டி.கே.பட்டம்மாள்
பெயர்  டி.கே.பட்டம்மாள்
(தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்)
நிஜ பெயர்  அலமேலு
செல்லப் பெயர்  பட்டா
பிறந்த தேதி  28 மார்ச், 1919
பிறந்த ஊர்  காஞ்சிபுரம், தமிழ்நாடு
மறைவு  16 ஜூலை, 2009
தொழில்  கர்னாடக இசை கலைஞர், பின்னணி பாடகி
பெற்றோர்  தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர், காந்திமதி ராஜம்மாள்
சகோதரர்கள்  டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன்
கணவர்  ஆர்.ஈஸ்வரன் (திருமணம் 1940)
மகன்கள்  சிவகுமார், லஷ்மண்
குரு  தந்தை தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர், என்.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், வைத்தியநாதன் (அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் மாணவர்), அம்பி தீட்சிதர், டி.எல்.வெங்கட்ராம ஐயர், இசையமைப்பாளர் பாபநாசம் சிவன், அப்பாதுரை ஆச்சாரி, வித்யால நரஷிம்மலு நாயுடு.
முதல் கச்சேரி  மெட்ராஸ் கார்பரேஷன் ரேடியோ (10 வயதில், 1929)
முதல் மேடை கச்சேரி  மெட்ராஸ் ரசிக ரஞ்சனி சபா (1932), மும்பையில் முதல் கச்சேரி (1934)
முதல் திரைப்படம்  தியாக பூமி-1939 (பக்தி பாடல் மற்றும் தேச பக்தி பாடல்களில் மட்டுமே கவனம்)
அறிமுகம் செய்த இசையமைப்பாளர்  பாபநாசம் சிவன்
பட்டங்கள்/விருதுகள் கான சரஸ்வதி (வழங்கியவர் பிரபல இசைக் கலைஞர் டைகர் வரதாச்சாரியார்), சங்கீத சாகர ரத்னா (சங்கீத நாடக அகடமி 1961), சங்கீத கலாநிதி (1970), மத்திய அரசின் ‘பத்ம பூஷன்’ 1971, ‘பத்ம விபூஷன்’ 1998.
மாணவர்கள்  இளைய சகோதரர் டி.கே.ஜெயராமன் (சங்கீத கலாநிதி 1990), மருமகள் லலிதா சிவகுமார், கீதா ராஜசேகர், பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டம்மாள் பயிற்றுவித்துள்ளார்.
* 1967ம் ஆண்டு சென்னை மியூசிக் அகடமியில் நடந்த கச்சேரிக்கு, பிரபல வித்வான் பாலக்காடு மணி ஐயர் தாமாக முன்வந்து மிருதங்கம் வாசித்தார். ஒரு கச்சேரியில், பெண் கலைஞருடன் இணைந்து அவர் பணியாற்றியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதது.

 

More Profiles