Parvathi Ravikandasala

Profile of Thirumathi Parvathi Ravikandasala

இன்றைய பரத நாட்டிய உலகில் புகழ்பெற்று விளங்கும் குறிப்பிடத்தக்கவர்க்ளில் பார்வதி ரவிகண்டசாலா ஒருவராவார். “பப்பு“ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பி.எம். நாராயணசாமி, கமலா தம்பதியருக்கு திருமகளாய் 07-04-1961 அன்று சென்னையில் பிறந்தார். இவரது கணவர் பெயர் ரவி கண்டசாலா ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாண்டிபஜார் அருகேயுள்ள ஹோலி ஏஞ்செல்ஸ் கான்வென்ட்டில்
படித்து முடித்த பின் கல்லூரிப் படிப்பை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் சேர்ந்து “பி.ஏ“ (பொருளாதாரம்) படித்துத் தேறினார். (சென்னைப் பல்கலைக்கழகம்). தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் தன்னுடைய பள்ளிப் படிப்பை சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் பாண்டிபஜார் அருகேயுள்ள ஹோலி ஏஞ்செல்ஸ் கான்வென்ட்டில் படித்து முடித்த பின் கல்லூரிப் படிப்பை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் சேர்ந்து “பி.ஏ“ (பொருளாதாரம்) படித்துத் தேறினார். (சென்னைப் பல்கலைக்கழகம்).
இவரது குருக்கள் கிருஷ்ணகுமாரி நரேந்திரன், “கலாநிதி“ நாராயணன், பேராசிரியர் சி.வி. சந்திரசேகர் ஆகியோர் ஆவார் நட்டுவாங்கக்கலையயை பாகவதலு சீத்தாராம சர்மாவிடம் கற்றுத் தேர்ந்தார். இவருக்குத் தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரியும். முதன் முதலில் இவரது நடன நிகழ்ச்சி சென்னை மயிலையிலுள்ள “மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்“ பில் நடந்தது. “அருட்பா அபிராமி அந்தாதி“ என்ற நாட்டிய நாடகத்தை இவர் முறையோடு கற்றுத் தேர்ந்து நடத்தியதில் இவருடைய பெயர் புகழ், செல்வம் அனைத்தும் அகிலமெங்கும் பரவ ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் தான் படித்த பள்ளியிலும், கல்லூரியிலும் நடன நிகழ்ச்சிகளிலும் போட்டிகளில் பங்கு கொண்டு பெற்ற விருதுகள், சான்றிதழ்கள், கேடயங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள், பட்டங்கள் ஆகியவை ஏராளம்.
இவருக்குள்ளிருந்த நடன ஆற்றலைக் கண்டு பிடித்தவர் இவரது தாய் கமலா ஆவார். இவர் தன் நடன நிகழ்ச்சிக்கு முதன் முதலாகப் பெற்ற சன்மானத் தொகையை நினைவுப் பொருளாக வைத்துக் கொள்ளும் வகையில் தன் வீட்டின் பூஜை அறையில் அரிய பொக்கிஷமாக இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார். பார்வதி ரவி கண்டசாலாவை முதன்முதலில் அவரது நடனநிகழ்ச்சியைக் கண்டு ரசித்து மிகவும் பாராட்டிப் பேசியவர் நீதிபதி மஹாராஜன் ஆவார். ஆந்திர மாநிலம் இவருக்கு “காளஹஸ்தி நிருத்யா“ என்ற பட்டமும், தமிழ்நாடு அரசு கலைமாமணி என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளன.
தாம் முதன் முதலில் நடன நிகழ்ச்சியில் ஆடிய தருணம் படபடப்பாகவும் அதேசமயம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டார். தனது நடன நிகழ்ச்சி முதன் முதலாக ஒலிப்பதிவு செய்யப்படும் தருணங்களில் ஒரு வித பரபரப்பான சூழ்நிலையில் இருந்ததாக கூறினார். நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறுந்தகடு வாயிலாக வெளிவந்த போது தாம் அடைந்த சந்தோஷம் அளவற்றது என்றார். வானொலியில், அல்லது தொலைக்காட்சிகளில் கேட்கும் போகும், கண்ட போதும் இன்னும் முன்பை விட சிறப்பாக, நன்றாகச் செய்திருக்கலாமே என்று தோன்றும்.
