Vittal Ramamoorthy

Profile of Vittal Ramamoorthy

இன்றைய கர்நாடக இசை உலகில் பக்கவாத்தியக் கருவிகளில் முதன்மையாகக் கருதப் படுவது வயலின் ஆகும். இந்த வயலின் இசைக்கருவியை வாசித்துத் தனக்கெனப்புகழ்
பெற்று விளங்கி வருபவர்களின் வரிசையில் விட்டல் ராமமூர்த்தி ஓர் உன்னதக் கலைஞர் ஆவார்.
இவர் கர்நாடக மாநிலத்தில் தெற்கு கனரா பகுதியிலுள்ள தர்மஸ்தலா என்னுமிடத்தில்
சுப்பராய ஹெப்பர் கிருஷ்ணவேணி தம்பதியருக்கு 25. 5. 1962 -ல் மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் ‘’கருப்பித்தில்’’ என்றழைக்கம் படுவதாகும். நித்லே என்ற இராமத்தில்
அமைந்துள்ள பகுதியில் சுமார் 3 1/2 மைல் வரை நடந்தே பள்ளிக்குச் சென்று பத்தாவது வரை படித்தார்.
மழைநாட்களில சில நேரங்களில் ஆற்றஙகரையைக் கடக்க படகில் பள்ளிக்குச் சென்று வரும் நிலைமை வருடத்தில் குறைந்தது மூன்று நான்கு மாதங்களாவது இருந்து வந்தது. அப்பகுததியில் வசிப்பவர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் தங்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தையும் சேமித்து வைத்திருப்பார்கள் விட்டல் ராமமூர்த்தி அவர்கள் தனது P.V.C. படிப்பையும் B.Com பட்டப்படிப்பையும் ஷிமோகாவில் மேற்கொண்டார். இவரது தாயார் சிறந்த இசைக் கலைஞர். தந்தை ‘’யட்சகானக் கலைஞர் ஆவார்.
இவருக்கு 4 இளையசகோதரிகள் உண்டு குடும்பத்தில் இவர்தான் மூத்தவர். விட்டல்
ராமமூர்த்தி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இசையில் நாட்டங் கொண்டவர்களாக இருந்தார்கள்.இவருடைய சகோதரிகளுக்கும் பிறந்த பெண்பிள்ளைகளும் இசையில் நாட்டங்கொண்டவர்கள். சகோதரி ராஜலட்சுமி வாய்ப்பாட்டிலும், வயலின் வாசிப்பதிலும் வல்லவராக இருந்தார்.
அவரது மகள் தன்மயிகர் கர்றைநாடகாவில் உள்ள சர்தனா தொலைக்காட்சியில் AIRTEL SUPER SINGER பங்குகொடு பரிசுகளை வென்றுடுப்பதோடு மட்டுமின்றி, அகில இந்திய வானொலியிலும் இசைப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பல பெற்றிருக்கிறார் .
பம்பாயில் வசிக்கும் இவரது மற்றொரு சகோதரி மகள் சின்மா என்பவரும் இருபது வருடங்களுக்கு முன்பே திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பெற்றிருக்கிறார்.அமேரிக்காவிலுள்ள இவரது இளைய சகோதரி திருமதி ராஜராஜேஸ்வரி முழுநேர இசைக்கலைஞர் ஆவார். கிளீவ் லேண்ட் சிறந்த இசை ஆசிரியர் விருதை பெற்றிருக்கிறார்.விட்டல் ராமமூர்த்திக்கு விஜயஸ்ரீ-ஒரு மகளும், ஸ்ரீஹரி-என்ற ஒரு மகனும் உண்டு.
விஜயஸ்ரீ 11வது வகுப்பு படிக்கிறார். இவர் விஜய் மாதவன் என்பவரிடம் பரதம் பயின்றும் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர் S.P.ராமிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டு வருகிறார். பள்ளியில் நடைபெறும் இசைக்கலை சம்பந்தப்பட்ட மற்ற போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி சேர்ந்திசையிலும் நாட்டங்கொண்டுள்ளார்.மனைவி திருமதி சந்திரிகா வயலின் மற்றும் வாய்ப் பாட்டுக் கலைஞராக திகழ்ந்து வருகிறார்.
