தேசிய நதி

கங்கை அல்லது கேன்ஜஸ் இந்தியாவின் மிக நீண்ட நதியாகும். இது 2510 கி.மீ தூரத்திற்கு மலைகளின் மேல் ஓடிவருகிறது. இது, பகீரதி நதியாக, இமய மலையில் கங்கோத்திரி எனும் உருகும் பனிப்பாறைகள் நிறைந்த பனிப் பகுதியில் உருவாகிறது. இது பின்னர் அலகானந்தா, யமுனா, சன், கௌதமி, கோசி, காஹரா ஆகிய நதிகளோடு இணைந்து கொள்கிறது. உலகிலேயே வளமான விவசாய நிலத்தையும் நெருக்கமான மக்கள் தொகையையும் கொண்டது, கங்கை நதிப் படுகையே ஆகும்,. இது, ஒரு கோடி சதுரப் பரப்பளவை உள்ளடக்கியது. இதன் மேல் இரண்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஹரித்துவாரில் உள்ளது. மற்றொன்று பராக்காவில் உள்ளது. இந்த ஆற்றில் மட்டுமே வாழும் கங்கை நதி டால்பின் என்னும் நீர்வாழ் உயிரினம் மிகவும் ஆபத்தான விலங்கினமாகும். கங்கையை, இந்துக்கள், இந்நிலஉலகின் மிகவும் புனிதமான ஆறாகப் கருதுகின்றனர்.

   தேசிய விலங்கு

பந்தேரா டைகிரிஸ் என்னும் அறிவியல் பெயரை உடைய பேராற்றல் பெற்ற புலி மேலே பட்டை பட்டையான கோடுகளை உடைய விலங்கு. இதன் மேல் உள்ள மஞ்சள் வண்ண மென்மயிர் தோலில் கருப்புப் பட்டைகள் காணப்படும். அதன் இனிய தோற்றம், வலிமை, விரைந்தோடும் இயல்பு, பேராற்றல் ஆகியவை இந்தியத் தேசிய விலங்கு என்னும் பெருமையைப் பெற்றுத் தந்தன. இதில் எட்டு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இந்திய வகை என்னும் ராயல் பெங்கால் புலி, வடமேற்குப் பகுதியைத் தவிர இந்தியா முழுமையிலும் காணப்படுகிறது. மேலும் அண்டை நாடுகளான நேப்பாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இந்த இனம் விரைவாகக் குறைந்து வருவதால் 'புலிச் செயல்திட்டம்' என்பது 1973 ஏப்ரலில் கொண்டுவரப்பட்டது. இதுவரை 27 புலிக் காப்பகங்கள் இச்செயல்திட்டத்தின் கீழ் 37,761 சதுர மைல் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளன.

   தேசியப்பறவை

மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழில் தோகை என்பது, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.ஒரு நாட்டில் சட்டமுறைப்படி அறிவிக்கப்பட்ட பறவை,அதன் தேசியப்பறவை ஆகும்.

    தேசியமரம்

இந்தியாவின் மிகப் பெரிய மரமான பிகஸ் பெங்காலெனிசிஸ் (Ficus bengalensis) என்னும் அறிவியல் பெயர் பெற்ற ஆல மரமே இந்தியாவின் தேசிய மரமாகும். இதன் கிளைகளிலிருந்து வேர்கள் நிலத்தில் ஊன்றி, மிகப் பெரிய நிலப் பரப்பில்
புதிய மரம் போல வளர்ந்து நிற்கும். அதன் வேர்கள் மேலும் புதிய கிளைகளையும் விழுதுகளையும் உருவாக்கும். இத்தகைய பண்பினாலும் நீண்ட வாழ்நாளினாலும் இம்மரம் அழியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியாவின் புராணங்களிலும் பழங்கதைகளிலும் ஒன்றிணைந்த ஒரு பகுதியாகவும் இது விளங்குகிறது. இந்த ஆல மரம் இன்றும் கிராம வாழ்க்கையின் மையப் புள்ளியாக உள்ளது. கிராமக் கூட்டங்கள் இந்த மரத்தின் நிழலிலேயே நடைபெறுகின்றன.

   தேசியபழம்

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

   தாமரை

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

   அசோகத் தூண்

சாரநாத்தில் மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோகச் சக்சகரவர்த்தி ஓர் உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களும் மற்ற உருவங்களும் அமைந்துள்ளன. கம்பீரமாக நிற்கும் நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்சகரம், ஒரு பக்கம் காளை, மறுபக்கம் குதிரை யின் உருவங்களை கொண்டது அசோக சின்னம். முண்டக உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட "ஸத்யமேவ ஜயதே' பொறிக்கப்பட்டுள்ளது. அசோகரது ஆட்சிக்காலம் பொற்காலமாக கருதப்படுவதால். சுதந்திர இந்தியா அத்தகைய ஆட்சியின் சின்னத்தை தேர்ந்தெடுத்தது. 1950 ஜன., 26ல் மத்திய அரசு இந்திய தேசிய சின்னத்தை அங்கீகரித்தது.

   இந்திய ரூபாயின் குறியீடு

நமது இந்தியாவில் இதுவரை 'Rs .' என்ற குறியீட்டை பயன்படுத்தி வந்தோம். இனி இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.இது நமது தேசிய மொழியான ஹிந்தியில் 'ர' வர்க்கத்தின் குறியீட்டையும், ஆங்கில எழுத்து 'R' யும் பிரதிபலிக்குமாறு உள்ளது. மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளது போல ஒரு படுக்கை கோடு (sleeping line) சேர்க்கப் பட்டுள்ளது. 'படுத்தல்' என்பது குறியீட்டோடு நிற்கட்டும்..இதனை வடிவமைத்தவர், குவஹாத்தி இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT Guwahati), வடிவமைப்புத் துறையுடன் (Department of Design) தொடர்புடைய திரு. D உதய குமார்.

   © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved  |  Feedback  |  Contact Us  |  Home