தமது நிகழ்ச்சிகளில் “அம்பாள்“ வேடம் பூண்டு நடனம் ஆடிக் கொண்டு இருக்கும்போது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து போவது மனதுக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது என்றும். நிகழ்ச்சியைக் காண வந்திருக்கும் ரசிகர்களில் குறிப்பாக முதியோர் தம்மைக் கடவுளாகவே பாவித்துப பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள் என்றும் அதை அப்படியே நற்காரியங்களுக்கு நன் கொடையாகப் பலமுறைகள் அளித்திருக்கிறார். எதிர்பாராத வாய்ப்புக்கள் தனக்கு நிறைய வாய்த்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். வட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து நடன நிகழ்ச்சிக்கான வாய்ப்புக்களை விரைவில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
2009-ல் உலகின் பல பாகங்களிலிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் புட்ட பார்த்தி சாயி பாபாவின் 84வது பிறந்த நாளன்று கலந்து கொண்டார்கள். தாம் நடனம் ஆடியதையும் மறுபடியும் தொடர்ந்து அடுத்த ஆண்டான 2010 –லும் தாம் நடன நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தது வாழ்வில் மிகப் பெரிய திருப்தியைத் தந்தது என்றார். ஏனென்றால் புட்ட பர்த்தி சாய்பாபவின் 85வது பிறந்தநாளன்று அவர் முன்னிலையில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது என்றும் பாபா அவர்கள் தனக்கு ஆசி வழங்கியது மட்டுமின்றி மாலை ஒன்றைப் பரிசாகவும் அளித்தார்.
2005–ம் ஆண்டில் சென்னை பாரதீய வித்யா பவனில் தாம் நடத்திய நடன நிகழ்ச்சிகளிலேயே “ஐம்பெருங்காப்பியம்“ என்று நடன நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்ததற்கு மிகவும் கடினமான உழைக்க வேண்டியிருந்தது என்றும் அவ்வுழைப்பிற் கேற்ற பலன் பன்மடங்காகக் கிடைத்ததில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று கூறினார். சிறந்த நடன மேதைகளாக திருமதி. டி. பாலசரஸ்வதி, டாக்டர் பத்மா சுப்ரமண்யம், நந்தினி ரமணி ஆகியோரையும் இசைமேதைகளில் டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணா, லால்குடி ஜி. ஜெயராமன் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார்.
தாம் நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உடலை மிகவும் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கும் வகையில் பிரத்யேக முயற்சிகள் செய்து கொள்வதாகவும் குளிர்ப் பிரதேசங்களில் அல்லது குளிர் காலங்களில் கம்பளிப் போர்வைகள் அணிந்து கொள்வதும், முகத்திற்கு “SCARF“ அணிந்து கொள்வது தமது வழக்கமான செயல்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். தமது உடலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் பொது மருத்துவர் ஸ்ரீதரின் ஆலேசனைகளை அவவ்வப்போது பெறுவதாகத் தெரிவித்தார்.
இதுவரை தாம் நடத்திய நடன நிகழ்ச்சிகளிலேயே எல்லோரும் போற்றப்படும் வகையில் அமைந்த நடன நிகழ்ச்சி “அன்னமய்யா“ ஆகும் என்றார். இதுவரை வெளிநாடுகளில் தாம் அளித்த நடன நிகழ்ச்சிகளியே “சிகாகோ“ என்ற இடத்தில் அளித்ததை மறக்கவே இயலாது என்று கூறினார். சங்கராபரணம் ராகம் தம்மை மிகவும் பாதித்த ராகங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அமைந்துள்ளதாகக் கூறினார். இவர் இதுவரை தாம் நடன நிகழ்ச்சிகளுக்காக ஃபிராங்கா, வெஸ்ட் இண்டீஸ், சிக்காகோ போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி வாகை சூடி வந்திருக்கிறார். நடனம் தவிர வாய்ப்பாட்டு, வீணை மற்றும் கதக் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவராகத் திகழ்கிறார். இது தவிர மேற்கொண்டு பல கலை விழாக்களுக்கான நிகழ்ச்சிகள் நிறைய நடத்தியுள்ளார்.
