ஜவஹர்லால் நேர

ஜவஹர்லால் நேரு (14 நவம்பர் 1889). நீண்டகாலம் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரியாக சேவை செய்தவர், சேவை புரிந்த காலம் 1947---1964. இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு,காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அகில உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

   சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.

   வீரபாண்டிய கட்டபொம்மன்

ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது.

    கோபால கிருஷ்ண கோகல

கோபால கிருஷ்ண கோகலே ,  (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூகமற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் உருவாக்குனரும் ஆவார். கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்.

   சர்தார் வல்லப்பாய் படேல்

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார்.இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

   அம்பேத்கர

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம் என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். ரூபாயின் பிரச்சினை என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் பெருமை அம்பேத்கரையே சாரும்.தீண்டாமையை ஒழிப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.

   ராணி லட்சுமிபாய்

லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 ஜூன் 17, 1858) வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி.1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு "ஜான்சிராணி ரெஜிமெண்ட்" என்று பெயரிட்டார்.

   சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் _ மார்ச் 2,1949, லக்னோ) அவர்கள் பாரதிய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.

   © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved  |  Feedback  |  Contact Us  |  Home