HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

7. “கௌரி மனோகரி”

 இது 23ஆவது மேளகர்த்தா ராகமாகும்.பெண்பால் ராகமான இது மிகவும் கம்பீரமானது.கௌரியாகிய பார்வதியின் மனதில் சென்று தங்குவது அல்லது கவர்ந்தது என்று பொருள் கொள்ளலாம்.முன்னிரவு நேரத்தில் பாடத் தகுந்த ராகமிது.

இந்த ராகத்திற்கான ஸ்வரங்கள்

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம்,சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,காகலி நிஷாதம்.
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

‘கௌரி மனோகரி’ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள்:

பாடல்

இயற்றியவர்  பாடல் வகை
கருட கமனவாசுதேவ தியாகையர் கீர்த்தனை
குருலேக  தியாகையர் கீர்த்தனை
‘பராசக்தி’ முத்துச் சாமி தீட்சிதர்  கீர்த்தனை
‘கௌமாரி’  முத்துச் சாமி தீட்சிதர் கீர்த்தனை
‘எப்போதொலையும்’ கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை
‘என்று சென்று’  முத்துத்தாண்டவர் கீர்த்தனை

‘கௌரி மனோகரி’ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1. பாடல் : ‘பாட்டும் நானே பாடலும் நானே,பாடும் உன்னை நான் பாட வைப்பேனே’
    படம் : திருவிளையாடல்(1965)
    பாடியவர் : T.M.சௌந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
2. பாடல் : கௌரி மனோகரியைக் கண்டேன்
    படம் : ‘மழலைப் பட்டாளம்’(1980)
    பாடியவர் : வாணி ஜெயராம்
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
3. பாடல் : மலரே குறிஞ்சி மலரே
    படம் : டாக்டர் சிவா(1975)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்,S.ஜானகி
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
<< Previous Index >> Next