HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

9.“ஹரிகாம்போதி”

  (இது ‘ஹரிகாம்போஜி’என்றும் அழைக்கப்படும்)இது 28வது‘மேளகர்த்தா’ராகம் ஆகும்.‘காம்போதி’யும்
‘யதுகுலகாம்போதி’யும் இதன் சேய் ராகங்கள்!மகாவிஷ்ணு சிவனைத் துதித்து பாடியபோது இது ‘ஹரிகாம்போதி’என்றும்,‘காம்போஜநாட்டு’யாதவ குலத்தவர்கள் பாடிய போது இது ‘யதுகுலகாம்போதி’என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழிசை மரபில்(இன்றைய)‘யதுகுல காம்போதி’ அன்று‘செவ்வழிப்பண்’என்றும்,இன்றைய‘ஹரிகாம் போதியை’அன்று‘திருத்தாண்டகப் பண்’என்றும் அழைத்தனர்.(செம்பாலைப் பண் என்று கருதுவோருமுண்டு)
‘காம்போதி’அன்று ‘தக்கேசிப் பண்‘எனப்பட்டது.

இந்த மூன்று ராகங்களுமே அந்தி மயங்கும் மாலை நேரத்தில் பாடக்கூடிய ஆண்பால் ராகங்களாகும்.

‘ஹரிகாம்போதி’கருணை உணர்வையும் காம்போதி கம்பீரம்,வீரம் ஆகிய உணர்வுகளையும்,யதுகுலகாம்போதி அன்புணர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுபவை.

சிவபெருமானை,இராவணன்‘காம்போதி’ராகத்தில் பாடி வணங்கியதாகக் கூறப்படுகிறது. இந்துஸ்தானி இசை மரபில் இது ‘கமாஜ்’என்றழைக்கப்படும்.

ஹரிகாம்போதி
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

காம்போதி

ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ நி ஸ

யதுகுல காம்போதி

ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

இந்த ராகங்களில் அமைந்த கர்நாடகப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
கிருஷ்ணமூர்த்தி  புரந்தரதாசர்  கீர்த்தனை
எவரிமாட்ட தியாகையர் கீர்த்தனை
ஏலரா,, தியாகையர் கீர்த்தனை
ஸ்ரீ சுப்ரமண்ய  முத்துத் சாமி தீட்சிதர் கீர்த்தனை
கருணை பாரம்மா கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை
குழலூதி(காம்போதி) ஊத்துக்காடு வெங்கடசுப்பையா கீர்த்தனை
காணாமல்  முத்துத்தாண்டவர்  கீர்த்தனை


இந்த ராகங்களில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1. பாடல் : என்னுடல் தனில் ஈ மொய்த்த போது...(யதுகுலகாம்போதி)
    படம் : ‘ஹரிதாஸ்’(1944)
    பாடியவர் : M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
 
2. பாடல் : மாலைநிலா வரவேண்டும்(ஹரிகாம்போதி)
    படம் : தாய் உள்ளம்(1952)
    பாடியவர் : T.A.மோதி,பாலசரஸ்வதி
    இசையமைப்பாளர் : V.நாகையா,A.ராமராவ்
    இயற்றியவர் : சுரபி
 
3. பாடல் : தமிழ் மாலைதனைச் சூடுவாள்(காம்போதி)
    படம் : அம்பிகாபதி(1957)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : G.ராமநாதன்
    இயற்றியவர் : K.D.சந்தானம்
 
4. பாடல் : அமைதியான நதியினிலே ஓடும்... ஓடம்(ஹரிகாம்போதி)
    படம் : ஆண்டவன் கட்டளை(1964)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
5. பாடல் : மாப்பிள்ளை காதலித்தான் கையைப் பிடிச்சான்(ஹரிகாம்போதி)
    படம் : பணம் படைத்தவன்(1965)
    பாடியவர் : P.சுசீலா
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    இயற்றியவர் : வாலி
 
6. பாடல் : ஒரே பாடல் உன்னை அழைக்கும் (ஹரிகாம்போதி)
    படம் : எங்கிருந்தோ வந்தாள்(1970)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : M.S.விஸ்வநாதன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
7. பாடல் : பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்(ஹரிகாம்போதி)
    படம் : வருஷம்-16(1989)
    பாடியவர் : K.J.யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளைய ராஜா
 
8. பாடல் : கல்வியா செல்வமா வீரமா(காம்போதி)
    படம் : சரஸ்வதி சபதம்(1966)
    பாடியவர் : T.M.சவுந்திர ராஜன்
    இசையமைப்பாளர் : K.V.மகாதேவன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
 
<< Previous Index >> Next