HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
டேபிள் டென்னிஸ்
 

 

மோகன்:

இன்றைய உலக விளையாட்டுக்களில் பிரசித்தி பெற்றதாக டேபிள் டென்னிஸ் கருதப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நல்ல திடகாத்திர தேக அமைப்பு உள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியில் தற்போது மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை பட்ட வீரர்களில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் கே. மோகன் அவர்கள் பங்குபெறும் விளையாட்டில் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். அப்படிப் அண்மையில் 2010 –ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சிறு நூல் இழையளவில் முதற்பரிசைத் தவறவிட்டு இரண்டாவது பரிசாக வெள்ளிப் பதக்கத்தை வென்று நம் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்.

இவர் 24-03-1990 அன்று சென்னையில் கே. கருணாகரன். மாலா தம்பதியரு­க்கு மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் பெயர் கே. மணிகண்டன் ஆகும். இளைய சகோதரரின் பெயர் கே. மதன் ஆகும். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தனது மூன்றாவது வயதில் திடீரென்று மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்டு தனது இரண்டு கால்களும் முடமாகும் நிலைக்கு ஆளானார். இதனால் இவருடைய பெற்றோரும், இவரும் முதலில் துவண்டு போகும் நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக மனோதைரியத்தை வர வழைத்துக் கொண்டு வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலாவது முன்னேறியாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படிப்படியாக விளையாட்டுத் துறையில் ஈடுபட எண்ணி முதலில் ஓட்டப்பந்தய வீரராக பிரகாசிக்க ஆரம்பித்தார்.

கிண்டர்கார்டன் வகுப்பிலிருந்து 2வது வகுப்பு வரை போரூரில் உள்ள சத்ய லோக் ஊனமுற்ற குழந்தைகள் பள்ளியில் படித்தார். சென்னையிலுள்ள அண்ணா நகரில் அமைந்துள்ள கில்ட் ஆஃப் செர்வீஸ் (Guild of Service)  நடத்தும் ஊனமுற்ற குழந்தைகள் காப்பகமான மாற்றுத் திறனாளிகளுக்கென்று உள்ள ஒரு பள்ளியில் மூன்றாவது வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 6வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரை காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியில் அமைந்திருக்கும் பிரபாவதி ஜெயபிரகாஷ் ஸேவா கேந்திராவில் படித்தார்.

 சென்னையிலுள்ள அண்ணா நகரில் அமைந்திருக்கும் கில்ட் ஆஃப் செர்வீஸ் நடத்தும் ஊனமுற்ற குழந்தைகள் காப்பகமான மாற்றுத் திறனாளிகளுக்கென்று உள்ள ஒரு பள்ளியில் மூன்றாவது வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

பிறகு சென்னை விருகம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி பள்ளியில் 11, 12 வது வகுப்புப் படித்துத் தேறி சென்னை மாநிலக் கல்லூரியில் தற்போது B.Sc Bio – Technology  2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இருபது வயதான மோகனுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் தெரியும். விளையாட்டுத் துறையில் இவர் நுழையக் காரணமாக இருந்தவர் இவரது அன்னையே ஆகும்.

முதன் முதலில் ஒட்டப் பந்தய வீரராக 1995 –ல் தமிழ் நாடு அரசு மாநில அளவில் நடத்திய போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். இதுவரை சுமார் 45 முறை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு போட்டியிலும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாவது பரிசுகள் என அள்ளிக் குவித்திருக்கிறார்.

சென்னை மாநில அளவில் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட கர்நாடக மாநிலம், ஒரிஸ்ஸா மாநிலம் மற்றும் அயல்நாடுகளான இங்கிலாந்து மற்றும் சீனாவுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வந்திருக்கிறார். மத்திய அரசின் விருதுகளும் பதக்கங்களும், கேடயங்களும் நிறைய பெற்றிருக்கிறார்.

மாற்றுத்திறனாளியான மோகன் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி வருவதைப் போல் இசைக்கலைத் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில். மேற்கத்திய இசைக்கருவிகளான டிரம்ஸ், மற்றும் ட்ரம் பெட் ஆகியவற்றை வாசிக்கத் தெரிந்தவர்.

