Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBவண்டி உருண்டு ஆற்று மணலில் தலைகீழாக நின்றவுடன், உடனடியாக வெளியே வரமுடியாமல் பாலு, இளையராஜா, மற்ற கலைஞர்கள், கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தனர். வண்டியைச் சுற்றி ஒரே கும்பல். படவுலகில் பாலு சற்று பிரபலமாக இருந்த காரணத்தால், கூடிநின்ற மக்களில் சிலர் பாலுவை அடையாளம் தெரிந்து கொண்டனர். அருகில் லட்சுமி சரஸ்வதி பஸ் கம்பெனியின் உரிமையாளரின் வீடு இருந்தது. பாலுவும் நண்பர்களும் அங்கு சென்று அவரது உபசரிப்பில் திளைத்து பின்பு சென்னைக்கு கிளம்பினார்கள்.

அன்று மாலையே சென்னையிலும் ஒரு கச்சேரி இருந்தது. இவர்கள் ஊர்வந்து சேர்வதற்குள் அன்று மாலை வந்த 'மாலை முரசு' பத்திரிகையில் 'பின்னணி பாடகர் சென்ற கார் விபத்து' என்ற தலைப்பில் பரபரப்புச் செய்தி கார் இருந்த நிலையில் படத்துடன் வெளிவந்து, சென்னை நகரையும் பாலுவின் வீட்டையும் கலக்கிக் கொண்டிருந்தது.

விபத்து நடந்த இரவு கச்சேரி முடிந்தவுடன் இளையராஜா, பாலு, கங்கை அமரன் மற்றும் விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்துச் சென்று கோடம்பாக்கத்தில் உள்ள குவாலிட்டி ஹோட்டலில் ஒரு விருந்து கொடுத்தார். விருந்தின் போது இளையராஜா "இந்த விபத்துக்குப் பிறகு நாம் அனைவரும் பிழைத்திருப்பது நாம் செய்த அதிர்ஷ்டம். இனிமேல் நாம் அனைவரும் நமது லட்சியத்தில் பெயரோடும் புகழோடும் இருக்கப் போகிறோம் என்பதற்கு அடையாளம்தான், நாம் இந்தப் பெரிய விபத்திலிருந்து பிழைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். "இளையராஜா சொன்ன வாக்கு பொய்க்கவில்லை. அன்று அந்த விருந்தில் இருந்தவர்கள் அனைவரும் பெயரோடும் புகழோடும் நலமாக சினிமா உலகில் இருந்து வருகிறார்கள்" என்று கூறுகிறார், எஸ்.பி.பி.

பார்த்தசாரதி சுவாமி சபாவில் பாலுவின் மெல்லிசை நிகழ்ச்சி - தமிழ் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு ரசிகர் பாலு ஒரு தெலுங்குப் பாடல் பாட வேண்டுமென்று வேண்டினார். தமிழ் நிகழ்ச்சிகளில் அப்பொழுது தெலுங்கு பாடல்கள் பாடும் வழக்கமில்லை. ரசிகரின் வேண்டுகோளுக்காக சபாக்காரர்களின் அனுமதி பெற்று தெலுங்கில் பாடினார். தெலுங்குப் பாடலைக் கேட்ட அந்த ரசிகரின் பெயர் முரளி. பாலுவைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் அவர். ரசிகர்களின் வேண்டுகோளை பாலு எப்பொழுதும் நிறைவேற்றுவார் என்பதற்கு அடையாளமாக இந்தச் சம்பவத்தை எனக்கு கடிதம் எழுதியுள்ளார் அந்த ரசிகர். என்ன முரளி சார் நீங்க சொன்னதை எழுதிட்டேன் திருப்தியா?

இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. 'சுமதி என் சுந்தரி' படம் வெளியான சமயம் 'பொட்டு வைத்த முகமோ' என்ற பாடல் ரொம்ப பிரபலம். இடைவேளைக்குப் பிறகு பாலு அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்ததும் ஆடிட்டோ ரியத்தில் ஏக வரவேற்பு. அந்தப் பாடலின் பல்லவி முடிந்து முதல் சரணத்தில் 'தரையோடு வானம்' என்று தொடங்கும் வரிகள் ஹை பிட்சில் அமைந்த இடம். அந்த வரியைப் பாடியவுடன், மேலே பாட முடியாமல் பாலுவின் தொண்டை அடைத்தது. தான் ஆரம்பித்த இடம்தான் தவறு என்று நினைத்து மீண்டும் பாட ஆரம்பித்தார். மீண்டும் அதே இடத்தில் தடங்கல். உடன் வாசித்த வாத்யக் குழுவினருக்கு ஒன்றும் புரியவில்லை. கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் முகத்தில் கேள்விக்குறி. ஆனாலும் அரங்கம் அமைதியாக பாலுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் விட்ட இடத்திலிருந்து வாசிக்க பாலு முதலில் பாடத் தொடங்கினார். 'தரையோடு வானம்' இடம் வந்ததும் மீண்டும் தடங்கல். பாட்டு நின்றது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles