Revathi Krishnamurthi

Profile of Thirumathi Revathi Krishnamurthi

தமிழிசைப் பாடல்கள் சமீப காலமாக தமிழ்மொழியின்பால் அன்பு கொண்ட ஆர்வலர்களால் பிரபலமாகி பாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஆர்வலர்களில் ரேவதி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடத் தக்கவராக விளங்கி வருகிறார். இவர் 10-11-1962 அன்று ராமநாதன், மீனாட்சி தம்பதியர்க்கு மகளாய்ப் பிறந்தார். இவரது பூர்வீகம் தஞ்சாவூர் கும்பகோணத்தில் அமைந்துள்ள திருவிசாலூர் ஆகும். இவருக்கு நான்கு சகோதரிகள் உண்டு. தொடக்கப் பள்ளிக்கல்வி இவருக்கு திருவிடைமருதூ உயர்நிலைப் பள்ளியில் அமைந்தது. அஞ்சல் வழிக்கல்வி மூலம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பில் தேறினார்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவருககு ஆங்கில மொழியும் தெரியும். இவருககு இசைவழி குருவாக அமைந்தவர் சைதை டி. நடராஜன் ஆவார். ஓர் பிரபல மருததுவக் கம்பெனியில் குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சேர்ந்து 12 வருடங்கள் பணிபுரிந்தார். அதேசமயம் தனக்கு இரண்டாவது மகள் பிறந்ததற்குப்பிறகு மருத்துவக் கம்பெனியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை நேரிட்டது. ஆனால் அதுவரை தான் கற்றுக் கொண்ட கர்நாடக இசை, சமஸ்கிருத ஸ்லோகங்கள் இவற்றில் இவருக்கு இசைத்தாகம் அடங்கவில்லை. மேலும் ஒரு மாறுதலுக்காக தமிழிசைப் பாடல்கள் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தபோது சைதை டி. நடராஜன் அவர்களின் குரு கடாட்சம் கிடைத்தது. இதற்குப் பின்னணியாக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டது.
அப்போது தாம்பரத்தில் “கற்பக வினாயகர் திரு நெறி மன்றம்“ என்ற அமைப்பு திரு ஜெயச்சந்திரன் செட்டியார் அவர்களால் துவக்கப்பட்டு நீண்டகாலமாக செயல்படாமல் இருந்து வந்தது. செட்டியார் அவர்கள் அந்த அமைப்பின் பெயர்ப்பலகையை தான் நடத்தி வரும் மளிகைக் கடையில் மாட்டிவைத்திருந்ததை ஊர் மக்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஒருமுறை ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அந்தப் பெயர்ப் பலகையைப் பார்த்து விட்டு செட்டியாரிடம் தாம் தேவாரம் போன்ற தமிழ்ப் திருப்பதிகங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகக் கூற செட்டியாரும அவ்வாறே தமிழ்த்தாகம் கொண்ட பெண்மணி ரேவதிக்கு ஆவன செய்வதாகக் கூறிய முப்பது நிமிடங்களுக்குள் தமிழிசை ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டதாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அந்த ஆசிரியரே சைதை டி. நடராஜன் அவர்கள் ஆவார். அவர் ரேவதிக்கு கற்றுக் கொடுத்த முதற்பாடலாகிய தேவாரத்திலிருந்து “பிடியதன் உருவுமை“ “பூழியர் கோன்“ மற்றும் மூன்று பரிமாணங்களில் தோடுடைய செவியன்“ 3 பாடல்கள் சொல்லித் தந்தார். தேவதி தன் ஆசிரியரின் பாடல் பாடும்முறை, பொருளைக் கற்றுத்தருதலில் உள்ள எளிமை மற்றும் குரல் வளம் ஆகியவற்றைக் கண்டு வியந்து போய் மூன்று நாட்களுக்கு தூக்கம் வராத அளவுக்கு தமிழிசையில் ஈர்க்கப்பட்டு உடனே கடுமபயிற்சி செய்துப் பாடல்களை மனனம் செய்து ஆசிரியர் சைதை நடராசன் அவர்கள் முன் பாடிக்காட்ட சைதை டி. நடராஜன் அவர்களோ இவரிடம் இனி தேவாரப் பதிகங்கள் போன்ற தமிழில் அமைந்துள்ள பாடல்களே பாடவேண்டும் என்று உரிமையுடன் அன்புக் கட்டளையிட ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவ்வாறே செய்வதாய் உறுதியளித்து சிறந்த மாணவி என்று பெயர் எடுக்கும் அளவுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடலானார்.
