V.V. Radha Krishna Bhagavathar

Profile of Thiru V.V. Radha Krishna Bhagavathar

இன்று தமிழகத்தில் கர்நாடக இசைக்கு மட்டுமல்லாமல் அதைச் சார்ந்த மற்றும் ஒரு கலைக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகிவருகிறது. அதுதான் நாமசங்கீர்த்தனக்கலை. ஏராளமானோர் இக்கலைப் பட்டியலில் அங்கம் வகித்து பெருமை சேர்த்து வருகிறார்கள். அத்தகையோரில் வி.வி. ராதா கிருஷ்ண பாகவதர் என்பவர் நாம சங்கீர்த்தனத்தில் இன்று யாவராலும் அறியப்படுபவராக இருந்து வருகிறார்.
ராதா என்று யாவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவரின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளிக்கும் கரூருக்கும் இடையில் அமைந்துள்ள ரங்காவரம் என்னும் ஊராகும். இவர் வி.எஸ். வெங்கடராஜா அய்யர் – மீனாட்சி தம்பதியருக்கு 30-11-1951 அன்று மகனாய் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஷோபனாலட்சுமி ஆகும். இவருக்கு வி.வி. வெங்கட ரமண பாகவதர், வி.வி. கல்யாணராமன் என்ற இரு மூத்த சகோதரர்களும் வி.வி. கோபால கிருஷ்ணன் என்ற ஒரு இளைய சகோதரரும் உண்டு. மற்றொரு இளைய சகோதரர் ஹரிஹரன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குருக்களாக கோபாலகிருஷ்ண பாகவதரும், சஞ்சீவி பாகவதரும் அமைந்தனர்.
இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துத தேறினார். இறைவனைப் பற்றி நாமாவளிகளின் மேல் கொண்ட நாட்டத்தால் கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளாமல் பஜனைப் பாடல்களும் மெல்லிசைக் குழுவில் பாடியும் வந்தார். தமிழ் தவிர இவருக்கு ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளும் இவருக்கு தெரியும்.
நாம ஸங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு இவரை கோபாலகிருஷ்ண பாகவதரும், சஞ்சீவி பாகவதரும் அறிமுகம் செய்து வைத்தனர். முதன் முதலில் சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலருகேயுள்ள தேவார பாடசாலையில் இவரது முதல் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி அரங்கேறியது. முதன் முதலாக தமது குருவைப் போற்றும் வகையில் குருவந்தனப் பாடலைப்பாடினார். இவர் “அபங்கம்“ பாடுவதில் தன்னிகரற்று விளங்கினார். நாமசங்கீர்த்தனத்தில் பாடப்படும் பாடல்கள் எல்லாவற்றையும் எளிதில் மனைம் செய்து பாடும் திறமை பெற்ற இவர் தமக்கு இதுவரை வர வேண்டிய பட்டங்கள் எதையும் மறுத்து விட்டார். குழந்தைப் பருவம் முதல் சான்றிதழ்கள் விருதுகள், கேடயங்கள் எதையும் மறுக்கவே செய்திருக்கிறார்.
நாம சங்கீர்த்தனைக் கலையில் புகழ் பெற்ற இவர் அச்சுக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதில் ஈடுபாடு கொள்ளாமல் பஜன் சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து நாம ஸங்கீர்த்தனத்திற்குகந்த வகையில பாடல்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்க்சிகளில் பாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ராதாகிருஷ்ணன் அவர்கள் அந்தமான் சென்று அங்கு சீதாகல்யாணம், ராதாகல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை அளித்துப்புகழ் பெற்றார். இந்தத் துறைக்கு வருவதற்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
“அபங்க மாலிக“என்ற இசைத் தொகுப்பு ஒன்றைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். நாமானந்த கிரிஸ்வாமிகள் இப்பாடல் குறுந்தகட்டினை சென்னை நங்கநல்லூரில் அமைந்திருக்கும் குருவாயூரப்பன் கோயிலில் வெளியிட்டார்.
