Dr.Ganesh

Advise of Dr.Ganesh to Youngsters

1. வளர்ந்து வரும் கர்நாடக இசைக்கலைஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய ஒலிநாடா அல்லது குறுந்தகடுகளின் மூலம் அவர்கள் இன்னும் வருங்காலத்தில் பிரகாசிக்கும் வகையில் லஷ்மன் ஸ்ருதி தயாரித்து அளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
2. விளையாட்டுக் கலையில் எப்படி "ஒலிம்பிக் ஜோதி" பல நாடுகள் சென்று கடைசியில் ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஏற்றப்படுவதைப்போல் "நாதஜோதி" தமிழகத்தின் பாடல் பெற்ற ஸ்தலங்களான திருவையாறு, திருவாரூர், சீர்காழி மற்றும் பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டும் இசைவல்லுனர்கள் செல்லும் வழியில் கர்நாடக இசை மேன்மையுறும் வகையில் பல தரப்பட்ட மக்களால் அறியப்பட்டும் "சென்னையில் திருவையாறு" இசை விழா நடைபெறும் இடமாகிய காமராஜர் அரங்கத்தில் "நாதஜோதி" வந்தடைய வேண்டும். இந்த புது மாதிரியான முயற்சியை "லஷ்மன் ஸ்ருதி" மேற்கொள்ளலாம்.
3. இன்றைய இசை உலகில் பாமரர்கள் சிலர் "ப்ரம்மஸ்ரீ" தியாகய்யாரை எம்.கே தியாகராஜ பாகவதர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறியும்போது நாம் அவர்களுக்கு எப்படி தியாகய்யர் அவர்களின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வது? இந்தச் சூழ்நிலையை நாம் அறவே மாற்றியாக வேண்டும்.
4.  (Music Audio C.D) இசை ஒலி நாடாக்கள், குறுந்தகடுகளில் கர்நாடக இசையில் வெளிவந்து அவற்றைப் பாமர மக்கள் அறியும் வகையில் எல்லோரும் கேட்டு இன்புற வேண்டும். நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அதிகமாக இசையை பற்றியதாக இருக்க வேண்டும். இசை ஒலி நாடாக்கள் கேட்கப்படலாம். யாரும் அதை வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது. மறுபிரதியும் எடுக்க அனுமதிக்க கூடாத வகையில் (கண்காட்சி) பாதுகாக்கப்பட வேண்டும். இசை கேட்பற்கு மட்டுமே என்ற நிபந்தனையுடன் இவ்வேற்பாட்டினை லஷ்மன் ஸ்ருதி செய்ய முன்வர வேண்டும்.
5. தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் தகவல் தொடர்பு சாதனங்களாகிய (Online-Facebook , Twitter, போன்றவற்றின் மூலம் கர்நாடக இசையைப் பற்றி தினந்தோறும் சுவையான அரிய பல செய்திகளைத் தரும் நிறுவனமாக லஷ்மன் ஸ்ருதி ஏற்பாடு செய்து இதன் மூலம் புகழ் இன்னும் அடைய வேண்டும்.
 6. கர்நாடக இசையில் அறியப்படும் சாகித்ய கர்த்தாக்களாக விளங்கும் மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசாமி தீஷ்சிதர், ஸ்யாமா சாஸ்திரி என்றில்லாமல் மேலும் புகழ் பெற்று விளங்கி வந்த சங்கீத மஹானுபாவர்கள், பாபநாசம் சிவன் முத்துத்தாண்டவர், அருணகிரிநாதர், அருணாச்சலக்கவிராயர், ஸ்வாதித் திருநாள் பெரியசாமித்தூரன் இன்னும் ஏனைய இசைச் சான்றோர்களின் பாடல்களை இசை ஆர்வலர்கள் பாடும் வகையில் (கற்றுக்கொள்ளும்) ஏற்பாடு செய்ய முன் வர வேண்டும்.