பொழுது போக்காக சமயம் கிடைக்கும் போது மட்டும் தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ரசிப்பது வழக்கம். டேபிள் டென்னிஸ் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் மோகன் ஒட்டப் பந்தய வீரராக விளங்கினார். தனக்குக் குருவாக அமைந்த விஜயசாரதியும் ஒரு மாற்றுத் திறனாளிதான். அவர் ஒட்டப்பந்தயத்தில் திறமை பெற்றவராக விளங்கியதால் மோகன் தனது குருவுக்குப் போட்டியாக இருக்க விரும்பவில்லை. ஆகவே டேபிள் டென்னிஸ் விளையாடுவதைத் தேர்ந்தெடுத்தாகக் கூறினார்.

கடந்த 2010ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற சீனாவில் ஆடியபோதுதான் பங்கு வகித்ததில் கிடைத்த புகைப்படங்களை குறுந்தகடு வடிவில் வைத்துள்ளார். தினமும் மாலை 3 மணிக்கு மேல் விளையாட்டுப் பயிற்சியை மேற் கொள்ளும் மோகன் தமிழ்நாடு அரசு துணை முதல்வர் திரு. ஸ்டாலின், மத்திய அரசு அமைச்சர் திரு டி. நெப்போலியன் மற்றும் ராஜயசபை, உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் பரிசுகள் வாங்கியதைப் பெருமையாகக் கருதுகிறார்.

தன்னுடைய கனவெல்லாம் இந்தியாவுக்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதேயாகும். விளையாட்டுத் துறைக்கு வந்திரா விட்டால் தாம் இசைத்துறையைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்றும் மோகன் கூறினார்.

விளையாட்டுத்துறையைத்தான் விரும்பி ஏற்றுக் கொண்ட மோகனுக்கு மருத்துவக் கல்வி M.B.B.S படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் தன் உடல்நிலை கருதி அதைத் தொடராமல் போகும் நிலை வந்துவிடுமோ என்று உணர்ந்து M.B.B.S. படிப்பைத் தவற விட்டார்.

பள்ளியில் தான் படிக்கும் போது பிற்காலத்தில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிவித்தார். தாம் பழகிய பழைய நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் சந்தோஷ மிகுதியாய் இருப்பார். தாய் தந்தையர் தன்னுடன் பாசத்துக்குரிய உறவினர் என்றார். வெளிநாட்டில் தான் விளையாடிய போது ஏற்பட்ட அனுபவங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்றார்.

சமூகத்திற்குத் தன்னால் இயன்ற அளவு உதவி செய்ய நினைக்கும் இவர் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளை வாழ்க்கையின் உச்ச நிலைக்குக் கொண்டு போகும் அளவிற்குத்தான் பாடுபடப் போவதாகக் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குடும்பத்திலுள்ள அனைவரும் மிகவும் இனிமையானவர்கள் என்றார்.

எதிர்காலத்தில் தம் அனுபவங்களைப் புத்தக வடிவில் கொண்டு வரும் எண்ணம் தனக்கிருப்பதாகக் கருதினார். தனக்கு நிறைய ரசிகர்கள். இருப்பதாகவும் அவர்கள் தன்னை ஊக்குவிப்பது இன்னும் நிறைய விளையாட்டுத் துறையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற துடிப்புடன் கூறுகிறார். 2006 –ல் தான் நான்காவது படிக்கும் போது. சன் தொலைக் காட்சியில் கடவுளின் கையெழுத்து என்ற தொடரில் நடித்தார் அத்தொடருக்கு மாநிலத்திலேயே முதல் விருது கிடைத்ததாகக் கூறினார்.

அவ்வப்போது தன் மனதில் உதிப்பவர் தன் குரு விஜயசாரதியே என்கிறார் அவ்வப்போது தன் மனதில் தோன்றும் சம்பவமாக தன் கால்கள் பாதிக்கப்பட்ட விஷயம் என்றார்.

உலக விளையாட்டரங்கில் 2010ல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான் ஆடிய டேபிள் டென்னிஸ் போட்டியில் கடினமாகப் போராடித் தங்கப்பதக்கம் நிச்சயம் வெல்வோம் என்று விளையாடியதில்தான் 2வது பரிசான வெள்ளிப்பதக்கத்தை வாங்கியது தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாகக் கருதுகிறார். வெளிநாடுகளான இங்கிலாந்து, சீனாவில் விளையாடியது தன் வாழ்வின் மறக்க முடியாத சம்பவமாகும் என்று தெரிவித்தார்.

வாழ்க்கையில் இவரை மிகவும் ஊக்கப்படுத்திய மாயா என்பவரைக் குறிப்பிட்டார். இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் செல்வீஸ் அமைப்பின் செயலாளர் ஆவார்.