விருப்பங்கள்:- பெரும்பாலும் மோகனம், ஹிந்தோளம், கல்யாணி தர்பாரி கானடா போன்ற ராகங்களில் இவரது நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சி அமைந்திருக்கும். கர்நாடக இசையில் பிரபல உருப்படியான வர்ணம் என்ற அமைப்பில் அமைந்த பாடல்களைச் செவிவழியே மட்டும் கேட்டு ஆனந்தம் கொள்ளும் இவருக்கு நாமசங்ககீர்த்தனத் துறையில் திரு ஓ.எஸ். சுந்தர் அளிக்கும் நிகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும் என்றார். தன்னுடன் வாசிக்கும் பக்கவாத்யக்காரர்களின் ஒத்துழைப்பு அதிகம் என்பதால் அவர்களை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.
நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடத்தப்படும் கலை அரங்கங்களில் தமது விருப்பத்திற்குரிய சென்னை, தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவைத் தெரிவித்தார். சிறந்த வாக்கேயக்காரர்களாக பத்ராசலராமதாஸர், சதாசிவப்ரம் மேந்திரர், புரந்தரதாஸர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார். சென்னையில் சிறந்த சபாவாக இவர் குறிப்பிடுவது ஸ்ரீகிருஷ்ண கான சபாவை. சிறந்த ஒலிப்பதிவுக் கூடமாக “ஸ்ருதிலயா“வைக் குறிப்பிட்டார். நாமசங்கீர்த்தனத்துறையில் தமக்கு எல்லோரையும் மிகவும் பிடிக்கும் என்கிறார். தமது மாணாக்கர்களில் எல்லோரையும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
திரைப்படங்களில் சிறந்ததாக ஏ.பி. நாகராஜன் இயக்கிய அத்தனை புராணப்படங்களையும் இவர் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார். பாடலாசிரியர்களில் கவிஞர் கண்ணதாசன் அவர்களையும். இசையமைப்பாளர்களில் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தியையும் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார். பின்னணிப் பாடகர்களில் டி.எம். சௌந்தரராஜன் அவர்களையும், பெண் பாடகிகளில் திருமதி கே.பி. சுந்தராம்பாள் ஆகீயோரின் குரல் வளத்தினையும் புகழ்ந்தார். நடிகர்களில் சிவாஜி கணேசன் அவர்களையும் நடிகைகளில் சாவித்திரி, மற்றும் பத்மினி ஆகியோரின் நடிப்பைப் பிடிக்கும் என்றார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் அவர்களின் ஹாஸ்ய நடிப்பைப் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார். திரைப்பட இயக்குநர்களில் ஏ.பி. நாகராஜன், கே. பாலசந்தர் ஆகீயோரின் படங்களை விரும்புவதாக தெரிவித்தார்.
தமக்கு உறவினர்கள் யாவரையும், நண்பர்கள் எல்லோரையும் பிடிக்கும் என்றார். உணவு வகைகளில் வற்றல் குழம்பு, சுட்ட அப்பளம், ரசம் மற்றம் ஊறுகாய் ஆகியவற்றை மிகவும் ருசித்து உண்ண ஆசை என்றார். நிறங்களில் வெண்மையும் உடைவிஷயத்தில் வேஷ்டியணிவதையும் விரும்புவதாகக் குறிப்பிட்டார். தான் விரும்பும் இடமாகச் சென்னையை தெரிவித்தார். இந்திய நாடே தமக்குப்பிடித்தமான நாடாகும் என்றார். சிறுவயதிலிருந்தே தனக்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும் என்றார். சிறந்த புத்தகமாக தான் இன்றும் விரும்பிய நூலான மஹிபுதி மஹராஜ் என்பவரின் “பக்தவிஜயத்தை” குறிப்பிட்டார்.
