HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

3. “சக்ரவாகம்

 இது 16ஆவது ‘மேளகர்த்தா ராகமாகும்.(சுத்த மத்யமம்)

‘சகோரப் பறவை’யின் மறு பெயர்தான் ‘சக்ரவாகம்’அது இரவு நேரங்களில் இணையைப் பிரிய நேர்ந்தால் சோகத்துடன் கூவுமாம். ஆகவே இது சோகத்தைக் குறிக்கும் ராகமாகும்.

ஆண்பால் ராகமான ‘சக்ர வாகம்’விடியும் வேளையில் பாடப்படும்.

இதன் ஸ்வரங்கள் :

ஷட்ஜமம்,சுத்த ரிஷபம்,அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம் சதுஸ்ருதிதைவதம்,கைசிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘சக்ரவாக’ ராகத்தில் இயற்றப்பட்டுள்ள கர்நாடக இசைப் பாடல்கள்
 
பாடல் இயற்றியவர் பாடல் வகை
பாகும்மா புரந்தரதாசர் கீர்த்தனை
‘எடுலோ புரோத்துவோ’  தியாகையர் கீர்த்தனை
‘கஜநாயகம்’ முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
“அறிவுடையோர்” கோபாலகிருஷ்ண பாரதி  கீர்த்தனை
தியாகராஜா  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கீர்த்தனை
ஆடியபாதா  முத்துத் தாண்டவர் கீர்த்தனை

‘சக்ரவாக’ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : தேமாங்கனி-கடுவன்கொள....
    படம் : “பட்டினத்தார்”(1935)
    பாடியவர் : M.M.தண்டபாணி தேசிகர்
    இசையமைப்பாளர் : M.M.தண்டபாணி தேசிகர்
    இயற்றியவர் : தேவாரப் பாடல்
 
2. பாடல் : “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடாகர்ணா”
    படம் : “கர்ணன்”(1964)*
    பாடியவர் : சீர்காழி கோவிந்த ராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு-ஒன்று மனசாட்சி...”
    படம் : “தியாகம்”(1978)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : கண்ணதாசன்

*இந்தப் பாடல் ‘சக்ரவாகத்திற்கு இணையான ஹிந்துஸ்தானி “ஆகிர்பைரவ்” என்ற ராகத்தில் அமைந்ததாகவும் சொல்லலாம்.

 
<< Previous Index >> Next