வருத்தமடையும் நிகழ்வாக இவர் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் தான் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் வாங்காத தருணங்களே என்றார் தன் வாழ்வின் மறக்க முடியாத நாளாக 24-03-1990 தான் பிறந்த தேதியை குறிப்பிட்டார்.

இலண்டனில் டேபின் டென்னிஸ் போட்டியில் விளையாடிய நாள் தனக்கு மறக்க முடியாத நாளாகும் என்றார். மே மாதம் தனக்கு மிகவும் பிடித்த நாளாகும். ஏனென்றால் மே மாதம் முதல் தேதி திரைப்பட நடிகர் அஜீத் அவர்களின் பிறந்த நாளாகும் என்றார்.அவரின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்.

தனக்கு பிடித்த இடம் சென்னை என்றும் பிடித்த வேளை மாலை நேரம் என்றும் அமெரிக்க நாடு தனக்குப் பிடித்த நாடாகும் என்றார்.

தமது அன்னை கொடுத்த ஆதரவில் தனது முதலாவது வகுப்பில் இருகால்களைத் தாங்கும் சாதனத்தைக் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் முதன் முதலாக கலந்து கொண்டு, பிறகு எட்டாவது வயதில்

ஒருமுறை மோகன் தான் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக திரைப்பட நடிகர் அஜீத் நடித்த படமான “தீனா“ வின் படப்பிடிப்பைக் காணச் சென்றிருந்தார். அஜீத்தின் தீவிர ரசிகரான மோகன் தன்னை மறந்து விளையாடப் போவதையே மறந்து படப்பிடிப்பைக் காண்பதில் லயித்த தருணம் என்ற சுவையான செய்தியைத் தெரிவித்தார்.

2006 –ல் தமிழ்நாடு அரசு, காவல்துறை ஆணையாளர் திரு நடராஜ் I.P.S அவர்களின் திருக்கரங்களால் மோகன் முதன் முதலாக பரிசு பரிசுகளை பெற்றார். மேலும் தொடர்ந்து பெற வேண்டும் என்ற முனைப்பில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தீவிரமாய் இருந்து வருகிறார்.

2006ல்தான் விளையாட்டின் மூலம் பெற்ற முதல் சன்னமானத் தொகை ரூ.4000ஐத் தன் தாயாரிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார்.

தம் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வாக 2007 –ல் தேசிய விளையாட்டு போட்டிகளில் அழைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். தாம் எதிர்பார்த்தபடியே 2010ல் சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றது.ஒலிம்பிக் போட்டியில் பரிசு வென்றது தனக்கு மிகவும் அளவிலாத சந்தோஷத்தைக் கொடுத்தது என்கிறார்.

உலக விளையாட்டு போட்டிகளில் சீனவுடன் எதிர்த்து விளையாடுவதையே எப்பொழுதும் விரும்புகிறார்.

இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் விளையாடியதில் இவர் மிகவும் கடினமாகப் போராட வேண்டியிருந்தது என்கிறார்.

தனக்குப் பிடித்த விளையாட்டு வீரராக கிரிக்கெட் உலகில் சாதனை புரிந்து வரும் சச்சின் டெண்டுல்கரைப் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தனக்குப் பிடித்தமான விளையாட்டு வீரராக டேபிள் டென்னிஸில் புகழ் பெற்ற தினேஷைக் குறிப்பிட்டார். தினேஷ் புதுச்சேரி மாநிலத்திற்காக விளையாடி வருபவர். இதுவரை அவர் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்திருக்கிறார்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்காக இவர் விசேஷ கவனம் எதுவும் செலுத்துவதில்லை என்கிறார்.

இதுவரை தான் விளையாடிய விளையாட்டுக்களில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் நன்பள்ளியில் ஆடியதையும் பேண்டு வாத்தியத்தில் டிரம்ப்பெட்(Trumpet) வாத்தியத்தை வாசித்தது தன் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும் என்றார்.

சமீபத்தில் ஏப்ரல் 2011ல் இவர் அயல்நாடான ஜோர்டான் சென்று டேபிள் டென்னிஸ் ஒற்றையர் ஆட்டத்தில் முதல்பரிசாக ஒரு தங்கப்பதக்கத்தையும், இரட்டையர் ஆட்டத்தில்  மற்றுமொரு முதல் பரிசான தங்கப் பதக்கத்தையும் வாகைசூடி வென்று நம் தமிழகத்திற்கும் இந்திய மண்ணுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார்.

மோகன்

(டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்)

80/63, அண்ணாதெரு, சின்மயா நகர்,

கோயம்பேடு, சென்னை – 600 092.

கைப்பேசி – 9176467565

Back