அறன் அருள் என்ற அமைப்பு “சிவ தீட்சை“ (பஞ்சாட்சர ஜெபம் 108முறை ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தல்) இவரை நாளடைவில் சிவனடியார் நிலைக்கு ஆளாகும் வரை தள்ளியது. பிறகு ஸ்கந்தாஸ்ரமத்தில் ஓதுவார் வேலைக்கு பணிபுரிய ஆள் தேவை என்று கேள்விப்பட்டு பிரதோஷ காலங்களில் பாடும் வாய்ப்பு, மற்றும் விசேஷ நாட்களில் ஹோமம் நடத்துதல் போன்ற பஞ்சபுராணங்களாகிய தேவாரம். திருவாசகம், 9-ம் திருமுறை, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் பாராயணம் செய்தல் இவற்றை மேற்கொண்டார். இதுமட்டுமல்லாமல் கும்பாபிஷேகம் நடைபெறும் கோயில்களில் பஞ்சபுராணம் பாடுதல் வழக்கம். ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அவ்வரிய வாய்ப்பு கிட்டியதில் வியப்பே இல்லை.
ரேவதி கிருஷ்ணமூர்த்தி திருவாடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த சூரீயனார் அவர்கள் கோயில் ஆதீனம், திருமுறை சித்தாந்த ஆய்வு மையம் நடத்தும் “வைச சித்தாந்தப் புலவர்“ பட்டத்தை (முதல்பிரிவு) 03,.01.2010 –ல் பெற்றார். சைவப் பெரும் புலவர் (இரண்டாம் இடைநிலை பிரிவு) மற்றும் “சைவத்திருமுறை மணி (மூன்றாம் பிரிவு முதுநிலை இவ்விரு பட்டங்களை வாங்குவதற்குரிய வகையில் தன்னை முழுமையுடன் ஈடுபடுத்திக் கொண்டு அச்செயலில் இறங்கியிருக்கிறார். இவருக்கு இருமகள்கள் மூத்தமகள் வித்யாலட்சுமி பரத நாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறார். இவரது “சலங்கை பூஜை“ வைபவத்திற்கு நீதியரசர் பி,ஆர். கோகுலகிருஷ்ணன் கலந்துகொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். இரண்டாவது மகளான உமாமகேஸ்வரியின் (9-ம் வயதில்) “தேவார இசை“ அரங்கேற்றம் நடந்தேறியது என்று ரேவதி கிருஷ்ணமூர்த்தி பெருமையுடன் தெரிவித்தார். தற்போது தேவாரம், திருப்புகழ், திருவெம்பாவை, திருமந்திரம், போன்ற பாடல்கள் பாடுவதில் தன்னிகரற்று விளங்கும் வகையில் இவரது மேடைக் கச்சேரிகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
விருப்பங்கள் கர்நாடக இசையில் சுமார் 15 பெரிய கீர்த்தனைகள் கற்றுத் தேர்ந்த இவருக்கு பந்துவராளி ராகம் மிகவும் பிடிக்கும். “ஸாமி நின்னே கோரி“ என்ற சங்கராபரண ராகவர்ணம் இவரை மிகவும் கவர்ந்ததாகும். “நிதி சால சுகமா“ என்ற கல்யாணிராகக் கிருதி இவருக்கு மிகவும் பிடிக்கும். இவரைக் கவர்ந்த கர்நாடக இசை மேதைகளாக எம்.எஸ். சுப்புலட்சுமி, சுதா நகுநாதன் தனது குரு சைதை டி. நடராஜன் அவர்களை ரேவதிகிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தனக்குப் பிடித்த சபாவாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இயங்கி வரும தமிழிசைக் சங்கத்தைத் தெரிவித்தார்.
தனது இசைத் துறையில் நட்புறவுடன் பழகிவரும் ரேவதி ஸ்ரீதரன் அவர்களை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். ரேவதி ஸ்ரீதரன் அவர்கள் இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஓர் உயர்அதிகாரியாவார். தான் சமீபத்தில் ரசித்த சிறந்த தமிழ்ப்படமாகிய “மதராஸப்பட்டினம்“ படத்தைத் தெரிவித்தார். திரைப்படப் பாடலாசிரியராக கவிஞர் கண்ணதாசன் அவர்களைக் குறிப்பிட்டார். இசையமைப்பாளர்களில் “இசை ஞானி“ இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் பி.பி. சீனிவாஸ், எஸ்.பி. பால சுப்ரமண்யம், ஹரிஹரன் ஆகியோரையும் திரைப்படப் பின்னணிப் பாடகிகள் வரிசையில் தம்மைக் கவர்ந்தவர்களாக பி.சுசிலா, எஸ்.ஜானகி, ஆகியோரையும் நடிகர்களில் சிவாஜி கணேசன், விஜய் ஆகியோரையும் திரைப்பட நடிகைகளில் பத்மினி, ஜோதிகாவை ஆகியோரை விரும்புவதாகக் குறிப்பிட்டார். தாம் விரும்பும் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ், வடிவேலு ஆகியோரையும் சிறந்த திரைப்பட இயக்குனராக மணிரத்னம் அவர்களைத் தெரிவித்தார். உறவினர்களில் தாம் பெரிதும் விரும்புவர்களாக தனது சகோதரிகளையும், மைத்துனி அவர்களையும் தனது சிறந்த நண்பராக புவனா அவர்களையும் குறிப்பிட்டார்.
