HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

6. “கரஹரப்ரியா”

 இது 22வது ‘மேளகர்த்தா’ராகமாகும்.இந்த ராகம் முன்னதாக தமிழிசை மரபில்‘செம்பாலைப் பண்’என்று
அறியப்பட்டது.இந்தஸ்தானி இசை மரபில்‘இந்துஸ்தானி காஃபி தாட்’என்றழைக்கப்படும்

இதன் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கைஷிகி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘கரஹரப்ரியா’ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
சக்கனி ராஜ மார்க்கமு தியாகையர் கீர்த்தனை
சாந்தமுலேகா சவுக்கியமுலேது தியாகையர் கீர்த்தனை
சாந்தம் இல்லார்க்கு என்றும் சௌக்கியமும் ஏது  பாபநாசம் சிவன்  கீர்த்தனை
இன்னமும் பாராமுகம் ஏனைய்யா பாபநாசம் சிவன் கீர்த்தனை

ஏராளமான திரைப்படப் பாடல்கள்‘கரஹரப்ரியா’ ராகத்தில் மெட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானவை மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன.

‘கரஹரப்ரியா’ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்
 
1. பாடல் : ‘நடையலங்காரம் கண்டேன்....’
    படம் : ‘குபேர குசேலா’(1943)
    பாடியவர் : P.U.சின்னப்பா
    இசையமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன’
    படம் : ‘சகுந்தலை’(1940)
    பாடியவர் : M.S.சுப்புலட்சுமி
    இசையமைப்பாளர் : துறையூர் ராஜ கோபாலசர்மா
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
3. பாடல் : ‘அருள் தாரும் தேவமாதாவே....’
    படம் : ‘ஞான சவுந்தரி’(1948)
    பாடியவர் : ஜிக்கி,P.A.பெரியநாயகி
    இசையமைப்பாளர் : S.V.வெங்கட்ராமன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
4. பாடல் : ‘அறியாப் பருவமடா’
    படம் : ‘மிஸ்ஸியம்மா’(1955)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : S.ராஜேஸ்வரராவ்
    இயற்றியவர் : தஞ்சை ராமையாதாஸ்
 
5. பாடல் : ‘மாதவிப்பெண் மயிலாள் தோகை விரித்தாள்....’
    படம் : ‘இருமலர்கள்’(1967)
    பாடியவர் : T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : வாலி
 
6. பாடல் : ‘இசையாய்த் தமிழாய்’
    படம் : ‘அகத்தியர்’(1972)
    பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
    இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
 
7. பாடல் : என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே...
    படம் : இரும்புத்திரை(1960)
    பாடியவர் : (ராதா)ஜெயலட்சுமி
    இசையமைப்பாளர் : S.V.வெங்கட்ராமன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
8. பாடல் : மகாராஜன் உலகை ஆளுவான்
    படம் : கர்ணன்(1964)
    பாடியவர் : P.சுசீலா,T.M.சவுந்தரராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
9. பாடல் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு,மாமனுக்கோ காமன் மனசு
    படம் : நெற்றிக்கண்(1981)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : இளைய ராஜா
       

<< Previous Index >> Next