Bhushany Kalyana Raman
கர்நாடக இசைக்கலைஞர்களில் பிரபலமாக விளங்கும் பெண் இசைக்கலைஞர்களில் குறிப்பாக வாய்ப்பாட்டில் பூஷணி கல்யாணராமன் அவர்களைத் தெரியாதவர் அநேகமாக யாரும் இருக்க முடியாது. வசந்தி என்று செல்லமாகப் அழைக்கப்படும் அவர் எஸ். குலசேகரன் பூம்பாவை தம்பதியிருக்கு 07.11.1957 அன்று திருமகளாகப் பிறந்தார். இவரது பிறப்பிடம், சொந்த ஊர் இலங்கை யாழ்ப்பாணத்தில் அருகிலுள்ள வேலனை ஆகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு இசையில் குருவாக அமைந்தவர்கள் தம் தாய் தந்தையரே. பள்ளிக் கல்வியை யாழ்ப்பாணத்திலும் B.Sc (கணிதம்) பட்டப்படிப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் தேர்ச்சி பெற்றார்.

Profile of Thirumathi Bhushany Kalyana Raman

கர்நாடக இசைக்கலைஞர்களில் பிரபலமாக விளங்கும் பெண் இசைக்கலைஞர்களில் குறிப்பாக வாய்ப்பாட்டில் பூஷணி கல்யாணராமன் அவர்களைத் தெரியாதவர் அநேகமாக யாரும் இருக்க முடியாது.

வசந்தி என்று செல்லமாகப் அழைக்கப்படும் அவர் எஸ். குலசேகரன் பூம்பாவை தம்பதியிருக்கு 07.11.1957 அன்று திருமகளாகப் பிறந்தார். இவரது பிறப்பிடம், சொந்த ஊர் இலங்கை யாழ்ப்பாணத்தில் அருகிலுள்ள வேலனை ஆகும்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு இசையில் குருவாக அமைந்தவர்கள் தம் தாய் தந்தையரே. பள்ளிக் கல்வியை யாழ்ப்பாணத்திலும் B.Sc (கணிதம்) பட்டப்படிப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் தேர்ச்சி பெற்றார். மிழைத்த தவிர ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் இவருக்குத் தெரியும். இசைக் காக இவரை மேடையேற்றிய பெருமை சரஸ்வதி வாக்கேயகார. டிரஸ்டச் சேர்ந்த திரு. N.V. சுப்பிரமணி யம் அவர்களைச் சாரும். இவர் முதன் முதலில் இசைக் கச்சேரி செய்த இடம் ஸ்ரீலங்கா ஆகும். வாய்ப்பாட்டும், வீணை வாசிக்கவும் தெரிந்த இவர் அடதாள வர்ணமான விரிபோணி என்ற பாடலை முதன் முதலாகப் பாடித் தன் இசையுலக வாழ்வைத் துவக்கினார். “ஓ ரங்க சாயி“ என்ற பாடல் இவரை மக்கள் மத்தியில் பரவலாக்கியது. சுமார் 500 கீர்த்தனைகளுக்கு கற்றுத் தேர்ந்த திருமதி பூஷணி கல்யாணி ராமனுக்கு ஸ்ரீலங்காவில் தமது17-ம் வயதில் “சிவஞான ரஞ்சிதம்“ என்ற பட்டத்தை இலங்கையிலுள்ள காஞ்சி தொண்டை மண்டலம் ஸ்வாமிகள் வழங்கினார்.
“மனத்தகத்தான.... என் கணுளானே என் கண் உளானே” என்ற இவர் பாடிய இப் பாடல் மக்கள் மனதை மயக்கியது எனலாம். இந்தியன் பைன் ஆர்ட்ஸ், மியுஸிக் அகாடெமி, ஸ்ரீகிருஷ்ண கான சபா, மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், போன்ற சபாக்களில் இவர் வாங்கிய சான்றிதழ்கள், பாராட்டிதழ்கள், தங்கம், வெள்ளிக் கேடயங்கள் ஏராளம்.
வெளி நாடுகள் பலவற்றிற்குச் சென்ற பூஷணி அவர்களுக்கு தையற்கலை, கார் ஓட்டுவது செல்லப்பிராணிகளை வளர்ப்பது அதிலும் குறிப்பாக அல்சேஷன் நாய்கள் வளர்ப்பதில் இவருக்கு விருப்பம் அதிகம்.