7. தமிழகத்தில் தற்போது பரவி வரும் அருமையான தொரு இசை "நாம சங்கீர்த்தனம்" ஆகும். ஏற்கெனவே இருந்து வரும் இவ்விசையில் கற்றுத் தேர்ந்த பல விற்பன்னர்கள் வரிசையில் கர்நாடக இசைப் பாடகர்களில் தலைசிறந்து விளங்கும் திரு டி.என்.சேஷ கோபாலன் டாக்டர் ஆர். கணேஷ், பாபநாசம் அசோக் ரமணி பாகவதர் போன்றோர் நாம சங்கீர்த்தன இசையில் புகழ் பெற்று அதைப் புகழ் பரப்பியும் வருகிறார்கள். பொதுவாக கர்நாடக இசையைக் கேட்கும் ரசிகர்களுக்கு சில சங்கடங்கள் உண்டு. தன் பக்கத்தில் அமர்ந்திருக்கம் ஒருவர் இவர் பாடும் பாடலின் ராகத்தின் பெயர் என்று கேட்ட மாத்திரத்தில் சங்கோஜப்பட்டுக் கொண்டு நெளிந்து அரங்கத்தை விட்டேவெளியேறும் நிலைமை இருக்கிறது. ஆனால் நாம சங்கீர்த்தனம் கேட்கும் பலர் அந்த நிகழ்ச்சியில் பாடுபவருடன் ஒன்று சேர்ந்து பாடும் நிலைக்கு உந்தப்பட்டு (மகிழ்ச்சியுடன்) விடுகிறார்கள். இதனால் ரசிகர்களின் கூட்டம் நாமசங்கீர்த்தனத்திற்க நாளுக்கு நாள் இப்பொழுது அதிகரித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
 8. கர்நாடக இசையைப் பரப்பும் வகையில் ஒரு "பெரிய இசை ஊர்தி" ஒன்றில் பாரம்பர்ய கர்நாடக இசைக் கலைஞர்கள் இடங்கிய பிரபல இசை மேதைகளின் திருஉருவப்படங்கள் வைத்து அவர்கள் பிறந்து வளர்ந்த இடங்களிலிருந்து ஊர் வலமாக நகரெங்கும் எடுத்துவரப்பட்டு அவ்வூர்தியிலேயே சங்கித மேதைகளின் பாடல்களை ஒலிபரப்பும் சாதனங்களைக் கொண்டு அந்தந்த ஊர்மக்கள் கர்நாடக இசையைக் கேட்டு அறியும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
9. திரைப்படங்களில் ஒலிக்கும் சில பாடல்கள் குறிப்பாக கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவற்றை முறைப்படுத்தி அதற்கேற்ற கர்நாடக இசையில் அமைந்திருக்கும் (கிருதிகள், கீர்த்தனை) பாடல்களை அறியச் செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.
10. பிரபல நாதஸ்வரக் கலைஞர்கள் அமரர் திரு டி.என் ராஜரத்தினம் பிள்ளை ஒரு சமயத்தில் தான் செய்த கச்சேரிகளிலேயே முதன்மையாகக் கருதியது காஸ்லைட்டைத் தன் தலையில் சுமந்திருந்த பெண்மணி ஒருத்தி இவர் நாதஸ்வரம் வாசித்த வாசிப்பை மெய்ம்மறந்து கேட்டுவிட்டு சபாஷ் என்று கூறியதுதான். இசைக்கு அடங்காதோர் யார் ? என்ற கேள்விக்கு இப்பொழுது விடைகிடைத்ததாகக் கருதிக் கொள்வோம்.
 11. சில தொலைக்காட்சிளில் ஒளிபரப்பப்படும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடல்கள் முறையாக அதாவது பக்தியுடன் ஒளிபரப்ப வேண்டும். தொலைக்காட்சியை ஒளிபரப்புவர்களுக்கு இசைக் கலைஞர்கள் மூலமோ அல்லது இசை பற்றி தெரிந்த நிபுணர் குழுமூலமோ இது சரி செய்யப்படவேண்டும். இந்தக் காரியத்தையும் லஷ்மன் ஸ்ருதியே மேற்கொள்ள வேண்டும்.
12. புகழ்பெற்ற இசையறிஞர்கள் இசை மேதைகள் போன்றவர்களின் திருஉருவச் சிலையை தமிழகம் முழுவதும் நிறுவும் முயற்சியில் லஷ்மண்ஸ்ருதி முன்வர வேண்டும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவில் ஒரு சிற்றூரில்ல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் புகழ்பெற்று விளங்கிய சர் டொனால்டு பிராட்மேன் சிலையை நிறுவியிருக்கிறார்கள். நாமும் இத்தகைய சிலையை நிறுவும் காரியங்களில் ஈடுபட்டு கர்நாடக இசை மேதைகள் மட்டுமின்றி பல மேல்நாட்டு இசை மேதைகளின் சிலைகளையும் நிறுவ வேண்டும் சாலைகளில், கலை அரங்கங்களில் கர்நாடக இசை மேதைகளின் திருவுருவச்சிலைகள் அமைக்கும் வகையில் ஏற்பாடுகளை லஷ்மண் ஸ்ருதி செய்ய முன் வர வேண்டும்.

More Profiles