Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBபடங்களுக்குப் பின்னணி பாட ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடிக்க ஆரம்பித்தார். பலருக்கு பாலுவின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம். ஆனால் பாடுவதற்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் நிறைய உண்டு. இன்னும் பசுமையாக இருக்கும் நாடக நினைவு ஒன்று இருக்கிறது.

பாலுவின் தந்தை ஒரு சிறந்த நாடக நடிகரும்கூட. அவர் ஒரு சமயம் பக்த ராமதாஸ் நாடகத்தை நடத்த, அந்த நாடகத்தில் பக்த ராமதாஸின் மகன் ரகுராம் பாத்திரமேற்று நடித்தார் பாலு. தினசரி ஒத்திகைக்கும் போவார். நிகழ்ச்சி அன்று நாடகம் வழக்கம் போல் இரவு தாமதமாகத்தான் தொடங்கியது. இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு, நாடக வேஷத்தையும் உடைகளையும் அணிந்தபடியே நாடக மேடையின் ஓரத்தில் படுத்துத் தூங்கிவிட்டார்.

நவாப்பின் ஆட்கள் ராமதாஸைக் கைது செய்து அழைத்துப் போகும் காட்சியில் சிறுவன் ரகுராம் சென்று, வீரர்கள் தந்தையைக் கைது செய்வதைத் தடுக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த பாலுவை யாரோ எழுப்பி மேடையில் தள்ளிவிட, அங்கே தன் தந்தையை யாரோ கயிற்றில் கட்டியிருப்பதைப் பார்த்து அது நாடகமா அல்லது நிஜமா என்று புரிந்து கொள்ள முடியாத பாலு, ஆவேசத்தோடு வீரர்களிடம் போராட, காட்சி மிகவும் இயற்கையாக அமைந்து, மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

நாடகத்தின் முடிவில் நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர், குறிப்பாக பாலுவின் நடிப்பைப் பாராட்டினார். பாலுவிற்கு தன் நடிப்புத் திறமை மீது தன்னம்பிக்கை உருவாக இந்த நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்து விட்டது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles