Music Directors
Cine Playback Singers
Classical Singers
Lyricists
Classical Musicians
Classical Dancers
Music Teachers
Quiz Contest
Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersMalathy Lakshman
"எல்லா கட்டையும் அத்துப்படி!" - மாலதி லஷ்மண்

'மன்மத ராசா' பாடல் மூலம் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாடகி மாலதி லஷ்மண். அவருடன் மினி பேட்டி.

உங்கள் அறிமுகம் பற்றி சொல்லுங்களேன்?

95-ல் வெளியான 'சாதி சனம்' படம்தான் எனக்கு முதல் படம். பிறகு 2001-ல் வித்யாசாகர் இசையமைத்த 'கார்மேகம்' படம்தான் எனக்கு ரீ-என்டரி கொடுத்தது. 2003-ல் தீனா இசையமைத்த 'மன்மத ராசா...' பாடல் என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தெலுங்கிலும் பிஸியாக உள்ளீர்களே?

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் சார்தான் என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் முதன்முதலில் நான் பாடியது 'அபி' என்ற படத்துக்காக. தொடர்ந்து சீரஞ்சிவி நடித்த 'ஆர்யா' படத்தில் 'ஆ அன்ட்டே அமலாபுரம்...' என்ற பாடலை பாடினேன். இந்தப் பாடல் ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு சீரஞ்சிவி நடித்த 'சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்.' உள்பட பல படங்களில் பாடிவிட்டேன்.

"சீரஞ்சிவி சார் டென்ஷனான நேரங்களில் உங்களுடைய பாடல்களைதான் கேட்பார்" என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் கூறிய போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உங்களுக்கு வருகின்ற வாய்ப்புகள் பெரும்பாலும் 'மன்மதராசா' ரகத்தில் இருப்பதால் வருந்தியதுண்டா?

துளியும் வருந்தியதில்லை. ஆனால் எனக்கு பெரும்பாலும் 'ஹை-பிச்' பாடல்களாகவே வருகின்றன. ஆனால் என்னால் எல்லா 'கட்டை'யிலும் பாட முடியும். 'மன்மதராசா...', 'உம்மா... உம்மம்மா...' பாடல்களை எழு கட்டையிலும், 'சச்சின்'ல் வரும் 'குண்டு மாங்கா...' பாடலை ஐந்து கட்டையிலும் பாடினேன். ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுகிறேன். ஆயிரம் பாடல்கள் தராத புகழை 'மன்மதராசா' என்ற ஒரு பாடல் என்னை மக்களிடம் முழுமையாக சேர்த்தது.

நன்றி: வண்ணத்திரை, 26-06-2005

More Articles