விட்டல் ராமமூர்தி அவர்களின் முன்னோர்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டவர்கள். தாய் வழியில் தோன்றியவர்கள் இசையில் நாட்டங்கொண்டு அக்கலையில் ஈடுபாடு கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றனர். விட்டல் ராமமூர்த்தி கர்நாடக இசைக் கச்சேரியில் முதன்மை வகிக்கும் D.K. ஜெயராமன் நேதனுரிகிருஷ்ணமூர்த்தி, R.K. ஸ்ரீகண்டன், மதுரை TN சேஷகோபாலன் திரிச்சூர் ராமச்சந்திரன், TV சங்கர நாராயணன் N ரமணி ( புல்லாங்குழல் ) ரவிகிரண் (சித்ரவீனை) கத்ரிகோபால்நாத் ( கிளாரினெட் )நெயிவேலி சந்தானகோபாலன் மற்றும் லால்குடி G. ஜெயராமண் ஆகியோருக்குப் பக்க வாத்யமாக் வயலின் வாசித்திக்கிறார் தனது குருவான லால்குடி G. ஜெயராமண் அவர்களுக்கு வயலின் வாசித்ததைப் பெருமையாகக் கருதுகிறார்.
லால்குடி ஜெயராமண் குழந்தைகளான G.J.R. கிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோருக்கும் வயலின் வாசித்திருக்கிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கணக்கிலடங்கா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார் ‘’ விட்டல் ராமமூர்த்தியின் மூதாதையர்கள் விவசாயத்தை முக்கிய பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். தன் பெற்றோர்கள் இசைக்கலைஞர்களாக இருந்ததால் தானும் அவ்வழியிலேயே அக்கலையினைப் பயின்று மனைவி, மகள் ஆகியோருக்கு வயலின் கற்பித்து வருகிறார்.
தான் பிறந்த ஊரில் ‘’ கரும்பித்தில் ஷிபிரா’’ என்ற பள்ளியை கோடை விடுமுறையில் ஒரு வாரம் கர்நாட்க இசையை அவ்வூர் மக்கள் அறியும் வகையில் சுமார்200 பேருக்கு கற்றுக் கொடுப்பது மட்டுமின்றி அவர்களுக்கு உண்ண உணவும் தங்கும் வசதியையும் அளித்து வருகிறார். இதைக்கடந்த 10 வருடங்களாக விட்டல் ராமமுர்த்தி. மேற்கொண்டு இசைப்பணியாற்றி வருகிறார்.
இந்தவருடம் நடக்கும் கோடை இசை விழாவில் ( 28- 4 -2011 முதல் 3 -5-2011 வரை) கர்நாடக இசைக்கலைஞர்களான பாம்பே ஜெயஸ்ரீ, டாக்டர் S. சுந்தர் ஆகியோரை வரவழைத்து அவ்வூர் மக்களுக்கு இசை பற்றிய ஒரு ( நிகழ்வினை) நடத்த  இருக்கிறார். அதில் இசையை முறையாகப் பாடத் தெரியாதவர்களூக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்முறைப்பயிற்சி அளித்து அவர்களுக்கு கர்நாடக இசையறியை வளர்க்கும் செயலில் ஈடுபட்டுவருகிறார். இக்கருத்தரங்கத்தில் கலந்து கொள்பவர்கள்
பிற்காலத்தில் பிரபல கர்நாடக கலஞர்களூடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ பாடும் திறமையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இது வரை 30 இசைக் கலைஞர்கள் இவ்வமைப்பிளிருந்து உருவாகியிருக்கிறார்கள்.
கர்நாடக இசைப் போட்டிகளிலும் கலந்து கொண்டும், வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கு பிரதான கச்சேரியிலும் பங்கேற்று வருகிறார்கள். இவ்வமைப்பைப் பரப்பும் வகையில் அண்மையில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றின் அபரிமித வளர்ச்சியாக ‘’U TUBE ''
என்று சொல்லப்படும் வசதியைக் கொண்ட கணிணியின்மூலம் இவ்விவிரங்களை நன்கு புரிந்து கொள்ள முடியும் வகையில் இவர் தனிக்கச்சேரி செய்த ஓலி நாடாக்கள் திருமதி பத்மா சங்கர் அவர்களுடன் சேர்ந்து செய்த வயலின் இசை கச்சேரிகஞம், குறந்த தடுகளிலும் வெளிவந்திருக்கின்றன.
வரும் மார்ச் மாதத்தில் விட்டல் ராமமூர்த்தி அவர்கள் திருமதி பத்மா சங்கர் அவர்கஞடன் வயலின் கச்சேரி செய்வதற்காக கனடா, மாண்ட்ரீல், ரோண்டோ, எட்மண்டன் கால்கரி, வான்கோவர் போன்ற இடங்கலுக்குச் செல்ல இருக்கிறார். இவர் வயலின் இசைக்கச்சேரிகள் பிரதான மாற்ற இசைக்கலைஞர்கஞடன் செய்ததிலும் வாசித்திலிம் சுமார் 150 குறுந்தகடுகள் வெளிவர்துள்ளன.