வீணவாசிப்பதில் புலமை பெற்ற பூஷணி அவர்கள் மெல்லிசை, மற்றும் பக்தி இசையிலும் சிறந்து விளங்கினார் அகில இந்திய வானொலியின் உயர்ந்ததாகக் கருதப்படும் “A” கிரேடு கலைஞராக விளங்குகிறார். இவர் வாங்கிய பட்டங்கள். 1. “ஈழத்து இசைக்குயில்“ 2. 2003-ம் ஆண்டில் இலங்கை அரசு இவருக்கு கானரத்னா“ வழங்கியது 3. தமிழக அரசு இவரைக் “கலைமாமணி“ பட்டம் அளித்து கௌரவித்திருக்கிறது.
பூஷணி கல்யாணராமன் தனது கர்நாடக இசைக் கச்சேரிகளை தமிழகம் மட்டுமல்லாது அயல்நாடுகளான இலண்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், பிரேஸில், இத்தாலி, சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, (அமெரிக்காவில் பலமுறை இசை நிகழ்ச்சிகள்) நடத்தச் சென்றிருக்கிறார்.
தாம் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் தன்னை இசையில் இன்னும் ஈடுபாடு கொள்ளும் வகையில் யாழ்ப்பானம் பல்கலைக்கழகத்திலும், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும் சென்னை அடையாறில் உள்ள கலாசேஷத்ராவிலும் இசைக்கலையை வளர்த்துக் கொண்டார்.
இவர் பாடிய இசைத் தொகுப்புகள், அமுதம், ஏ.வி.எம், ஸ்வாதி சொல்யூஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் வெளியாகியுள்ளன. இவற்றில் கர்நாடக இசையும், பக்தி இசையும் அடங்கும்.
மறக்கமுடியாத நிகழ்வுகள்:- சென்னை மியூசிக் அகாடெமியில் பூஷணி கல்யாண ராமன் தான் நிகழ்த்திய வாய்ப்பாட்டு நிகழ்ச்சி தன் வாழ்க்கையில மறக்க முடியாததாகும் என்கிறார். அதேபோல் வெளிநாட்டில் தாம் இலண்டனில் யாழ்ப்பாண மருத்துவ மனைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியதை மறக்க முடியாது என்றும் கூறினார்.
தாம் பாடிய கரஹரப்பிரியா ராகத்தில் அமைந்த “சக்கனிராஜ்“ என்று தொடங்கும் பாடல் ஒலிப்பதிவான சமயம் தம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும் என்று தெரிவித்தார் இப்பாடலை “அமுதம்“ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. தம் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவர்களாக தாய் தந்தையைக் குறிப்பிட்டார். தனக்கு ரசிகர் கூட்டம் ஏராளமாக இருப்பதைக் கௌரவமாகக் கருதுகிறார்.
தன் இசை வழித் தோன்றலாகத் தன் சகோதரி குலநாயகியின் மகள் அபிராமியைக் குறிப்பிட்டார். “கலாரஸனா“ என்ற அமைப்பில் இவர் நிகழ்த்திய கச்சேரியில் பிரபல இசைக் கலை விமர்சகர் சுப்புடு இவரைப் பிற்காலத்தில் பெரிய பாடகியாக பிரகாசிப்பார் என்று பாராட்டியதை “வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி“ எனப்து போல் தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டைத்தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகக் கூறினார்.
தனது இசை நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்தேறியது என்று நினைக்கும் போதும் தன் குருவும் தந்தையார் அடைந்த சந்தோஷம், தன் மாணவர்கள் நெஞ்சுருகப் பாடும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது என்கிறார்.
நகைச்சுவை என்று தான் ரசித்ததில் கலைவாணர் N.S. கிருஷ்ணன் இசையைப் பற்றி பாடிய ஒரு பாடலில் “இது சங்கீத ஞானிகளின் சிரிப்பு“ என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் தன்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்ததாகக் கூறினார்.