ரேவதி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இனிப்புப் பலகாரங்கள் ரொம்ப பிடிக்கும். மஞ்சள் நிறத்தை விரும்பும் இவர் எப்பொழுதும் புடவை அணிவதையே விரும்புகிறார். தனக்கு என்றென்றும் பிடித்த இடமாக சென்னையை மட்டுமே என்று தெரிவித்தார். இந்தியாவைத் தாம் விரும்பும் நாடாகக் கூறினார். கல்கியின் நாவல்கள் இவரை மிகவும் கவர்ந்த ஒன்று என்று தெரிவித்த இவர் மூதறிஞர் ராஜாஜியை சிறந்த தலைவராகக் கருதுகிறார். இரு சக்கர வாகனமும், காரும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
பொது தினசரி பூஜை செய்தல், தேவாரப் பாடல்கள் இசைப் பயிற்சி, தமது குடும்பத்தினருக்கு வேண்டிய பணி விடைகள் செய்வது, குரு சைதை டி. நடராஜன் அவர்களைக் கவனித்துககொள்வது, அவரிடம் தமிழ்ப் பதிகங்களைக் கற்றுக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுகிறார். பி.காம் பட்டப் படிப்பு படித்துத தேறிய இவர் ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிந்து அந்நிறுவன அதிகாரிகளிடம் நற்பெயரை வாங்கியது தனது வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று பெருமைபடத் தெரிவித்தார். தாம் விரும்பிய இசைத் துறைக்கு வந்ததாகத் தெரிவித்த அவர் ஒருவேளை தாம் இசையறிவை வளர்த்துக் கொள்ளாதிருக்கும் பட்சத்தில் தான் சார்ந்திருந்த மருத்துவப் பணியினைத் தொடர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். தாம் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்ட பணியாக இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தார் பள்ளியில் படித்துக கொண்டிருக்கும்போது எதிர்காலத்தில் நல்லவேலைக்குச் சென்று தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார் தான் இளமைக்காலத்தில் பழகிய பழைய நண்பர்களைக் காணும்போது எல்லையற்ற இன்பத்தையடைவதாகத் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினர்கள் தம் மீது அதிகப் பற்று வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியையளிக்கிறது என்றார். தனது இசையனுபவங்களை வரும காலத்தில் ஒரு புத்தகமாக வெளியிடும் எண்ணம் தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார். தான் பழகிய நண்பர்களும், தனது இரண்டாவது மகளும் அடிக்கடி தம் நினைவுக்கு வருகிறார்கள் என்றார். அடிக்கடி தனது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். சம்பவமாக 2007-ல் தனது இருமகள்களான வித்யாலட்சுமி, உமாமகேஸ்வரியின் தேவார அரங்கேற்றம் நடந்தேறிய நாளைக் குறிப்பிட்டார்.
இசை முதன் முதலில் தனக்கு இசையின் மேல் நாட்டம் தனது குருவாகிய சைதை நடராஜன் அவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடிய விதம் அதை கேட்ட கணம் முதல் தன் மனதில் அவை ஈக்கப்பட்டு அவரிடமே இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இவருக்கு ஏற்பட்டது. தனக்கு முதலில் இசை நிகழ்ச்சியில் சன்மானமாகக் கிடைத்த தொகை ரூ 300/-ஐப் பெற்ற தருணம் தான் வானத்தில் பறப்பது போன்ற உணர்வை தந்தது என்றார். அக்தொகையில் யோக நிலையிலிருக்கும் சிவபெருமான் விக்ரகம் ஒன்றை வாங்கித் தன் வீட்டின் பூஜையறையில் வைத்து ஆனந்தப்பட்டுக் கொண்டார். முதன் முதலில் தன் இசையைப் பற்றிப் போற்றிய பெருமை குரு சைதை நடராஜன் அவர்களையே சாரும் என்றார். தான் நடத்திய முதல் இசை நிகழ்ச்சி தனக்கு மிகவும் மன நிறைவையும் சந்தோஷத்தையும் அளித்ததாகக் கூறினார். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது குறுந்தகட்டிலோ தான் பாடிய பாடல் கேட்கப்படும் போதும், காணும் போதும் மிகவும் ஆனந்தம் அடைந்ததாகக் கூறினார். தன்னுடைய குருவுடன் தான் தேவார இன்னிசை நிகழ்த்தியதை தமிழ் இசைக் சங்க இயக்குநர், மற்றும் பிற அதிகாரிகள் தம்மை மிகவும் புகழ்ந்து பாராட்டியதாகத் தெரிவித்தார்.