பொது:- தினசரி தான் செய்யும் பணிகளில் பூஜை செய்தல், பஜனைப் பாடல்களைப் பாடுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தான் மேற்கொண்ட பணிகளிலேயே சிறந்ததாகக் கருதப்படும் “பாகவத ஆராதனை“ எனப்படும ஓர் அரிய பணியைச் செய்ததாகக்கூறினார். இதில் 108 பேரடங்கிய குழுவில் 100 பேர் ஆண்களும் 8 சுமங்கலிப் பெண்களும் கலந்து கொள்வார். 100 ஆண்களுக்கு ஆராதனை நிகழ்வு நடக்கும் முன்னரே அவர்களுக்கு வேண்டிய 8 முழுவேஷ்டி, துளசி மாலை, உட்காருவதற்கு மனை, குறிப்பிட்ட ஒருதொகையாக சின்ன சம்பாவணை தரப்படும. பிரகலாதன், நாரதமுனி என்று பல பெயரிட்டு முறையாக ஸ்லோகங்களும் சொல்லி பாதபூஜை செய்வர் (அவர்களுக்கு நுனிவாழை இலையில் சாப்பாடு பரிமாறுவர். அவர்கள் சாப்பிட்ட இலைகளைப் பத்திரமாக அப்படியே இருக்க அவர்கள் சாப்பிட்ட அறையை மூடிவிடுவார்கள்). பெண்களில் பத்மாவதி, மீராபாய் என்று பெயரிட்டு முறையாக அவர்களை வழிபாடு செய்வர். சாப்பிட்ட இலைகளின் ஆராதனை வழிபாடு செய்பவர்கள் முறையாக அங்கப்பிரதட்சணம் செய்து முடிப்பார்கள்.
தாம் விரும்பியே ஏற்றுக் கொண்ட துறையாக நாமசங்கீர்த்தனத் துறையைப் பற்றிக் குறிப்பிட்டார். பழைய நண்பர்களைக் காணும் போது எல்லையற்ற மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். தான் மிகவும் விரும்பும் உறவினராகத் தனது மனைவியைக் குறிப்பிட்டார். தாம் அந்தமானில் நிகழ்த்திய நாமசங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறினார்.
1993 –ம் ஆண்டில் இவர் புதுக்கோட்டையில் நிகழ்த்திய நரசிம்ம ஜெயந்தியைப் பற்றிக் குறிப்பிடும் போது ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் நிகழ்த்திய சமயம் “தானம்“ செய்ததை சமூகத்திற்குச் செய்த தொண்டாகக் குறிப்பிட்டார். தனக்கு எல்லா வகைகளிலும் உதவுவதாக மனைவி, மகன், மகள் ஆகியோரைப் பற்றிப் பெருமையுடன் பேசுகிறார். தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதும் எண்ணம் தமக்கு தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார். எப்போதும் தன் மனத்தில் அடிக்கடி தோன்றுபவராக குரு கோபாலகிருஷ்ண பாகவதரைத் தெரிவித்தார்.
மறக்க முடியாதவை :- தான் நிகழ்த்திய எந்த ஒரு நிகழ்ச்சியும் மறக்க இயலாதவை என்றார். தாயை என்றும் தன்னால் மறக்க முடியாது என்றார். நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தும் சமயங்கள் தனக்கு இன்பத்தையளிக்கின்றது என்றார். நகைச்சுவையைப் பற்றி இவர் குறிப்பிட்டது என்னவென்றால், ஒரு சமயம் தான் நிகழ்த்தவிருக்கும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிக்காக டோல்கி எனப்படும் வாத்யத்திற்கு ஸ்ருதி கூட்டுவதற்காக தன் உதவியாளரிடம் ஒரு சுத்தியலை எடுத்து வரச்சொன்னதும் அவரோ இவரை டோல்கி வாத்யத்தை ஒருமுறை சுற்றிவந்தார். நகைச்சுவைச்சம்பவமாக இப்படி ஏற்பட்ட தருணம் என்றும் தன்னால் மறக்க இயலவில்லை என்றார். மறக்க முடியாத சம்பவமாக கவலையைப்பற்றி அவர் கூறியது தனது இளைய சகோதரர் வி.வி. ஹரிஹரன் ரத்தப் புற்று நோயினால் அவதிப்பட்டு இறந்ததைப் பற்றிக் கூறினார். தான் நாமசங்கீர்த்தன இசை நிகழ்த்தவிருக்கும் எந்த நாளும் தமக்குப் பிடித்த ஒன்று என்று தெரிவித்தார். இவரின் திருமண தேதி 12-11-1980 ஆகும். இவரது அன்னை மறைவு நாள் 12-11-1983. இவ்விரு நாட்களைத் தன்னால் மறக்க இயலாது என்று தெரிவித்தார். மாலைப் பொழுதுகள் தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றார்.