“கவலைகள்“ என்று பார்த்தால் தந்தை மற்றும் தமது குருவாக விளங்கிய தஞ்சாவூர் கல்யாணராமன் அவர்களின் அகால மரணம். இது மட்டுமல்லாமல் இலங்கையில் தமிழர்கள் படும் அவதி என்றும் தீராத வலியாக இருந்து வருகிறது. மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். தான் முதன் முதலில் விருது வாங்கிய நாள் மறக்க முடியாத நாளாகும் என்று தெரிவித்தார். சென்னையைத் தன் வாழ்வில் மறக்க முடியாத இடமாகக் குறிப்பிட்டார். காலைநேரம் என்றும் தனக்கு மறக்க முடியாத நேரம் என்றும் தெரிவித்தார். தமக்கு பிடித்த இடமாக இந்தியாவைப் பெருமையுடன் தெரிவித்தார்.
இன்னும் மறக்க முடியாத மூன்று இசை நிகழ்ச்சிகளில், முதலாவதாக நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவில் பாடியதும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பாடியதும் ராமனாதன் இசைக்கல்லூரியில் பாடிய போது தனக்கு சன்மானமாகக் கிடைத்த ரூ.1 ½ லட்சத்தை அப்படியே நன்கொடையாக வழங்கி விட்டார்.
தம் 16 வது வயதில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் சேர்வதற்கு முன். காஞ்சி மஹா முனிவரைக் கண்டு அவர்முன் “ஐந்து பேரறிவும்“ என்ற சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை உருக்கத்துடன் பாடியதைக் கேட்ட காஞ்சி மகா முனிவர் இவரை மனமார ஆசீர்வாதம் அளிக்க தோன்றி நிறைய பழங்களையும் அளித்ததாகக் கூறினார்.
1984-ல் தாம் நிகழ்த்திய மியூசிக் அகாடெமி சங்கித சீசனில் (JUNIOR PROGRAMME மதியம் 1 To 2.30) கச்சேரியைக் கேட்டு ரசித்த தனது குரு திரு. கல்யாணராமன் அவர்கள் கச்சேரி மிகவும் அருமையாக இருந்ததாகக் கூறியதைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
1988 –ல் ஒருமுறை இவர் ஆஸ்திரேலியாவில் சிவா – விஷ்ணு கோயிலுக்காக ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்குச் சென்ற பூஷணி அவர்களின் இன்னிசையை ரசித்துக் கேட்ட ஒரு பெண்மணி தன் கைகளில் இருந்த பொன் வளையல்களைக் கழற்றி இவருக்குப் பரிசாக அளித்து இவரை திக்கு முக்காட வைத்து விட்டார். பின்னார் அந்தப் பெண்மணியிடமே அவ்வளையல்களைத் திருப்பிக் கொடுக்க முனைந்த போது அவர் பலமுறை மறுக்கவே வேறு வழியின்றி சிவா – விஷ்ணு கோவிலுக்கே வளையல்களை நன்கொடையாக அளித்துவிட்டார்.
ஒரு சமயம் ஜெர்மனி LUNE BURG பல்கலைக்கழகத்தில் ஒலிபெருக்கியில்லாமல் நடந்த தம் இசை நிகழ்ச்சியில் ராகம் தானம் பல்லவி இன்டர்நெட் மூலமாக ஒளிபரப்பாகியதை சுமார் 300 பேர் மூன்று மணி நேரத்திற்கு மேல் கண்டு ரசித்ததையும் தம் வாழ்வில் மறக்க முடியாது என்றார்.
தன் தந்தை, தாய் மற்றும் தாத்தா மாமா ஆகியோரிடமிருந்து இசையார்வம் தனக்கு வெளிப்பட்டதாகத் தெரிவித்தார். முதன் முதலில் தம் 10 –ம் வயதில் இலங்கையில் இசைநிகழ்ச்சியை ஒரு கோயிலில் துவக்கினார். தமது 20-ம் வயதில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த போது கிடைத்த சம்பளமே தன் முதன் சம்பளம் என்றார். மேடையில் இசைக் கச்சேரி செய்யும் போதெல்லாம் இன்றும் நன்றாகப் பாட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது என்றார். மேடையில் தம் இசை நிகழ்ச்சி முடிந்ததும் தாம் ஒருவிதமான நிலையில் விடுபட்டு இருப்பதாகவும் இனிவரும் கச்சேரிகளில் இதை விட இன்னும் சிறப்பாகப் பாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது என்று கூறினார்.