பொதுவாக ஆண்கள் தான் “ஓதுவார்“ என்ற பட்டத்தைப் பெறுவார்கள். இதை மாற்றிக் காட்டிய பெருமை இவரையே சாரும். சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள, சேலையூரில் இருக்கும் ஓம் ஸ்கந்தா ஸ்ரமத்தில் இவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது தனக்குக் கிடைத்த எதிர்பாரத நிகழ்வாகும் என்றார் பன்னிருதிருமுறை இசைப் பதிகங்களை மனனம் செய்த இவர் மெல்லிசைப் பாடல்களையும் ஹிந்துஸ்தானி இசையையும் ரசிப்பவராகத் தெரிவித்தார்.
“சோதியே சுடரே“ என்று தொடங்கும் திருவாசகப் பாடலும் “கற்பகத்தினை“ என்று தொடங்கும் தேவாரப் பாடலும் இவர் எப்பொழுதும் விருமபிப் பாடும பாடலாகும். திருப்புகழில் “விகட பரிபள“ என்று தொடங்கும் பாடலை மிகவும் கவனத்துடன் கேட்டு அதைக் கற்றுத் தேர்ந்து 6 கட்டையில் பாடும் இவர் தான் கற்ற பாடல்களலேயே மிகக் கடினமான பாடலாகக் குறிப்பிட்டார். இவர் குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்கிறார் தனது குரல் வளத்திற்காக “லேகியம்“ ஒன்றை தினமும் காலை வேளைகளில் சாப்பிடுகின்றார்.
தான் இதுவரை நிகழ்த்திய எல்லா நிகழ்ச்சிகளும் தனக்கு மன நிறைவைத் தந்தததாக குறிப்பிட்டார். தம்மை மிகவும் பாதித்த பாடலாக திருவாசகத்தில் வரும் “ நாடகத்தால் உன்னடியார்“ என்று தொடங்கும் பாடலைத் தெரிவித்தார். அதே போல் தம்மை மிகவும் பாதித்த ராகமாக சுபபந்துவராளியைக் குறிப்பிட்டார்.
மறக்க முடியாத சம்பவங்கள் இதுவரை தான் நிகழ்த்தி வந்திருககும் இன்னிசை நிகழ்ச்சிகள் யாவும் ஒவ்வொரு வகையில் மறக்க இயலாதவகையில் அமைந்தவையாகும் என்றார். தனது இசை குரு சைதை நடராஜன் அவர்கள் தன் வாழ்நாளிலேயே மறக்கமுடியாதவர் என்றார். தனக்கு ரசிகர் என்றும் வழித்தோன்றல்களும் தன் இரு மகள்கள் வித்யாலட்சுமியும், உமாமகேஸ்வரியுமே என்று தெரிவித்தார்.
தான் பாடிவரும் இன்னிசை நிகழ்ச்சிகளைப் பற்றி தனது குரு பாராட்டி வருவதை மறக்கவே முடியாது என்றார். தான் தமது குடும்பத்தினருடன் இருக்கும்போதும, கணவர், இரு குழந்தைகளுடன் இருக்கும் நேரம் தனக்கு சந்தோஷமான நேரமாகக் கருதுகிறார்.
நகைச்சுவை சம்பவம் ஒன்றை தன்னால் மறக்க இயலாததாகக் குறிப்பிட்ட இவர் ஒரு சமயம் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்யம் வசிக்கும் மிருதங்க கலைஞர் தன்னுடைய குரு அவர்களின் குறிப்பறிந்து சரியாகத் தொடர்ந்து வாசிக்க முடியாமல் திணறியதைப் பார்த்து விட்டு பொறுமையிழந்து குரு அவர்கள் அவர் வாசிப்பதை நிறுத்திவிடச் சொன்னது எதிர்பாராத விதமாக தன்னைச் சிரிப்பில் ஆழ்ததிவிட்டது என்றார். கவலைகள் என்று குறிப்பிடும் அவர் எதையும் எதிர்நோக்கும் மனோதிடம் உள்ள வகையில் பக்குவப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
தனது இரு மகள்களின் பிறந்த நாட்கள் தனது திருமணநாள் தனது தகப்பனாருடைய பிறந்தநாள் மற்றும் தான் இசை கற்கும் நாட்கள் எல்மே நான் விரும்பும் நாட்கள் ஆகும் என்றார். முகவரி: திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி, சாய்தீப், 2/34 முத்துராமலிங்க தேவர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை 600 059. கைபேசி எண் : 9840621898

More Profiles