20 DVD க்கள் வெளிவர்துள்ளன. இதில் P. உன்னிகிருஷ்ணன் பாடியதில் 8டம் சஞ்சய் சுப்ரமாணியத்துன் வாசித்ததில் 8 டம். பாம்பெ ஜெயஸ்ரீயுடன் 8டம் செளம்யா அவர்கலுக்கு வாசித்ததில் 4 டம் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்ககு வாசித்ததில் 2 -ம் இது வரை வெளிவர்துள்ளது ( இவரது குரு என்று சொல்லம்போனால் விட்டல் ராமமூர்த்தி அவர்களின் கர்நாடக இசைப்பயணத்திற்குமிகவும் உந்துதலாய் இருந்தவர் அவரதுதாய்தான்.
அதேபோல் இவரது தாத்தா BV சுப்பாராவ் வயலின் வாசிப்பதில் வல்லவராய் விளங்கினார். மேலும் ஹொயஹள்ளி வெங்கட்ராம் என்று குறுவும் இவரது இசை பயின்றதுடன் மட்டுமல்லாமல் பிற்காலத்தில் அவருடன் சேர்ந்து (டூயட் ) வாசிக்கும் பெருமையைப் பெற்றிருக்கின்றார். ஆரம்பத்தில் இவர் வாங்கிய விருதுகள் என்று குறிப்பிட்டால் சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபா இவருக்குச் சிறந்த வயலின் இசை விற்பன்னர் என்ற விருதைவழங்கி கெளரவித்திருக்கிறது.
சிறந்த பக்கவாத்தியக் கலைஞராக முதல் பரிசைவென்ற இவருக்கு பரிசு வழங்கிக் கெளரவித்த வயலின் மேதை லால்குடி ஜி. ஜெயராமன் அவர்கள தானாகவே முன்வந்து அவருக்கு இசையைப் போதித்தார் இந்தத் தருணம் விட்டல் ராமமூர்த்தி அவர்கஞுககு குருகுல வாசம்போல் 1994 வரை சுமார் 5 வருடங்கல்ளுக்கும் மேலாக நிடித்தது. இவரது வாழ்வின் முக்கிய அரங்கமே திரு லால்குடி G. ஜெயராமன் என்று பெருமையுடன் குறிப்பிருகிறார். வெளிநாடுகளுக்கு அடிகக்டி இசைக்கச்சேரிகள் செய்வதற்காகக் செல்லும் இவர் அமெரிக்காவில் மட்டும் கர்நாடக இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
தனது மகனுக்கு வயலின் இசையைக் கற்றுத்தருகிறார் 1994 முதல் கச்சேரிகளில் வயலின் வாசித்து வரும் இவர் மியுசிக் அகாடாமி இசையரிஞர் T.K. கோவிந்தராவ் அவர்களூக்கு ‘’சங்கீத கலாநிதி ‘’ என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டில் அவருக்குவயலின் வாசித்தார். இதேபோல் மிதங்கமேதை உமையாள்புரம்
சிவராமன் அவர்கலுக்கு மியுசிக் அகாடெமி ‘’சங்கீத கலாநிதி’’ பட்டத்தை வழங்கியபோது அவருக்கும் வயலின் வாசித்ததை பெருமையாகக் கருதுகிறார்.
ஒருசமயம் இவர் பிரபல சங்கிதவித்வான் டாக்டர் M.பாலமுரளி கிருஷ்ணாவுடன் அமெரிக்காவிற்குச் சென்ற சமயம் தொடர்ந்து 18 கச்சேரிகள் செய்திருக்கிறார் அவருடன் ஹிந்துஸ்தானி இசையில் பிரபலமாகி விளங்கிவரும் திரு அஜய் சக்ரவர்த்தியும் ‘’ஜுகல்பந்தி’’ என்று அழைக்கப்படும் இசை நிகழ்ச்சிகளில் பாடினார். கர்நாடக இசைப் பாடகர்கள் சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டாக்டர் M.பாலமுரளி கிருஷ்ணாவுடன் சர்வதேச இசைவிழாக்களில் கலந்து கொண்டு வயலின் வாசித்திருக்கிறார். சிங்கப்பூர், துபாய், பாரிஸ், அமெரிக்கா ஆகிய வெளிநாடுகஞக்குச் சென்றுவந்து இவர் போகாத இடம் மேற்கு ஆப்ரிக்கா மாட்டும். டெண்ட்னில் உள்ள வடக்கு டெக்ஸாஸ் பல்கலைக் கழக15 மாணவர்கஞக்கு விசஷே இசைப் பயிற்சி அளித்திருக்கிறார்.