தன் இசை நிகழ்ச்சி முதன்முதலாக ஒலிப்பதிவு செய்யப் பட்ட போது படபடப்பு ஏற்பட்டதாகவும் பிறகு ஒரு விதமாக சகஜ நிலைக்குத் திரும்பு வதற்குச் கொஞ்ச நேரம் கிடைத்தது. தான் பாடிய இசை நிகழ்ச்சி இசைக் குறுந்தகடு வடிவில் வெளிவந்த பொழுது சந்தோஷமாக இருந்ததாகக் கூறினார். இன்றும் பல குறுந்தகடுகள் வெளிவலம் வாய்ப்பைப் பெறும் வகையில் தான் இன்னும் இத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தான் செய்த இசை நிகழ்ச்சிகள் வானொலியிலோ, தொலைக்காட்சிகளிலோ கண்டு கேட்ட பின்பு இதைவிட இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமே என்றும் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதாகக் கூறினார். தான் செய்த இசைக் கச்சேரியில் முதன் முதலாக வாங்கிய சம்பளத்தைத் தந்தையிடம் அளித்தார். ஆஸ்திரேலியாவில் ஒருமுறை இவரது கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் சந்தோஷ மிகுதியால் சத்தம் போட்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இவரது இசை M.S. சுப்புலட்சுமி பாடியதைப்போல இருந்தது என்று கூறியதாக பூஷணி பெருமைப்பட தெரிவித்தார்.
தனக்கு எதிர்பாராத வகையில் தமிழ்நாடு அரசு வழங்கிய “கலைமாமணி” பட்டம் கிடைத்ததாகக் கூறினார். வாழ்க்கையில் எதையும் தான் எதிர்பார்ப்பதில்லை என்றும் ரசிகப் பெருமக்கள் தன் இசையைக் கேட்பதில் ஆனந்தம் கொள்கிறார். மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படங்களில் வரும் கர்நாடக இசையில் அமைந்துள்ள பாடல்கள் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார், ராகங்களில் காம்போஜியும், சங்கராபரணம் மோகனம், பைரவி மற்றும் கல்யாணி போன்றவை மிகவும் பிடிக்கும் என்றார்.

தான் கற்றுக் கொண்ட பாடல்களிலேயே மிகக் கடினமாகக் கருதுவது தியாகய்யர் இயற்றிய “ க்ஷீணமை திருகா“ – என்ற முகாரி ராகப் பாடல் என்றார். கர்நாடக சங்கீதத்தில் தான் இவ்வளவு புகழ் அடைந்ததற்குக் காரணமாக விளங்கியவர்கள். 1. தஞ்சாவூர் கல்யாணராமன் (கணவர்). 2. திருமதி M.S. சுப்புலட்சுமியைத்தன் இசைத் தாயாகவே கருதி வருகிறார். 3. இசைப் பேராசிரியர் பி. பாலகிருஷ்ணன் அவர்களின் கற்றுக்கொடுக்கும் திறன் மகத்தானது என்றும் தன் இசைப் பயணத்திற்கு ஏணியாக இருந்து புகழின் உயரத்திற்கு ஏற்றி வைத்த பெருமை அமரர் பாலகிருஷ்ணன் அவர்களையே சாரும் என்று மன நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
இசை மேதைகளில் தனக்கு இலட்சண இசைக்கு தஞ்சாவூர் கல்யாண ராமன் அவர்களையும் இலட்சிய பக்தி பூர்வ இசைக்கு திருமதி M.S. சுப்புலட்சுமி அவர்கள் உரமாய் இருந்து தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களாகக் குறிப்பிட்டார். தன் குரல் வளத்தைக் காப்பாற்றுவதற்காக குளிர்காலப் பனியில் தலை காட்டுவதில்லை. அதைத்தவிர்ப்பதாகவும், ஆகார விஷயங்களில் மிகக் கவனமாக இருப்பதாகவும், மனத்துக்குள்ளேயே பாடல்களைப் பாடிக் கொண்டே இருப்பதாகவும் அப்படி பயிற்சி செய்வதால் தன் இசையில் முழுக்கவனமும் முழுத்திறமையையும் காட்ட முடிகிறது என்றார்.
