HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

Kalyanapuram Aravamudhachariar

 
Name "கலைமாமணி"
தேச.மங்கையர்க்கரசி
செய்தித்தாள்களில் தேச.மங்கையர்க்கரசி பற்றி . . .

1. மாலை முரசு :
கரூரில் அதிசயச்சிறுமியின் சொற்பொழிவு. 4வயது நிரம்பிய அதிசய சிறுமி தேச. மங்கையர்க்கரசி ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் 10.09.1988 அன்று திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம் போன்றவற்றில் இருந்து இசையுடன் கூடிய ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது.

2.குங்குமம் :
மதுரை ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சிறுமி மங்கையர்கரசிக்கு 1330 குறட்பாக்களும் அத்துப்படி. எந்த அதிகாரத்தை புரட்டிக் கேட்டாலும் தேச. மங்கையர்க்கரசி பட்டென்று பதிலளிக்கிறாள்.

3.மாலை முரசு :
6 வயதில் 700 குறள்கள்
ஆறே வயது நிரம்பிய சிறுமி 700 திருக்குறள்களை மடைதிறந்த வெள்ளம்போல் சொல்கிறாள் என்றால், அது அதிசயம் தானே! திருக்குறளில் உள்ள எந்த அதிகாரத்தை கேட்டாலும் அந்த அதிகாரத்திலுள்ள 10 குறள்களையும் அப்படியே ஒப்பிக்கிறாள். இந்த அதிசய கம்ப்யூட்டர் சிறுமியின் பெயர் தேச. மங்கையர்க்கரசி.

4. மங்கை தீபாவளி மலர் :
என் குருநாதர்
ஏழாம் நூற்றாண்டிலே நம் இந்து சமயத்தை வளர்த்தார் ஒரு மங்கையர்க்கரசி. இந்த நூற்றாண்டிலே திருமுருக கிருபானந்த வாரியாரை தன் குருவாகக் கொண்டு நம் இந்து சமயத்தை வளர்க்க இந்த தேச. மங்கையர்க்கரசி தோன்றியுள்ளார் என பெருமை பொங்க தவத்திரு குன்றக்குடி அடிகளார் பாராட்டினார்.

5. மதுரை மணி (மணி மலர்) அருள்மழை பொழியும் அபூர்வ சிறுமி:
பள்ளியில் பாடம் படிக்கும் வயதில் மேடைகளில் பக்திரசம் சொட்டச் சொட்ட உபதேசம் செய்கிறார் மதுரை சிறுமி. மானிடப் பிறப்புகளிலும் அவ்வப்போது அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன. இதனைத் தொடர்ந்து ஆன்மீக மேடைகளில் நிரூபித்து வருகிறார் 9 வயதே நிரம்பிய தேச. மங்கையர்க்கரசி. பட்டை தீட்டத்தீட்டத்தான் வைரத்தின் ஒளி பன்மடங்கு பெருகும். அபூர்வச்சிறுமி மங்கையர்க்கரசியும் பட்டை தீட்டிய வைரமாய் தமிழறிஞர்கள் மத்தியில் மின்ன வேண்டும். மங்கையர்க்கரசியின் சமயத் தொண்டுக்கு இந்து மதமும் முன்வந்து வழிவகுக்க வேண்டும்.

6. குமுதம் :
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - ஜுனியர் வாரியார்
எந்த தலைப்பு கொடுத்தாலும் உடனடியாக பேசிவிட முடியும், கடவுள் நம்பிக்கைதான் காரணம் என்று அட்சர சுத்தமாக தெளிவுடன் சொல்கிறார் தேச. மங்கையர்க்கரசி.

7. மாலை மலர் - மகளிர் மலர்:
சமயச் சொற்பொழிவு நடத்தும் பள்ளி மாணவி
என்றென்றும் மடை திறந்த வெள்ளமாய் தமிழை கொட்டி பக்தர்களை இன்ப மழையில் நனைத்து வரும் தேச. மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு 10 வகையான ஒலிநாடாக்களில் வெளிவந்து இருக்கின்றன. இவரது சொற்பொழிவைக் கேட்டு சென்னை, மதுரா டிராவல்ஸ் உரிமையாளர், கலைமாமணி வி.கே.டி. பாலன் அவர்கள், தேச. மங்கையர்க்கரசியை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார். இனி தேச. மங்கையர்க்கரசியின் குரல் வெளிநாடுகளில் ஒலிக்க இருக்கிறது.

8. தினகரன் :
சாதனை நிகழ்த்தும் மதுரைச்சிறுமி
ஆன்மீகக் கருத்துகளை இலக்கியச் சிந்தனையுடன் கேட்பவர் உள்ளம் குளிர சொற்பொழிவு நிகழ்த்தும் சிறுமி தேச. மங்கையர்க்கரசி, தன் குருவாகிய திருமுருக கிருபானந்த வாரியாரின் பேச்சைக் கேட்டே தனது திறமையை வளர்த்து கொண்டார். இது ஒரு வியத்தகு செயலாகும்.

9. அவள் விகடன் :
அட, பின்னிட்டீங்களே!
வாரியாரின் வாக்குபொய்க்கவில்லை, சிறப்பு மிக்க அனைத்து ஆலயங்களிலும் தேச. மங்கையர்க்கரசி, இராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய பக்திக் காவியங்கள் பற்றி 30 நாட்கள், 40, 48நாட்கள் என தொடர் சொற்பொழிவாற்றி வாரியாரின் சிஷ்யை என்பதை நிருபித்து வருகிறார்.

10. ராணி :
தீபாவளி தத்துவம்
நம் மனதில் ஆணவம் என்ற இருள் விலகி ஞானம் என்ற ஒளியைப் பெற தீபாவளி அன்று தீபங்களை வரிசையாக ஏற்றி சிவபெருமானை வணங்க வேண்டும் என்றார் வாரியாரின் வாரிசு தேச. மங்கையர்க்கரசி.

Next Page . . .

Back To Index