இவர்கள் அனைவரும் விட்டல் ராமமூர்த்தி அவர்கஞடைய கச்சேரிகளை அம்மாணவர்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார். அப்பள்ளியின் பயிற்சிக்கூடம் கூரையினால் வேயப்பட்டு கிராமிய சூழ்நிலையில் இயற்கை அழகு நிறைந்த இடத்தில் நந்தவனம் போல் அமைந்து இருக்கும். விட்டல் ராமமூர்த்தியின் தந்தை ஓர் யட்சகானக் கலைஞர் ஆவார். இது ஒருவகைக் தெருக்கூத்து என்று சொல்லலாம். கதகளிளலிருந்து யட்சகானம் வேறுபட்டதாக இருந்தாலும் கதகளிளன் ஒரு அங்கம் என்று கூடச்சொல்லலாம். திரெளபதி வஸ்திராபரணம், கஜேந்திர மோட்சம் மஹிஷாசுர மர்த்தனி நரகிம்மாவதாரம் போன்ற தலைப்ப்புகளில் யட்சகான நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகவும் பிரசித்தம்.
யட்ச கானத்தில் குறிப்பாக 4, 5 பாட்டுகள் இருக்கும். இடையில் பெரும்பாலும் வசனங்கள் பேசப்படும் இந்நிகழ்ச்சியில் குறைந்தது பத்துபேர் வட்டவளைய வடிவில் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு அவரவர்கஞக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கஞக் கேற்ப வசனங்களை பேசுவார்கள். கிட்டத்தட்ட நாம் கேட்கும் வானொலி நாடகள்களைப் போல ஓர் உணர்வை யட்சகானம் பிரதிபலிக்கும். விட்டல் ராமமூர்த்தியின் தந்தையார் யட்சகான நிகழ்ச்சிகளில் சூர்ப்பனைக, மற்றும் மண்டோதரி போன்ற பெண் வேடங்களில் நடித்து பரமளித்திருக்கிறார்.
யட்சகான நிகழ்ச்சிகள் பெரும் பாலும் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய காலை 4 அல்லது 5 மணி வரை நடைபெறும். மேலும் யட்சகான நிகழ்ச்சிகள் வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் கலைஞர்களின் வசனம் அல்லது உரையால் முன்னமேலே தயார் செய்து மனப்பாடம் செய்யத வகையில் உடனுக்குடன் பேசுவதுபோல் அமைந்திருக்கும். ஏனென்றால் அக்கலைஞர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்பு வெகு முன்பாகவே தெரிந்து வைத்திருப்பதுதான். யட்சகான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெரிய இல்லங்களில் நடைபெறும். உபயோசிக்குப்படும் பக்க வாத்தியங்கள் மத்தளமும், செண்டையும் ஆகும் இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாகவும் போற்றுதலுக்குரிய வகையில் அமைந்திருக்கும் இசையின் பங்கு 30 லிருந்து 40 சதவிகிதம் வரையும் வசனம் 60 லிருந்து 70சதவிகிதம் வரை இருக்கும்.
விட்டல் ராமமூர்த்தி அவர்களுக்கு வெள்ளை நிறமும் நீல நிறமும் மிகவும் பிடிக்கும். இவர் சுத்தசைவப் பிரியர் ஆகும். மிகவும் தன்னைக் கவர்ந்தவராக இவர் கருதுவது தனது வயலின் குருவாகிய திரு லால்குடி G. ஜெயராமன் அவர்களைத்தான், தேசிய அரசியல் தலைவர் மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியை அதிகம் பிடிக்கும் விளையாட்டுத்துயில் டென்னிஸ் ஆடுபவர்க்ள் ஆட்டத்தை நன்றாகக் கவணிப்பார்.
குடும்ப உறவினர்களில் ராதாபாரதி உயரத்தாண்டும் போட்டிகளில் தேசிய விருது பெற்றிருக்கிறார். இவர் திரைப்படத்துறையில் தனக்குப் பிடித்தமான கலைஞர்களாகக் கருதுவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமலஹாஸன் ஆகிய இருவரையும்தான். பொழுது போக்கு என்று சொல்லப்போனால் நோமின்மையை மட்டுமே குறிப்பிருகிறார். இயற்கைக் காட்சிகள் இவருக்கு மிகவும்பிடிக்கும் .
காட்டில் யானைகள் கூட்டமாகச் செல்வதை மிகவும் ரசிப்பார் கடலில்கப்பல் செல்வதை ரசிப்பார். மலைகளைக் கண்டு வியந்து ரசிப்பார். கடல் மற்றும்கடலில் இருந்து வரும் அலைகளைக் காண்பதில் இவருக்குக் கொள்ளை இன்பம். பயணங்கள் மேற்கொள்வதில் அதிக இன்பம் காண்பவர்.
முகவரி : விட்டல் ராமமூர்த்தி,
பழைய எண் 10 புதிய எண் 23,்,
பக்தவத்சலம் தெரு, மேற்கு மாம்பலம்ு,
சென்னை - 600033. .
தொலைபேசி # 91 44 2489 0500
கைப்பேசி # 91 94440 21850
 

Email : violin vittal@hotmail.com
www.violin vittal.com 

More Profiles