HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

2. “மாயா மாளவ கௌள”

இது பதினைந்தாவது ‘மேளகர்த்தா’ராகமாகும்.(சுத்த மத்யமம்).

இது ஆண்பால் ராகமென்றும்,அதிகாலையில் பாட வேண்டுமென்றும் குறிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கும் எவரும் முதல் முதலில் இந்த ராகத்தின் ஸ்வரங்ளைப் பாடியே பயிற்சி செய்கிறார்கள்.இந்துஸ்தானி இசை மரபில் இந்த ராகம் ‘பைரவ்தாட்’என்றழைக்கப்படும்.

இந்த ராகத்தில் வரும் ஸ்வரங்கள்

ஷட்ஜமம்,சுத்த ரிஷபம்,அந்தரகாந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சுத்த வைதம்,காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம்     :  ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் :  ஸ் நி த ப ம க ரி ஸ

‘மாயா மாளவ கௌள’ ராகத்தில்அமைந்த பாடல்கள்:

பாடல்  இயற்றியவர் பாடல் வகை
தேவி ஸ்ரீ துளசம்மா தியாகையர்  கீர்த்தனை
துளசி தளமுசே  தியாகையர் கீர்த்தனை
விதுலகு  தியாகையர்  கீர்த்தனை
மேருசமான தியாகையர் கீர்த்தனை
ஸ்ரீ நாதாதி முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
ஆடிக்கொண்டார் முத்துத் தாண்டவர் கீர்த்தனை

'மாயா மாளவ கௌள’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : சிலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
    படம் : நந்தனார்(1942)
    பாடியவர் : M.M.தண்டபாணி தேசிகர்
    இசையமைப்பாளர் : பாபநாசம் சிவன் M.D.பார்த்தசாரதி
    இயற்றியவர் : கோபாலகிருஷ்ண பாரதியார்
 
2. பாடல் : கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
    படம் : ஆலயமணி(1962)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : சொல்லடி அபிராமி (இப்பாடலில்‘சாவேரி’என்ற ராகத்தின் சாயலுமுண்டு)
    படம் : ஆதிபராசக்தி(1971)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
4. பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
    படம் : முள்ளும் மலரும்(1978)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
5. பாடல் : பூங்கதவே தாழ் திறவாய்
    படம் : நிழல்கள்(1980)
    பாடியவர் : தீபன் சக்ரவர்த்தி,உமாரமணன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
 
6. பாடல் : மதுரை மருக்கொழுந்து வாசம்
    படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்(1987)
    பாடியவர் : மனோ
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : கங்கை அமரன்
 
7. பாடல் : சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம்
    படம் : ராகபந்தங்கள்(1982)
    பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம்,வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
    இயற்றியவர் : நெல்லை அருள்மணி

 
<< Previous Index >> Next