நடனத்துறைக்கு வந்திருக்காவிட்டால் தாம் நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவராகவும் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றும் கூறினார். இவர் இரண்டு இசைத் தொகுப்புகள் அடங்கிய குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார். நிறைய நடன நாடகங்களைத் தயாரித்தளித்திருப்பதாகத் தெரிவித்தார்.இவரின் விருப்பங்கள் சங்கராபரணம் இவர் விரும்பும் ராகம். நடனத்தில் சங்கராபரண ராகத்தில் அமைந்த வர்ணம் இவரைக் கவர்ந்த ஒன்றாகும். நடன உருப்படிகள் ஏராளமாக கற்றுத் தேர்ந்த இவருக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர்கள் கண்டசாலா, வெங்கடேஸ்வரராவ் (இவரது மாமனார்) அவர் தெலுங்குத் திரைப்படங்களில் புகழ் பெற்ற சிறந்த பின்னணிப் பாடகராவார். திருமதி சுதாரகுநாதன் இவர் விரும்பும் மற்றொரு இசைக் கலைஞர் ஆவார்.
சிறந்த ஆண் பாடகர்களில் திரு ஓ.எஸ். அருண் மற்றும் பெண் பாடகர்களில் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார். இவர் தனக்குப் பிடித்த கலையரங்குகளில் பாரதீய வித்யா பவனும், நாரத கான சபாவும் என்றும் குறிப்பிட்டார். தமக்குப் பிடித்த சபாக்களில் பாரதீய வித்யா பவனும், பிரும்ம கான சபா ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறந்த கர்நாடக இசை வித்வானாக எம்.டி. ராமநாதன் பெயரைத் தெரிவித்தார். சிறந்த ஒலிப்பதிவுக்கூடமாக “டிஜிட்ராக்“–ஐ யும் சிறந்த ஒலிப்பதிவாளராக ஆர். கணேஷ் அவர்களைக் குறிப்பிட்டார். நடனத்துறையில் தமக்கு எல்லோரையும் சிறந்த நண்பர்களாகப் பெற்றிருப்பதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் தன்னிடம் நடனம் பயிலும் மாணவர்கள் யாவரும் தமக்குப் பிடித்த மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாகத் தெலுங்கு திரைப்படங்கள் பார்ப்பது தமக்குப் பிடிக்கும் என்று தெரிவித்தார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளராக கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் அவர்களைக் குறிப்பிட்டார். சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகர்களில் எல்லோரையும் விரும்புவதாகவும் அதிலும் குறிப்பாக டி.எம்.சௌந்திரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமண்யம் ஆகியோரையும், சிறந்த திரைப்பட பெண் பாடகர்களில் பி.சுசிலா, எஸ். ஜானகியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார் தனக்குப் பிடித்த திரைப்பட நடிகர்களில் சிவாஜி கணேசன் அவர்களையும் சிறந்த நடிகைகளில் மனோரமாவையும், நகைச்சுவை நடிகர்களில் நாகேஷையும் குறிப்பிட்டார். சிறந்த இயக்குனராக கே. பாலசந்தரைக் குறிப்பிட்டார். உறவினர்களில் தாம் எல்லோரையும் விரும்புவதாகத் தெரிவித்த அவருக்கு எல்லா நண்பர்களையும் பிடிக்கும் என்றார்.