குளிர் கால சமயங்களில் கம்பளி உடைகளை அணிந்து தொண்டையை மிகப்பத்திரமாகப் பாதுகாத்து வருவதாகவும் கூறினார். கூடியவரை சூடான நீரையே அருந்துவதாகவும் கூறினார் குரல் வளத்திற்காகக் தனக்கென்று மருத்துவர் திரு. மோகன்காமேஸ்வரன் அவர்களையும் இதற்கும் அப்பால் இறைவனையும் மற்றும் நம்பிக்கையுடன் இருந்து வருவதாக தெரிவிக்கிறார். தான் மேற்கொண்ட எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் பிடித்தமானதாக மியூஸிக் அகாடெமியில் நடந்த இசை நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். தனக்குப் பிடித்த வெளிநாடு இலண்டன் என்று தெரிவித்தார். கர்நாடக இசைக் கீர்த்தனைகளில் தன்னை மிகவும் பாதித்தது “சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்க்கமு“ என்ற தியாகய்யர் இயற்றிய கீர்த்தனை என்று கூறினார்.
தனக்குப் பிடித்தமானவை :- பூஷணி அவர்கள் தாம் விரும்பி ரசித்த தில்லானா தஞ்சை கல்யாணராமன் பஹாதி ராகத்தில் பாடியதாகும். ஆண் பாடகர்களில் சஞ்சய் சுப்ரமண்யம் அவர்களின் கச்சேரியை மிகவும் விரும்ப ரசிப்பதுண்டு என்கிறார். பெண் பாடகிகளில் M.S. தன்னை மிகவும் கவர்ந்தவராவர் என்கிறார்.
தன்னுடன் கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் உடன் வாசிக்கும் பக்க வாத்யக்காரர்களான அக்கரை சுப்புலட்சுமியையும், பூங்குளம் சுப்ரமண்யம் அவர்களையும் கடம் கார்த்திக் அவர்களையும் மிகவும் பிடிக்கும் என்றார். கலையரங்கங்கள் என்று வரும்போது சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள சிவகாமி பெத்தாச்சி (ஆடிட்டோரியம்) கலையரங்கம் தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறினார்.
கர்நாடக இசையில் தனக்கு மிகவும் பிடித்த சாகித்ய கர்த்தாவாக பாபநாசம் சிவன் அவர்களைக் குறிப்பிட்டார். சென்னையில் தனக்கு பிடித்த சபாவாக MUSIC ACADEMY யைக் குறிப்பிட்டார். தனக்கு பிடித்த ஒலிப்பதிவுக் கூடமாக HMV (ரகு)யும் தன்னிடம் கற்று வரும் எல்லா மாணவ மாணவியரையும் மிகவும் பிடிக்கும் என்றார். தமிழ்த் திரைப்படங்களில் “நாயகன்“ தன்னை மிகவும் கவர்வதாக கூறினார்.
பாடலாசிரியர்களில் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார், கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி ஆகியோரை குறிப்பிட்டார். திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் எஸ்.பி. பாலசுப்ரமண்யமும், பாடகிகளில் பி. சுசிலாவும் நடிகர்களில் கமலஹாசனும், நடிகைகளில் சாவித்ரியும், சுஜாதாவும், நகைச்சுவை நடிகர்களில் கலைவாணார் என். எஸ். கிருஷ்ணன், விவேக் ஆகியோரையும், இயக்குநர்களில் கே. பாலசந்தர் அவர்களை மிகவும் பிடிக்கும் என்றார். உறவினர்களில் தனக்கு எல்லோரையும் பிடிக்கும் என்றும் நண்பர்கள் எல்லோரையும் பிடிக்கும் என்றார்.
ஆகார விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பார். சாக்லேட் ரொம்ப பிடிக்கும் என்றார். வர்ணங்களில் பச்சை நிறமும், ஆடைகளில் புடவை அணிவதையும், சென்னை தனக்கு மிகவும் பிடித்தமான இடமாகும் என்றார். நாடுகளில் இந்தியா தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தான் விளையாடுவதில் அதிக விருப்பமுள்ளவராக இருந்தார் என்றும் ஓட்டப்பந்தயத்தில் அசகாய சூரர் என்றும் தெரிவித்தார். இலக்கியம் என்று வரும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் “அர்த்தமுள்ள இந்துமதம்“ தாம் விரும்பி படித்த புத்தகத் தொகுப்பாகும் என்று கூறினார்.
