மோகன்தாசு கரம்சந்த் காந்தி

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர் பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.இவரது தாய் மொழி குஜராத்தி.தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய்.காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார்.பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்.ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900).

 
  கொள்கைகள்

பகவத் கீதை, சமண சமய கொள்கைகள்,லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் டைப்பிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.1902ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார்.வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணிய வேண்டும் என்பதை இந்திய நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

 
    மரணம்
1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்

மற்றத் தலைவர்கள் பற்றிய தகவல்கள்

   © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved  |  Feedback  |  Contact Us  |  Home