உணவு வகைகளில் எதுவும் தமக்குப் பிடிக்கும் என்றும் நிறங்களில் “பேபி பிங்க்“கும் (BABY PINK) உடைகளில் புடவையணிவதை விரும்புவதாகக் குறிப்பிட்டார் (SOUTH INDIAN ATTIRE). தமக்குச் சென்னை தான் மிகவும் விடித்தமான இடம் என்று தெரிவித்தார். ஓட்டப்பந்தய சம்பந்தமான விளையாட்டுக்களில் ஆர்வம் தனக்கு உண்டு என்றும் தெரிவித்தார். தமக்கு திருமதி. சுதா மூர்த்தியின் (இன்போஸிஸ்) புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். தலைவர்களில் மஹாத்மா காந்தி தனக்குப் பிடித்தமானவர் என்றார். சிறந்த வாகனமாக தனக்குப் பிடித்தது “கார்“ என்று தெரிவித்தார்.
பொது தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தல், பூஜை செய்தல், மாணவர்களுக்கு நடனம் கற்றுத் தருதல் இவற்றைத் தவறாமல் செய்யும் இவரை மாணவர்கள் சிறந்த குருவாகக் கருதுவதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். சிறந்த நடனப் பெண்மணியான இவர் குடும்பத் தலைவியாகவும் தன் கணவருக்கு நல்ல மனைவியாகவும் இருக்கிறார். தாம் விரும்பியதற்கேற்ப நடனத்துறைக்கு நுழைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தாகக் கூறினார். பழைய நண்பர்களைக் காணும்போதெல்லாம் மிகவும் அளவில்லா ஆனந்தம் கொள்வதாக தெரிவித்தார். தனக்கு மிகவும் பிடித்த உறவினர்களிலேயே தமது கணவரையும் தமது குடும்பத்தினரையும் குறிப்பிட்டார்.
நடனத்துறையைத் தம்மால் முடிந்த அளவுக்கு முன்னேறும் வகையில் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், ஏழைகளுக்கு உதவுவதில் தம்மால் முடிந்ததைச் செய்வதை சமூகத்திற்குத்தாம் செய்து வரும் சிறந்த தொண்டாகக் கருதுகிறார். “தன் குடும்பம்“ மிகச் சிறந்த ஒன்று எனப் பெருமையுடன் கூறுகிறார். தன் நடன நிகழ்ச்சி சம்பந்தமான அனுபவங்களை ஒரு நூலாக வெளியிடும் எண்ணம் உண்டு என்று கூறினார். தன் ரசிகர்களை மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார். தனது பேட்டி 10 வருடங்களுக்கு முன்பு வானொலியிலும், 5 வருடங்களாக தொலைக்காட்சிகளிலும் வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஒருமுறை இவர் தனது மூன்றாவது நாட்டிய நாடகத்தை சென்னை மியூஸிக் அகாடெமியில் நடத்திய போது நிகழ்ச்சிக்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவும், டாக்டர் திருமதி எம். எஸ். சுப்புலட்சமி ஆகியோர் வந்திருந்து ரசித்த அந்த நிகழ்ச்சியை தமது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றார். இதுவரை “அன்னமய்யா“ 175 தடவைகள் நடந்தேறியுள்ளது வெளி நாடுகளில் தான் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் லண்டனில் லண்டன் பப் என்ற இடத்தில் “அபிராமி அந்தாதி“ நடன நாடகம் 150 தடவை நடந்தேறியுள்ளது என்று தெரிவித்தார்.
“உச்சி திலகம்“ என்ற நிகழ்ச்சி ஒலிப்பதிவான சமயம் மிகவும் மறக்க முடியாத ஒன்று என்றார். மறக்க முடியாதவர்களில் தன் வாழ்வில் குறிப்பாக எல். வைத்தியநாதன், இயக்குநர் கே. விஸ்வநாத் ஆகியோரைக் குறிப்பிட்டார். தனது நடனம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுடன் இருப்பது சந்தோஷமான தருணம் என்றார். சிறந்த நகைச்சுவை சம்மந்தமாக நாகேஷ் தருமி வேஷம் ஏற்று நடித்த திருவிளையாடல் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் தன்னால் மறக்கமுடியாத ஒன்று என்று தெரிவித்தார்.
