HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

5. “கீரவாணி”

 ‘கீர்வாணி’ என்றும் அழைக்கப்படும் இது 21ஆவது ‘மேளகர்த்தா ராகமாகும். ‘கீர்’என்றால் ‘வாக்கு’என்றும்,‘வாணி’என்றால்‘கலைமகள்’என்றும் பொருள்படுவதால்,இந்த ராகத்தை நம் வாக்கிலே அமர்ந்து ஆட்சி செய்ய கலை மகளை அழைக்கும் ராகம் என்று கொள்ளலாம்.பெண்பால் ராகமான இதையும் காலை வேளையில் பாடலாம்.

‘சக்ரவாகத்’தின் ‘பூர்வாங்கம்’ ‘கீரவாணி’யின் ‘உத்தராங்கம்’ஆகவும் ‘சக்ரவாகத்’தின் ‘உத்தராங்கம்’‘கீரவாணி’யின்‘பூர்வாங்கம்’ஆகவும் ஒலிக்கும்.

இதன் ஸ்வரங்கள்

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,‘பஞ்சமம்’,‘சுத்த தைவதம்,காகலி நிஷாதம்’
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசைப்பாடல்கள்
 
பாடல் இயற்றியவர் பாடல் வகை
கலிகியுண்டே  தியாகையர் கீர்த்தனை
நமோ நமஸ்துதே முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
இன்னமும் சந்தேகம்  கோபாலகிருஷ்ண பாரதியார்  கீர்த்தனை
நிஜமுக ராம பட்டணம் சுப்ரமணிய ஐயர் கீர்த்தனை
‘மாயாவிடை’  முத்துத்தாண்டவர்  கீர்த்தனை

‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : ஓரிடத்தனிலே நிலை இல்லாதொரு பொருளே...
    படம் : வேலைக்காரி(1949)
    பாடியவர் : P.லீலா,K.V.ஜானகி
    இசையமைப்பாளர் : C.R.சுப்புராமன்
    இயற்றியவர் : உடுமலை நாராயணகவி
 
2. பாடல் : நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
    படம் : ரம்பையின் காதல்(1956)
    பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
    இசையமைப்பாளர் : T.R.பாப்பா
    இயற்றியவர் : மருதகாசி
 
3. பாடல் : ஓங்காரமாய் விளங்கும் நாதம்
    படம் : வணங்காமுடி(1957)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
4. பாடல் : காற்றில் என்றன் ஜீவன்
    படம் : ஜானி(1980)
    பாடியவர் : S.ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
 
5. பாடல் : மண்ணில் இந்தக் காதலின்றி யாரும்
    படம் : கேளடி கண்மணி(1990)
    பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : பாவலர் வரதராஜன்
 
6. பாடல் : போவோமா ஊர் கோலம்
    படம் : சின்னத்தம்பி(1991)
    பாடியவர் : சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    இயற்றியவர் : வாலி'
       

<< Previous Index >> Next