சாதாரணமாக கல்லூரி சென்றுவரும் அந்தப் பெண் ஒரு பரபர
பாடலைப் பாடிய பாடகி என்றால் நம்பத்தான் முடியவில்லை.
'குத்து' படத்தில் 'போட்டுத் தாக்கு' என்ற சூப்பர் ஹிட்
பாடலைப் பாடிய அவர், ரோஷிணி சொந்த ஊர் திருச்சி.
தற்போது ரிலீஸாகியிருக்கும் 'சாணக்யா' படத்தையும் (அலாவுதீனு...)
சேர்த்து 7 படங்களில் பாடியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பாடியிருக்கும்
ரோஷிணிக்கும் 10 ஆண்டு கால மேடைப் பாடல் அனுபவம்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன்
என்று முன்னணிப் பாடகர்களுடன் இணைந்து மைக்
பிடித்திருக்கிறார்.
8 வயதில் அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து 'ஆகா... என்ன
பொருத்தம்' படத்தில் பாடியது முதல் திரைப் பிரவேசம்.
அதன் பறிகு முத்து (இரண்டு வரி!). வேட்டிய மடிச்சுக்
கட்டு, தாயுமானவன் படங்களில் பாடியிருந்தாலும் இவர்
மீது வெளிச்சம் விழுந்ததது 'போட்டுக் தாக்கிய பிறகுதான்.
சினிமா பாடல்கள் தவிர 50 பக்தி, தனி ஆல்பங்களும்
பாடியுள்ளார். விளம்பரப் பாடல்களும் கூட. பிளஸ் 2
படிக்கும்போது 'குத்து' வில் பாடிய இவர், லேட்டஸ்ட்டாக
'பம்பரக் கண்ணாலே' படத்தில் ஒரு ரீ மிக்ஸ் டைப் பாடலைப்
பாடியிருக்கிறார்.
மைக் முன் நின்றாலும் விடாது படிப்பிலும் கவனம்
செலுத்தி வருகிறார் ரோஷிணி ப்ளஸ்2 வில் 82 சத
மதிப்பெண்கள் பெற்ற இவர், தற்போது கணினி அறிவியல்
பெறியியல் பட்டப் படிப்பு படித்துவருகிறார். படிப்பு,
பாடுவது இரண்டும் ஒன்றையொன்று பாதிக்காமல் கவனமாக 'பாலன்ஸ்'
செய்துவருகிறேன் என்கிறார்.
அக்கா அனிதா ஷாலினியைப் பார்த்துதான் இவருக்கும்
இசையில் ஆர்வம் பிறந்ததாம்.
'முறைப்படி சர்நாடக சங்கீதம் கற்றுள்ள நான்,
மேற்கத்திய, நாட்டுப்புறப் பாடல் என்றாலும் கலக்குவேன்'
என்கிறார். இவரது தந்தை ஜோசப் கலியபெருமாள் திருச்சி
புனித வளனார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். பிரபல
பேச்சாளரும் கூட.
எல்லாவற்றையும் விட 'அடடே' என்று ஆச்சரியப்பட
வைக்கும் விஷயம். ரோஷிணி 13 வயதில் திருச்சி சங்கீதா
ஆர்க்கெஸ்ட்ரா குழு நிகழ்ச்சி ஒன்றில் 37 மணி நேரம்
தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்
பிடித்துள்ளார்.
சித்ராவும், சுஜாதாவும் ரோஷிணிக்குப் பிடித்த
பாடகிகள் 'ஜானகியம்மா' போல வர ஆசை.
நன்றி: தினமணி,
2-10-2005 |