கவலைகள் என்று குறிப்பிடும்போது பெற்ற தாயை நினைக்கும் போதும் தனது மாமா கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் அவர்களை நினைக்கும் போதெல்லாம் கவலை ஆட்கொள்கிறது. வெள்ளிக்கிழமை தனக்குப் பிடித்த கிழமையாகும் என்றும் 02.07.1987–ல் பிறந்த தனது மகன் மொஹிந்தரின் பிறந்த தேதி தனக்குப் பிடித்த தாகும் என்றார். தனக்குப் பிடித்த இடமாக ஃபிளோரிடாவையும் அது மிகவும் சுறுசுறுப்பான உலகம் என்று குறிப்பிட்டார். காலை நேரம் என்றும் தனக்கு மிகவும் பிடித்த நேரம் என்றார். பிறந்த நாடான இந்தியா தனக்கு மிகவும் பிடித்த நாடாகும் என்று தெரிவித்தார். எப்பொழுதும் தனது நடன நிகழ்ச்சிகளுக்கு இன்றுவரை அயராமல் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் நீதிபதி திரு. கே. எஸ். பக்தவத்சலம் அவர்கள் தம் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கிறார். தனது குடும்பத்தினருக்கு இவர் எப்பொழுதும் அறிவுறுத்துவது எல்லோருக்கும் தம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்தல் வேண்டும் என்பார்.
மொஹிந்தர் என்றும் தனது ஒரே மகன் “டெல்லாயிட்“ (DELLOITE) என்ற ஒரு அமெரிக்க நிறுவனத்தில் தணிக்கை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். பார்வதி ரவி கண்டசாலாவின் நடனக்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் பெயர். ராதாபத்ரி, ஹரிபிரசாத், வாய்ப்பாட்டும், வயலின் இசைக் கண்ணன் கலையரசன் ஆகிய இருவரும் மிருதங்கத்திற்கு விஜயராகவன், ஹரிபாபு ஆகியோரும் இருக்கிறார்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு “மகிஷாசுரமர்த்தனி“ என்ற நாட்டிய நாடகத்தை பார்வதி அவர்கள் புதுச்சேரியில் நிகழ்த்தினார். அந்நிகழ்ச்சிக்கு புதுவை ஆளுநர் வருகை புரிந்தார். நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஏதோ ஆணி போன்ற ஒன்று தம் காலில் குத்தியதை உணர்ந்திருந்தும் நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி முடிக்கும் வரை ஆடிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியைக் காண வந்தருந்த புதுவை ஆளுநர் காலில் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டிருக்கிறார். ரத்தம் காலில் கசிந்து கொண்டிருந்தாலும் பார்வதி விடாப் பிடியாக நடனம் ஆடிக் கொண்டிருந்த தன்மையைக் கண்டு வியந்து பாராட்டியது தம்மை மெய்மறக்கச் செய்து விட்டது என்றார்.
இன்னொரு சமயம் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த போதிலும் நடன நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்ததால் அவற்றை முடித்துக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்ததைத் தெரிவித்தார். தற்பொழுது பெண்மையைப் பற்றி ஒரு புதிய படைப்பாக “பெண்மைச்சுடர்“ என்ற தலைப்பில் நாட்டிய நாடகம் ஒன்றதை தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தனது நடனக்குழுவில் “ஸஹானா“ என்னும் சிறிய 8 வயது பெண் ஒருத்தி மிகச் சிறப்பாக நடனமாடி வருவதாகவும் இதுவரை 50 தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார் என்று ஸஹானாவைப் பற்றி பெருமைப்படும் வகையில் தெரிவித்தார். 1978 –ல் இவருடைய நடன அரங்கேற்றம் நடந்தேறியது. 1998–ல் பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் ‘கலாப்ரதர்ஷிணி“ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கி சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரைத் தயார் செய்து வருகிறார்.
முகவரி: திருமதி பார்வதி ரவி கண்டசாலா, பரத நாட்டியக் கலைஞர், 1ஏ, ஸீப்ரோஸ் பார்வதி அபார்ட்மெண்ட்ஸ், 18 போயஸ் சாலை, முதல் தெரு, தேனாம்பேட்டை, சென்னை-600 018. கைப்பேசி: 9840157090

More Profiles