நாமசங்கீர்த்தனம் இதைப் பற்றிக் குறிப்பிடும் இவர் தன் தந்தை தன்னுடைய இரண்டாவது சகோதரர் கல்யாணராமன் மற்றும் ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் தன்னால் இக்கலையில் முழுஈபாட்டுடன் செயல்பட முடிகிறது என்றார். தான் முதன்முதல் நிகழ்த்திய நாமசங்கீர்த்தனம் மிகவும் சந்தோஷத்தையளித்ததாகக் குறிப்பிடும் இவர் சில சமயங்களில் நடத்தும் நிகழ்ச்சிகள் நேரமின்மையால் உடனடியாக முடிக்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கத்தை வெளியிட்டார். இசைத் தொகுப்பை குறுந்தகட்டில் தான் தயாரித்து வெளியிட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார். அதேபோல் அதனைக் கேட்டாலோ, கண்டாலோ மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். முதன் முதலாக தான் நிகழ்த்திய நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த சன்மானத் தொகை ரூ. 40/- யைத்தன் பெற்றோரிடம் அளித்ததைப் பெருமையுடன் கூறினார்.
ஒருமுறை தான் எதிர்பாராத வகையில் காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் அவர்களின் 60வது பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் அவர்முன் நிகழ்த்திய நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தியதைக் குறிப்பிட்டார். நாம சங்கீர்த்தனம் அல்லது கர்நாடக இசை, மற்றும் அபங்கம் பாடுவதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றார். “அலையும் கடலில் அமிழும் போது அபயமளிக்கும் அருண மணியே“ என்று முருகப் பெருமானைப் பாடிய சமயங்களில் தான் தன்னையறியாமல் உருகிப் பாடுவதாகக் தெரிவித்தார். ஒருமுறை தன் மகள் ஸ்ருதிக்கு இருசக்கர வாகனத்தின் மூலம் விபத்து ஏற்பட்ட சமயம் இவருக்கு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. தனது தந்தையின் குறிப்பறிந்த மகளோ அவரை நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தச் செல்லுமாறு பணித்ததை மன நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தான் போற்றும் மேதையாக கோபால கிருஷ்ண பாகவதரையும், அவரது சீடர் என்.எஸ். நடராஜன் ஆகியோரையும் தெரிவித்தார்.
ஒருமுறை தான் எதிர்பாராத வகையில் காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் அவர்களின் 60வது பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் அவர்முன் நிகழ்த்திய நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தியதைக் குறிப்பிட்டார். நாம சங்கீர்த்தனம் கர்நாடக இசை, மற்றும் அபங்கம் பாடுவதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றார். “அலையும் கடலில் அமிழும் போது அபயமளிக்கும் அருண மணியே“ என்று முருகப் பெருமானைப் பாடிய சமயங்களில் தான் தன்னையறியாமல் உருகிப்பாடுவதாகக் தெரிவித்தார்.
குரல் வளத்திற்காக எந்த ஒரு பிரத்யேக ஏற்பாட்டையும் தாம் செய்து கொள்வதில்லை என்று குளிர்காலங்களில் விசேஷமாக எந்த ஒரு பிரயத்தனமும் மேற்கொள்வதில்லை என்று கூறினார். தனக்கென்று எந்த ஒரு மருத்துவரையும் வைத்துக் கொள்ளவில்லையென்றார். “கதிலேதனி பதி நீவனி“, “சரணாகதவத்சலா. போன்ற அருமையான கிருதிகளை இயற்றிய தியாகய்யரை மிகவும் இவர் போற்றாத நாளில்லை என்றார். தாம் நிகழ்த்தவிருக்கும் எந்த ஒரு நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்காகத் தயார் செய்யும் சமயங்கள் வெகு விருப்பத்துடனேயே செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
விலாசம்: V.V. ராதாகிருஷ்ண பாகவதர் L-2 “E“, பாரதி தாசன் காலனி (5வது தெரு அருகில்) கே.கே. நகர் சென்னை – 600 078. கைப்பேசி: 99 62 50 77 57.

More Profiles