்து வருவதாக தெரிவித்தார். தான் வயலின் சாதகம் செய்வதை விரும்பிச் செய்வதால் தனக்கு கடினம் என்று எதுவும் இதுவரை தோன்றியதில்லை என்றார்.
முகவரி : Smt. PADMA SHANKAR NO 6-E BLOCK PALANISWAMY APARTMENTS. 81 LVZ CHURCH ROAD. MYLAPORE., CHENNAI – 600 004.PHONE : 24 67 19 79 MOBILE : 98401 51990 Vidniworld@gmail.com Pagelink www.musicians page.com/musician 4757

More Profiles