HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

I. "மேளகர்த்தா ராகங்களில்..."

தென்னிந்திய இசை மரபில் ராகங்கள் 'மேளகர்த்தா ராகங்கள்' என்றும் 'ஜன்ய ராகங்கள்' என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.'மேளகர்த்தா ராகங்களை''தாய்'ராகங்கள் என்றும் 'ஜன்ய - ராகங்களை'அந்த 'தாய்' ராகங்களிலிருந்து பிறந்த'சேய்'ராகங்கள் என்றும் அழைக்கலாம்.

'சுத்த விக்ருதி ஸ்வரங்களின்'அடிப்படையில்
'மேளகர்த்தா'ராகங்களை வகுக்கலாம் என்று கண்டு பிடித்தவர் 'ராமாமாத்தியர்' என்பவர் தான். அவர் கி.பி.1550ல் சமஸ்கிருதத்தில் எழுதிய'ஸ்வரமேளகலாநிதி'என்ற நூலில் அந்த இலக்கணத்தை விவரித்துள்ளார்.

அவரது ஆய்வைப் பின்பற்றித் தான் பின்னால் வந்த 'வேங்கடமகி'என்பவர் எழுபத்திரண்டு'மேளகர்த்தா'ராகங்களைக் கணக்கிட்டார் எனப்படுகிறது. கி.பி. 1635ல் வேங்கடமகி எழுதிய 'சதுர்தண்டிப்ரகாசிகை' என்ற தமது நூலில்,ஏழு ஸ்வரங்களையும், பன்னிரண்டு ஸ்வரஸ்தானங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களையும் வகைப்படுத்தினார்.ஆனால், அவர் அவற்றிற்கான பிரத்யேகத் தகுதிகளையும், பெயர்களையும் தக்க முறையில் அமைக்கவில்லை.

அக்குறையை பதினெட்டாம் நூற்றாண்டில் கோவிந்தாச்சாரி என்பவர் எழுதிய 'சங்கிரக சூடாமணி'என்ற சமஸ்கிருத நூல் நிவர்த்தி செய்தது. இந்நூலில் தான் எழுபத்திரண்டு 'மேளகர்த்தா'ராகங்களுக்கும்'ஆரோஹண''அவரோஹண'க் குறிப்புகளுடன்,'கடபயாதி சங்கியை'என்ற முறையில் பெயர்களும் இடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் தான் இன்றளவும் பின்பற்றப்படும் 'கனகாங்கி' ராகத்தில் தொடங்கி, 'ரசிகப்ரியா'ராகத்தில் முடிவடையும் பட்டியலாகும். இந்த 72 ராகங்களில்'சுத்த மத்யம'ஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்ட ராகங்களின் எண்ணிக்கை: 36, 'பிரதி மத்யம'ஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்ட ராகங்களின் எண்ணிக்கை:36.

எப்படி அத்தனை 'மேளகர்த்தா'ராகங்களிலும் கர்நாடகக் கீர்த்தனைகள் இயற்றப்படவில்லையோ,அப்படியே எல்லா 'மேளகர்த்தா'ராகங்களின் அடிப்படையிலும் திரைப்படப் பாடல்களும் இசையமைக்கப்படவில்லை.(ஏராளமான 'ஜன்ய'ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றப்பட்டிருப்பது போல, திரைப்படப் பாடல்களும் இசையமைக்கப் பட்டுள்ளன). 'கல்யாணி''கரஹரப்ரியா''சிந்துபைரவி''சாருகேசி''ஆபேரி''மோஹனம்'போன்ற சில ராகங்களில் மிகப்பல திரைப்பாடல்கள் இசையமைக்கப் பட்டுள்ளன.

இனி, 'மேளகர்த்தா'ராகங்களில் இயற்றப்பட்டுள்ள கீர்த்தனைகளையும் அவற்றிற்கிணையான திரைப்படப்பாடல்களையும் தெரிந்துகொள்வோம்.

1. தோடி

இது எட்டாவது மேளகர்த்தா ராகமாகும். (சுத்த 'மத்யமம்')

ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் சிறு வேறுபாடுகளுடன் 'ஹனுமத்தோடி' என்றும் 'சுத்ததோடி'என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் "பைரவி தாட்"என்றழைக்கப்படும்.‘ஹனுமத்தோடி'யில்'சுத்த காந்தார'ஸ்வரம் இல்லை. 'சுத்த தோடி'யில் 'பஞ்சம'ஸ்வரம் இல்லை.

ஹனுமத் தோடி:
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்  : ஸ் நி த ப ம க ரி ஸ

தோடி:
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்  : ஸ் நி த ப ம க ரி ஸ

சுத்த தோடி:
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம்  : ஸ் நி த ப ம க ரி ஸ

இது பெண்பால் ராகமென்றும் இரவில் பாடப்படும் ராகமென்றும் குறிப்பிடப்படுகிறது. இது வட இந்தியாவிலிருந்து வந்த 'உபாங்க' வகை ராகமாகும். இதுநாடக இசைக்கும். நாட்டிய இசைக்கும் உரிய ராகமாகும். 'நாட்டிய நிகழ்ச்சிகளில் முதலில் இடம்பெறும்...தோடய-மங்களம்... இந்த ராகத்தில் தான் அமையும்.

'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்:
 

பாடல் இயற்றியவர்  பாடல் வகை
தப்பி ப்ரதுரக்கி  தியாகையர் கீர்த்தனை
'வாரிதி' தியாகையர் கீர்த்தனை
'கோடி நதுலு'  தியாகையர் கீர்த்தனை
நீவன்டி தைவமு  தியாகையர் கீர்த்தனை
பாலயமாம் முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
'ராமச்சந்திராய'   முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
'நன்னு ப்ரோச்சுடகு' ஸ்யாமா சாஸ்திரி   கீர்த்தனை
'ஏராநாபை' பட்டணம்  சுப்ரமணிய ஐயர் வர்ணம்
'ராஜகோபால'  பாபநாசம் சிவன்  கீர்த்தனை
'ஆனந்தக்கடல்' கோபாலகிருஷ்ண பாரதியார்"   கீர்த்தனை
'ஜடாதர'  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்   கீர்த்தனை

'தோடி' ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 

1. பாடல் : நந்த நந்தன வந்தித முனிஜன
    படம்   : குலேசா(1936)
    பாடியவர் : பாபநாசம் சிவன், S.D. சுப்புலட்சுமி
    இசையமைப்பாளர் : பாபநாசம் சிவன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2.  பாடல் : சிறைச்சாலை என்ன செய்யும்
    படம் : மணிமேகலை(1940)
    பாடியவர் : K.B.சுந்தராம்பாள்
    இசையமைப்பாளர் : பாபநாசம் சிவன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
3. பாடல் : எல்லாம் சிவன் செயல்
     படம் : சிவகவி(1943)
     பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
4. பாடல் : என்னைப்போல் பெண்ணல்லவோ
    படம் : வணங்கா முடி(1957)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
5. பாடல் : தோடியில் பாடுகின்றேன் ஓடி நீ வருவாயம்மா
     படம் : தோடி ராகம்(1983)
    பாடியவர் : மதுரை T.N.சேஷகோபாலன்
    இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
 
6. பாடல் : கங்கைக்கரை மன்னனடி
    படம் : வருஷம்-16 (1989)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளையராஜா
 
Index >> Next