HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |     Gallery     |     Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        

ராகங்களும் திரைப்படப் பாடல்களும்

10. “சங்கராபரணம்”

29ஆவது ‘மேகர்த்தா’ ராகம் : ‘தீர சங்கராபரணம்’ அதன் சேய் ராகம் : ‘சங்கராபரணம்!’

சங்கரனாகிய சிவபெருமான் அணியும் ஆபரணம்
நாகம். ‘தீர சங்கராபரணம்’ என்றால் ‘அஞ்சாத நாகம்’ என்று பொருள்படும்.

தமிழிசை மரபில் இதை‘பழம்பஞ்சுரம்’என்று குறிப்பிடுவர்.இந்துஸ்தானி இசை மரபில் இது ‘பிலாவல்’ என்றழைக்கப்படுகிறது.

“வீரத்தைப் போற்றும் இந்த ஆண்பால் ராகம் மாலையில் செவ்வானம் ஒரும் வேளையில் பாட உகந்தது.

சங்கராபரணம்
 
ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி தா ப ம க ரி ஸ

தீரசங்கராபரணம்

ஆரோஹணம்     : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி தா ப ம க ரி ஸ

இந்த ராகங்களில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல்  இயற்றியவர்  பாடல் வகை
எந்துகுபெத்தல தியாகையர் கீர்த்தனை
ஏமிநேரமு தியாகையர்  கீர்த்தனை
ஈவருகு தியாகையர் கீர்த்தனை
புத்திராது தியாகையர் கீர்த்தனை
சுந்தரேஸ்வராய முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
ஸ்ரீகமலாம்பிகாய   முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
அட்சயலிங்கவிபோ முத்துசாமி தீட்சிதர்  கீர்த்தனை
ஆடியபாதா கோபாலகிருஷ்ண பாரதி கீர்த்தனை
சரணாகதி கோபாலகிருஷ்ண பாரதி கீர்த்தனை
சாமி நின்னே வீணை குப்பையர் வர்ணம்
சத்தியம் பரம் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை
கண்களும் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்  கீர்த்தனை
ஆரார் ஆசைப்படார் முத்துத் தாண்டவர் கீர்த்தனை

இந்த ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

1942ல் வெளியான ‘கண்ணகி’ என்ற படத்தில்... சந்திரோதயம் இதிலே....என்ற பாடலை உடுமலை நாராயணகவி எழுத S.V.வெங்கட்ராமன் இசையமைக்க, P.U. சின்னப்பா பாடியிருந்தார்.

1982ல் வெளியான ‘தூரல் நின்னுபோச்சு’என்ற படத்தில்...’ஏரிக்கரைப் பூங்காற்றே’...என்ற பாடலை சிதம்பரநாதன் எழுத இளையராஜா இசையமைக்க K.J.யேசுதாஸ் பாடியிருந்தார்.

1954ல் வெளியான ‘தூக்குத் தூக்கி’ என்ற படத்தில் இடுமலை நாராயணகவி இயற்றி, G. ராமநாதன் இசையமைப்பில் T.M.சவுந்தரராஜன், P.லீலா, A.P.கோமளா இணைந்து பாடிய...‘குரங்கிலிருந்த பிறந்தவன் மனிதன்’எனற் பாடலும் ‘சங்கராபரணம் ராகம் தான்!

 
<< Previous Index >> Next