சிறந்த தலைவராக திருமதி இந்திரகாந்தி தன்னை கவர்ந்தவர் என்றார். மற்ற துறையில் காவல்துறை பெண் அதிகாரி கிரண்பேடி அவர்களை தன்னை மிகவும் கவர்ந்தவராவார் என்று கூறினார். தனக்குப் பிடித்த வாகனமாக கார் ஓட்டுவதில் மிகவும் விருப்பம் என்றார்.
பொது தினசரி செய்தித்தாள்கள் படிப்பது, இசைப் பயிற்சி செய்தல், இசையை மற்றவர்களுக்கு கற்றுத் தருவது தனக்கு மிகவும் பிடித்த; தான் மிகவும் விரும்பி வளர்க்கும் இரு ஜீவன்களான ரம்யா, சிம்பு என்ற உயர்வகை ஜாதி நாய்கள். இவர் நாய்கள் என்ற சொல்லைத் தவிர்க்கிறார். வயது மூப்படைந்த தன் தாயைப்பராமரிக்கும் வேலையில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். தாய் தந்தை மூலம் தான் பிரபலமடைந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். ஏழைகளுக்கு உதவுவதில் தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார்.
இசைத் துறைக்கு வந்திருக்காவிட்டால் தான் மருத்துவராகி இருந்திருப்பார் என்று தெரிவித்தார். அதே போல் தான் விரும்பி ஏற்றுத் தேர்ந்தெடுத்த தொழிலாக இசையை மேற்கொண்டார். பழகிய நீண்ட நாள் நண்பர்களைக் காணும் போதெல்லாம் அளவிடற்கரிய ஆனந்தம் அடைவதாகத் தெரிவித்தார். தனக்கு விருப்பமான உறவினர்களில் எல்லோரையும் விரும்புவதாகவும் கூறினார். வெளிநாடுகளில் தாம் செய்த இன்னிசைக் கச்சேரிகள் மிகவும் திருப்தியாக இருந்ததாகக் கூறினார். இசைக்கலைக்கு ஆற்றி வரும் தொண்டாக மாணவர்களுக்கு சங்கீதம் கற்றுத் தருவதை முக்கியமாகக் கருதுகிறார்.
தனது குடும்பத்திலுள்ள அனைவரும் நல் முத்துக்களைப் போன்றவர்கள் அவர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். தமக்கு ஏற்பட்ட இசை அனுபவங்களை ஒரு நூலாக எழுதும் எண்ணம் இருப்பதாகக் கூறினார். ரசிகப் பெருமக்களை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். 1995-ல் அகில இந்திய வானொலியிலும் சென்னைத் தொலைக்காட்சியிலும், சன் டி.வி, ஜெயா டி.வி, பொதிகை மற்றும் NDTV யிலும் பேட்டி காணப்பட்டது என்று கூறுகிறார். இது தவிர லண்டன், ஆஸ்திரேலியாவிலும் இவரது வானொலி பேட்டிகள் ஒலிபரப்பாகியுள்ளன.
தன் மனதில் அவ்வப்போது தோன்றுபவர்கள் தன் தந்தையும் தனது கணவரும் குருவுமாகிய தஞ்சை கல்யாணராமன் அவர்களின் மரணம் தன்னை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது என்றார். ROLL MODEL ஆகத் தமது அன்னையையும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியையும் தெரிவித்தார். தனது உறவினர்களில் கணவரது சகோதரிகள் சுப்புலட்சுமியும், மாதங்கியும் கர்நாடக இசை உலகில் பரிமளித்து வருகிறார்கள் என்றார். பொதுவாகத் தன் குடும்பம் இசைக்கலைஞர்களை உள்ளடக்கியதாகும் என்கிறார். முகவரி:
முகவரி: டாக்டர் திருமதி பூஷணி கல்யாணராமன் (வாய்ப்பாட்டுக் கலைஞர்), எண். 11, 16வது குறுக்குத் தெரு பெஸண்ட் நகர் சென்னை – 600090.தொலை பேசி – 4558 7983கைப்பேசி - 98403 05139 E.mail ID - bhvshany@nogers.com

More Profile