|
உச்ச ஸ்தாயி குரலில் கே.பி. சுந்தராம்பாளில் தொடங்கி
சுபா வரையிலான பெக்கூலியர் வாய்ஸ் உள்ள பிபல பாடகிகளின்
கிட்டதட்ட 34 குரலில் பாடும் திறன் பெற்றவர் மாலதி
லக்ஷ்மண். மேடைகளில் உலகெங்கும் 5500 மேடைகளில்
பாடியிருக்கும் மேடை மின்னல் மாலதி 'மன்மதராசா' பாடல்
மூலம் திரையிலும் தன் முத்திரையை பதித்து முன்னணி பாடகி
வரிசைக்கு வந்திருக்கிறார். அவருடன் சில நிமிடம்...
உச்ச ஸ்தாயியில் ஒரே மாதிரியான குரலில் தொடர்ந்து பாடி
வந்திருக்கிறீர்களே! இது உங்கள் வளர்ச்சிக்கு சரியான
வழியா?
பி.சுசிலா அம்மா மாதிரி மெலோடி வாய்ஸிலும் பாடப்
பிடிக்கும், பாடவும் வரும். ஆனால் எனக்கு இறைவன்
கொடுத்த பெக்கூலியர் வாய்ஸ்தான் என்னை மேடையிலும்
பிரபலப்படுத்தியது திரையிலும் பிரபலப்படுத்தியது.
ரசிகர்கள் விரும்பும் வரை இதே குரலில் பாடுவேன். இதுவரை
250 பாடல்கள் பாடிவிட்டேன். ரசிகர்கள் மாறுதல்
விரும்பும்போது, மெலோடி வாய்ஸிலும் பாடுவேன். முதல்
முறையாக இசைஞானி இளையராஜா இசையில் 'அது ஒரு கனாக்காலம்'
படத்துக்காக ஒரு மெலோடி சாங் பாடியிருக்கிறேன். படம்
வந்த பிறகுதான் அதன் வரவேற்புத் தெரியும்!
சாதாரண குரலில் பாடுவதற்கும்,
வித்தியாசமான குரலில் பாடுவதற்கும் நீங்கள் கையாளும்
யுக்தி என்ன?
சாதாரண குரலில் பாட தொண்டையில் இருந்து தொடங்க
வேண்டும். வித்தியாசமான குரலில், உச்சஸ்தாயியில்
பாடும்போது, அடி வயிற்றில் இருந்து மட்டுமல்ல, உடம்பில்
உள்ள நாடி நரம்புகளிலிருந்தெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ண
வேண்டும். தெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். 'அந்தர்வாடு'
படத்துக்காகப் பாடும் போது சிரஞ்சீவி சார், உங்கப்
பாட்டை கேட்கும்போது, எவ்வளவு டென்ஷனா இருந்தாலும்
ரிலாக்ஸ் ஆயிடும்" என்று பாராட்டியபோது எனக்குப்
பெருமையாக இருந்தது.
திரையில் பிஸியான பிறகு மேடைக்கு டாடா
காட்டி விட்டீர்களா?
என் கணவர் லக்ஷ்மணிடம், விளையாட்டாக ஒரு நாளைக்கு
சினிமாவுல பெரிய சிங்கரா ஆயிடுவேன். அப்புறம் உங்க
கச்சேரிக்க பாட வரமாட்டேன், சிறப்பு விருந்தினராகத்தான்
வருவேன்னு சொன்னேன். அது இவ்வளவு குறுகிய காலத்துல
நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை! 'பேரரசு',
'புதுப்பேட்டை' படங்கள் வெளிவந்த பிறகு எனக்கு இன்னும்
பெரிய பிரேக் கிடைக்கும். வடநாட்டுல உஷா உதுப்,
அல்க்காய் யாக்னி மாதிரி நான் இங்கே வரணும்னு
ஆசைப்படுறேன்!
நன்றி: பாக்யா, ஜூலை 1 - 7, 2005 |